Home /News /lifestyle /

இந்த ஒரு பொடியை அரைச்சு வச்சுக்கோங்க... உடல் எடை சீக்கிரமே குறைச்சிடுவீங்க...

இந்த ஒரு பொடியை அரைச்சு வச்சுக்கோங்க... உடல் எடை சீக்கிரமே குறைச்சிடுவீங்க...

உடல் எடை இழப்பிற்கு உதவும் ஆயுர்வேத பவுடர்

உடல் எடை இழப்பிற்கு உதவும் ஆயுர்வேத பவுடர்

இன்றைக்கு மக்களிடையே மாறிவரும் உணவு பழக்கவழக்கங்கள், உடல் உழைப்பு இல்லாத வேலை, நொறுக்கு தீனிகள், உட்கார்ந்த இடத்திலேயே பணியாற்றுவது போன்ற பல காரணங்களால் சட்டென்று உடல் எடை அதிகரிக்கிறது. இதோடு நின்றுவிடமால் உடல் எடை அதிகரிப்பால் பல்வேறு உடல் நலப்பிரச்சனைகளையும் மக்கள் சந்திக்க நேரிடுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
சீரகம், சோம்பு, பெருங்காயம் போன்ற சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மசாலா பொருள்களை கொண்டு தயாரிக்கப்படும் ஆயுர்வேத பவுடரை தொடர்ச்சியாக நீங்கள் உபயோகிப்பது உங்களது உடல் எடை குறைப்பிற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

இன்றைக்கு மக்களிடையே மாறிவரும் உணவு பழக்கவழக்கங்கள், உடல் உழைப்பு இல்லாத வேலை, நொறுக்கு தீனிகள், உட்கார்ந்த இடத்திலேயே பணியாற்றுவது போன்ற பல காரணங்களால் சட்டென்று உடல் எடை அதிகரிக்கிறது. இதோடு நின்றுவிடமால் உடல் எடை அதிகரிப்பால் பல்வேறு உடல் நலப்பிரச்சனைகளையும் மக்கள் சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாக உடல் பருமன் அதிகமாக இருக்கும் ஒருவருக்கு இதயநோய், நீரழிவு பிரச்சனை, உயர் இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுகிறது. உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்புகளால் சில நேரங்களில் மாரடைப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.

இது போன்ற சூழலில், அதிகரித்த எடையைக் குறைப்பதற்கு ஜிம்மிற்கு சென்று கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்வது, வாக்கிங், ஜாக்கிங், ஸ்கிப்பிங், டயட்டில் இருப்பது போன்ற பல்வேறு முறைகளைப் பின்பற்றுகிறார்கள். ஆனாலும் பலரால் அதிகரித்த உடல் எடையைக் குறைக்க முடியாமல் அவதிப்படும் சூழலும் தொடர்கதையாக உள்ளது. இதுப்போன்ற பிரச்சனைகள் உங்களுக்கும் இருந்தால் கவலை வேண்டாம். எவ்வித உடல் நல பிரச்சனைகள் ஏற்படாத வகையில் ஆயுர்வேத மருத்துகளை நீங்கள் உட்கொள்ளலாம் என பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள். இதற்காக நீங்கள் எங்கேயும் தேடி அலைய தேவையில்லை. உங்கள் சமையல் அறையில் உள்ள சீரகம், சோம்பு, பெருஞ்சீரகம் போன்ற மசாலாப் பொருள்கள் போதும். உங்களது எடைக் குறைப்பிற்கு மிகவும் உதவியாக உள்ளது.



சீரகம், சோம்பு, பெருஞ்சீரகம் போன்ற உணவு பொருள்களைத் தினமும் உள்கொள்ளும் போது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும், இரைப்பை பிரச்சனைகளை சரிசெய்யவும் உதவுகிறது. இந்த மசாலாப் பொருள்கள் உடலில் உள்ள மெட்ட பாலிசத்தை சரியாக வைத்து எடையைப் பராமரிக்க உதவுகிறது. இதோடு பசியைக் கட்டுப்படுத்த உதவுவதோடு அதிக கலோரிகளை உட்கொள்வதைத் தவிர்க்கிறது.

சாப்பிடும் போது இடையில் தண்ணீர் குடிப்பது தவறு : ஏன் தெரியுமா..?

உடல் எடை இழப்பிற்கு உதவும் ஆயுர்வேத பவுடர் செய்முறை:

ஆயுர்வேத பவுடரைத் தயாரிப்பதற்கு சீரகம், சோம்பு, பெருஞ்சீரகம் போன்றவற்றை சம அளவாக முதலில் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் லேசாக வறுத்துக்கொண்டு மிக்ஸியில் பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.



இந்த பொடியை நீங்கள் ஒரு ஸ்பூன் எடுத்து வெதுவெதுப்பான நீரில் கரைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது போன்று தினமும் நீங்கள் கடைப்பிடிக்கும் போது உடல் எடை குறைகிறது. இந்த ஆயுர்வேத பவுடரை தண்ணீரில் கலந்து குடிக்கப் பிடிக்கவில்லை என்றால் உங்களது சமையலில் அல்லது சாலட்டுகளில் மசாலாப் பொருளாகவும் நீங்கள் பயன்படுத்தலாம். இந்த ஆயுர்வேத பவுடர் உடலில் இருந்து அதிகப்படியான கொழுப்பை அகற்ற உதவியாக உள்ளது.

எனவே எந்த பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு நிச்சயம் இந்த ஆயுர்வேத மூலிகை பவுடர் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Weight loss

அடுத்த செய்தி