ஜிம்மிற்கு போகாமல் வீட்டிலேயே தொப்பையை குறைக்க உதவும் 5 வொர்க் அவுட்ஸ்

உடற்பயிற்சி

நீங்கள் இந்த பயிற்சிகளை ஜிம்மிலும் முழுமையாக செய்ய முடியும். இந்த பயிற்சிகள் உங்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன, எனவே உங்கள் வயிற்று கொழுப்பு கரைவதை உணர தயாராகுங்கள்!

  • Share this:
தற்போதைய காலக்கட்டத்தில் இளவயதினர் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் இருக்கும் பொதுவான சிக்கலாக மாறி இருக்கிறது பெல்லி ஃபேட் எனப்படும் தொப்பை. கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக தொற்று காரணமாக பலரும் வீட்டிலிருந்தபடி அலுவலக வேலைகளை பார்த்து வருகின்றனர். உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்திருக்க முடியாமல் தொடர்ச்சியாக பல மணி நேரங்கள் வேலை செய்து வருவதன் காரணமாக தொப்பை உண்டாகி அவதிப்படுபவர்கள் பலர்.

நீரிழிவு மற்றும் இதய நோய் போன்றவற்றின் அபாயத்தை வயிற்று கொழுப்பு அதிகரிக்கிறது. சில நாட்களில் உருவாகும் தொப்பையை குறைக்க பல மாதங்கள் ஆகலாம். இதனிடையே பிரபல ஃபிட்னஸ் ட்ரெயினரான கேலா இட்சின்ஸ், தனது இன்ஸ்டாவில் சமீபத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்து உள்ளார். இந்த வீடியோ வயிற்று கொழுப்பை குறைக்க தீவிரமாக செய்ய வேண்டிய சில உடற்பயிற்சிகளை கொண்டது. தொப்பையை கரைக்க இவர் இந்த வீடியோவில் செய்து காட்டும் பயிற்சிகள் வேகமானவை மற்றும் விரைவானவை, ஆனால் நிச்சயமாக எளிதானவை அல்ல என்று கேலா இட்சின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இவரை இன்ஸ்டாவில் சுமார் 13.2 மில்லியன் மக்கள் ஃபாலோ செய்து வருகிறார்கள். பெரிதாக எவ்வித ஜிம் டூல்ஸ்களும் இன்றி தொப்பையை விரைவாக குறைக்க நீங்கள் ஒரு சவால் மிகுந்ததை செய்ய தயாராக உள்ளீர்கள் என்றால், இந்த உடற்பயிற்சிகள் உங்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன என்று கேலா இட்சின்ஸ் அந்த போஸ்ட்டின் தலைப்பில் குறிப்பிட்டு இருக்கிறார்.இந்த வொர்க் அவுட்களை தினசரி முயற்சி செய்து வயிற்று கொழுப்பை விரைவாக குறைக்கலாம். கேலா இட்சின்ஸ் அந்த வீடியோவில் மேட் ஒன்றில் படுத்து கொண்டு வேகமாக சில வொர்க் அவுட்களை செய்து காட்டுகிறார். குறைந்தபட்ச உபகரணங்களுடன் வீட்டிலேயே முடிக்க இந்த உடற்பயிற்சி திட்டம் சரியானது என்றும் குறிப்பிடுகிறார். "எனது புதிய HIIT கார்டியோ & ஏபிஎஸ் திட்டம் ஸ்வெட் App-ல் தொடங்கப்பட்டது, ஆனால் நீங்கள் அனைவரும் முயற்சி செய்யும் வரை என்னால் காத்திருக்க முடியாது !!

உடல் எடை அதிகரிக்காமல் இருக்க இந்த தேநீரை ட்ரை பண்ணி பாருங்க..

நீங்கள் இந்த பயிற்சிகளை ஜிம்மிலும் முழுமையாக செய்ய முடியும். இந்த பயிற்சிகள் உங்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன, எனவே உங்கள் வயிற்று கொழுப்பு கரைவதை உணர தயாராகுங்கள்! இங்கே எனது புதிய உடற்பயிற்சி திட்டத்திலிருந்து எனக்கு பிடித்த 5 பயிற்சிகள் இந்த வீடியோவில் உங்களுக்காக செய்து காட்டி இருக்கிறான். இவை நிச்சயமாக உங்கள் தொப்பை குறைவதற்கு ஏற்ற வொர்க் அவுட்களாக இருக்கும் என்று கூறி அந்த 5 வொர்க் அவுட்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார்.

*Flutters

*Russian Twist

*Alternating Jackknife

*Side Plank & Oblique Crunch

*X Mountain Climbers - பெயர்களை குறிப்பிட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் இந்த 5 பயிற்சிகளையும் எப்படி செய்ய வேண்டும் என்பதையும் இந்த வீடியோவில் அவரே செய்து காட்டியும் உள்ளார்.

வீடியோ:

https://www.instagram.com/p/CStmLf4Bla_/

இந்த பயிற்சிகளுக்குப் பிறகு என் வயிற்று கொழுப்பு எரிகிறது (கரைகிறது) தீப்பிடித்துவிட்டது என்று நினைக்கிறேன் என்று வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு உடற்பயிற்சியும் 30 விநாடிகள் வரை செய்ய வேண்டும், பின்னர் மீண்டும் சுழற்சி முறையில் இந்த 5 பயிற்சிகளையும் திரும்ப செய்ய வேண்டும். ஒரு வொர்க் அவுட்டிலிருந்து மற்றொரு வொர்க் அவுட்டிற்கு கேலா இட்சின்ஸ் டக்கென்று மாறினாலும், இந்த பயிற்சிகளை செய்யும் பிகினர்கள், ஒவ்வொரு வொர்க் அவுட்டிற்குகும் இடையே 30 வினாடி இடைவெளி எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இதை படித்த உங்களுக்கும் தொப்பை இருக்கிறதென்றால் இன்னும் ஏன் காத்திருக்கிறீர்கள்.? கேலா இட்சின்ஸின் மேற்காணும் வொர்க் அவுட்களை தினசரி செய்து தட்டையான வயிற்றை பெறுங்கள்.

 
Published by:Sivaranjani E
First published: