பூண்டுடன் தேன் கலந்து சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியுமா?

உடல் எடை குறைத்தல்

பழங்கால நம்பிக்கைகளின்படி, தேன் மற்றும் பூண்டு ஆகியவை சேர்ந்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் மக்களின் அதிக எடையை குறைக்க உதவும் ஒரு சக்திவாய்ந்த கலவையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

  • Share this:
பூண்டு மற்றும் தேன் ஆகியவை ஒவ்வொரு இந்திய சமயலறைகளிலும் இருக்கும் இரண்டு பொதுவான உணவுப் பொருட்களாகும். இந்த இரண்டு பொருட்களும் பல ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்றவை.

பூண்டு உணவுகளுக்கு சுவையைச் சேர்க்க உதவும். அதேபோல, தேன் ஆயுர்வேதத்தில் பல ஆண்டுகளாக பல்வேறு உடல்நல நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இந்த இரண்டு உணவுப் பொருட்களின் ஆரோக்கிய நன்மைகளும் அறிவியலால் ஆதரிக்கப்பட்டுள்ளன. இருமல் மற்றும் சளி முதல் வீக்கம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் வரை, இவை இரண்டு பொருட்களும் அறிகுறிகளைக் குறைத்து நிவாரணம் அளிக்க நன்றாக வேலை செய்கின்றன. அதேபோல பழங்கால நம்பிக்கைகளின்படி, தேன் மற்றும் பூண்டு ஆகியவை சேர்ந்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் மக்களின் அதிக எடையை குறைக்க உதவும் ஒரு சக்திவாய்ந்த கலவையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. உண்மையில் எடை குறைப்பில் பூண்டு மற்றும் தேன் உதவுகிறதா? அது குறித்து விவாக காண்போம்.

பூண்டின் நன்மைகள், garlic benefits

இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக எடுத்துக்கொள்வதன் மூலம் அவை எடை இழப்புக்கு உதவும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இதற்காக, இந்த செயல்முறையை நீங்கள் முயற்சிக்கக் கூடாது என்பது அர்த்தமல்ல. பூண்டு மற்றும் தேன் ஆகிய இரண்டும் தனித்துவமான சுகாதார நன்மைகளைக் கொண்டுள்ளன. அவை எடை இழக்கவோ அல்லது கொழுப்பை எரிக்கும் செயல்முறையை விரைவுபடுத்தவோ நேரடியாக உங்களுக்கு உதவாது. ஆனால் அவை நிச்சயமாக உங்கள் எடை இழப்பு செயல்முறைக்கு ஆதரவு தரும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

காலையில் எழுந்ததுமே பல் துலக்குவதுதான் முதல் வேலையா..? இனி அப்படி செய்யாதீர்கள்...காலை உணவை சாப்பிட்ட பிறகு செய்யலாம்..!

எடை இழப்புக்கு பூண்டு மற்றும் தேன் எவ்வாறு உதவுகிறது?

பூண்டு ஒரு ஊட்டச்சத்து நிறைந்த சக்தியாகும். இதில் வைட்டமின் பி 6 மற்றும் சி, ஃபைபர், மாங்கனீசு, கால்சியம் ஆகியவை நிரம்பியுள்ளது. இது உங்கள் உடல் எடையைகுறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தொடங்க எலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையின்படி, எட்டு வாரங்களுக்கு பூண்டு சாப்பிட்டு வந்தால் உடலில் சேமிக்கப்படும் கொழுப்பின் சதவீதத்தைக் குறைக்க உதவும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், உடலில் இருந்து நச்சுகளை அகற்றி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.

அதேபோல தேன், உடலில் எரிபொருளாக செயல்படுகிறது. இது ஆற்றலுக்கான குளுக்கோஸை உற்பத்தி செய்ய உதவுகிறது. குளுக்கோஸ் மூளையின் சர்க்கரை அளவை அதிகமாக வைத்திருக்கிறது மற்றும் கொழுப்பை எரிக்கும் ஹார்மோன்களை வெளியிட கட்டாயப்படுத்துகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தைக் குறைக்கவும், ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் நோய்களைத் தடுக்கவும் உதவுகின்றன.பூண்டு மற்றும் தேனை எவ்வாறு உட்கொள்வது:

ஒரு சில பூண்டுகளை தோலை நீக்கி இடித்து கொள்ள வேண்டும். ஒரு சிறிய கப்பில் ஒரு டீஸ்பூன் தேனை எடுத்து நசுக்கிவைக்கப்பட்ட பூண்டுடன் கலக்கவும். இந்த இரண்டு பொருட்களையும் சரியாக கலந்து 15-20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இதனை காலையில் வெறும் சாப்பிட வேண்டியது அவசியம். இதனை அதிகமாக செய்து 3 நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்க சாப்பிடலாம். இந்த கலவையை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்.

தினமும் இந்த கலவையை தயாரிக்கும் போது இரண்டு பூண்டுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். அதிக அளவு பூண்டு உட்கொள்வது துர்நாற்றம், வாய் அல்லது வயிற்றில் எரியும் உணர்வு, நெஞ்செரிச்சல், வாயு, குமட்டல், வாந்தி, உடல் வாசனை மற்றும் வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கும். நீங்கள் கர்ப்பமாக இருந்தால், தாய்ப்பால் கொடுத்து வந்தால் அல்லது இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை எடுத்துக் கொண்டால், தேன் மற்றும் பூண்டு ஆகியவற்றை ஒன்றாக எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகுவது அவசியம்.

 
Published by:Sivaranjani E
First published: