உடலை ஸ்லிம்மாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்ள எண்ணற்ற டயட் பிளான்களை வீட்டில் நாம் பின்பற்றி வருவோம். ஆனால், திருமணம், காதுகுத்து என ஏதேனும் விசேஷ காலங்கள் வந்து விட்டால் இந்த டயட் பிளான்களை நம்மால் பின்பற்ற முடியாது. என்னதான் நாம் பார்த்துப், பார்த்து சாப்பிடுபவராக இருந்தாலும் விருந்து நடக்கும் பந்தியில் என்ன கிடைக்கிறதோ அதைத்தான் நாமும் சாப்பிட்டாக வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
விதவிதமான இனிப்புகள், அசைவ உணவுகள், காரசார மசாலா கலந்த பொரித்த உணவுகள் போன்ற வகை, வகையான உணவுகளை நாம் பார்க்கும்போது மனதை கட்டுபடுத்த முடியாமல் சாப்பிட்டு விடுவோம் என்றாலும்கூட, ஆழ்மனதில் இதனால் நம் உடல் எடை அதிகரித்து விடுமோ என்ற அச்சம் இருந்துகொண்டே இருக்கும். குறிப்பாக, ஒவ்வொரு உணவு பொருளையும் நாம் சாப்பிடும் போது இதன் கலோரி எந்த அளவுக்கு அதிகமாக இருக்கும் என்ற கேள்வி மனதுக்குள் எழுந்து கொண்டே இருக்கும். ஆனால், சில ஆயுர்வேத டிப்ஸ்களை கடைப்பிடித்தால் இதுபோன்ற கவலை எதுவும் இல்லாமல், நீங்கள் விரும்பியதை விரும்பிய படி சாப்பிடலாம் என்பதே எதார்த்த உண்மை.
ஆயுர்வேத மருத்துவர் தீக்ஷா பாவ்சர் இது குறித்து இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்டுள்ள அறிவுரைகள் பலருக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளன.
https://www.instagram.com/p/CZhRxbUjauT/?utm_source=ig_embed&ig_rid=7887de5a-e8fe-489c-948d-4f4c17a9a6e9
மருத்துவர் சொல்லும் டிப்ஸ் இதுதான் :
* திருமண சீசனில் சாப்பிடும்போது எதையும் அளவோடு சாப்பிடுங்கள். நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிட நேரிடலாம். ஆனால், அவற்றை மெதுவாக, நன்றாக மென்று சாப்பிடவும்.
* ஜீரணத்தில் மிக முக்கியமானது தண்ணீர் அருந்துவது ஆகும். ஆகவே, நாள் முழுவதும் வெதுவெதுப்பான தண்ணீர் குடித்துக் கொண்டே இருங்கள். கொஞ்சம் இஞ்சி பவுடர் கலந்த வெந்நீர் எப்போதும் * கையில் வைத்துக்கொண்டு தேவைப்படும் நேரத்தில் அருந்தி வந்தால் ஜீரண சக்தி பலமடங்கு மேம்படும்.
* உடலில் தேங்கும் தேவையற்ற கழிவுகளை நீக்க வெள்ளரி, புதினா மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை கலந்த ஜூஸ் அருந்தலாம்.
Weight Loss : இந்த 5 மாற்றங்களை செய்யாத வரை உடல் எடையை அவ்வளவு எளிதில் குறைக்க முடியாது..!
Vegan Diet : வீகன் டயட் பின்பற்றுபவரா..? உங்களுக்கான ஆரோக்கிய நன்மைகளைத் தரும் 5 இந்திய வீகன் உணவுகள்...
* நம் பாரம்பரியமாக கடைபிடித்து வரும் பழக்கங்களில் ஒன்றாக கருதப்படும், அதிகாலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை மற்றும் தேன் கலந்த வெதுவெதுப்பான தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கடைபிடிக்கலாம். எப்போதெல்லாம் நீங்கள் மிக அதிகப்படியான உணவுகளை சாப்பிடுகிறீர்களோ அல்லது கொஞ்சம் மது அருந்துகிறீர்களோ அதற்கு அடுத்த நாள் இந்த தேன் மற்றும் எலுமிச்சை கலந்த வெந்நீர் அருந்துவது மிகவும் அவசியமாகும்.
* உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றால் மெயின் கோர்ஸ் வகை உணவுகளை சாப்பிடும் முன்பாக சாலட், சூப் போன்றவற்றை சாப்பிட்டு வயிற்றில் பாதி இடத்தை நிரப்பி விட வேண்டும்.
* விசேஷ வீடுகளில் சாப்பிடும்போது இந்த மந்திரம் உங்கள் மனதில் இருக்க வேண்டும். “பெருமையுடன் சாப்பிடுங்கள், குற்ற உணர்ச்சி வேண்டாம். உங்கள் ஆசீர்வாதங்களை எண்ணுங்கள், கலோரிகளை எண்ண வேண்டாம்’’ என்பதேயாகும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.