HOME»NEWS»LIFESTYLE»health weight loss 5 zero calorie foods help you lose belly fat esr ghta

தொப்பை கொழுப்பை குறைக்க உதவும் 'ஜீரோ கலோரி உணவுகள் ' - ட்ரை பண்ணுங்க...

உடலுழைப்பு இல்லாத மற்றும்  தவறான வாழ்க்கை முறையாலும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களாலும் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர்.

தொப்பை கொழுப்பை குறைக்க உதவும் 'ஜீரோ கலோரி உணவுகள் ' - ட்ரை பண்ணுங்க...
மாதிரி படம்
  • Share this:

இப்போதுள்ள பலர் அதிகம் வருத்தப்படும் விஷயம் உடல் எடை பற்றி தான். தற்போதைய உடலுழைப்பு இல்லாத மற்றும்  தவறான வாழ்க்கை முறையாலும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களாலும், ஏராளமான இளைஞர்கள் உடல் பருமன் பிரச்சனையால் கஷ்டப்படுகிறார்கள். முன்பாவது மக்கள் அலுவலக வேலையோ அல்லது பிற வேலைகளின் காரணமாக குறைந்தது இரண்டு மணி நேரமாவது நடந்தோ நின்றோ பேருந்துகளிலோ அல்லது வாகனங்களிலோ செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.

ஆனால் இப்போதோ ஒர்க் ப்ரம் ஹோம் என்ற ஆப்ஷன் இருப்பதால் பலரும் வீட்டில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால் உடல் எடை கூடி வருவதால் கவலை கொள்கின்றனர். உடல் எடை கூடுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று  உணவு, இரண்டாவது நீங்கள் செய்யும் பயிற்சி. இதில் இரண்டுமே முக்கியம். இதை நீங்கள் சரிவர பின்பற்றவில்லை என்றால் நிச்சயம் உடல் எடை கூடும். சாப்பிடும்போது நீங்கள் தேர்ந்தெடுத்த உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறது என்பதை அறிந்து சாப்பிடுவது முக்கியம்.

ஆனால் அது எல்லா நேரங்களிலும் சாத்தியமில்லை. அதேபோன்று சாப்பிட்டபின் சாப்பிட்ட உணவிற்கு ஈடாக உடற்பயிற்சி செய்வதும் அவசியம். இதில் ஒன்றையேனும் நீங்கள் கடைப்பிடித்தால் உடல் எடை குறையும். உடற்பயிற்சியை விட உணவு கட்டுப்பாடு மிகவும் சுலபமானது. இந்த பதிவில் ஜீரோ கலோரி உணவுகளை நாம் காண இருக்கிறோம்.

தொப்பை கொழுப்பை சீக்கிரமா குறைக்கும் ஜீரோ கலோரி உணவுகள்:

செலரி:

செலரி உலகம் முழுவதும் பல மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சீனாவில் அதிக அளவு மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இப்பொழுது உலகெங்கிலும் செலரி ஜூஸ் பிரபலமாகி வருகிறது. இது 100 சதவிகிதம் நீரால் ஆனது. உடல்நலம் காப்பதில் செலரிக்கு பெரும் பங்கு இருப்பதால் அதிகமான மக்கள் செலரியை விரும்பிகிறார்கள். நாட்பட்ட நோய்களிலிருந்து ஆரோக்கியமான ஹெல்த் வரை இந்த செலரி பலனளிக்கக்கூடியது. இதில் சுத்தமா கலோரிகளே இல்லை. முழுவதும் தண்ணீர் மட்டுமே நிறைந்தது. இந்த செலரி ஜூஸை தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்தால் தொப்பை படு வேகமாக குறையும் நல்ல பலன் கிடைக்கும்.ப்ரோக்கோலி:

ப்ரோக்கோலி உங்கள் உணவில் சேர்க்கக்கூடிய மிகவும் ஆரோக்கியமான ஒரு காய்கறி ஆகும். இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள், மற்றும் அதிக அளவு தண்ணீர் நிறைந்துள்ளன. ப்ரோக்கோலியில் 100 கிராமுக்கு 34 கலோரிகள் மட்டுமே உள்ளன. ஒருவரின் எடையை குறைக்கவும் பராமரிக்கவும் ப்ரோக்கோலி உதவியாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது, இது ஜீரோ கலோரி உணவாக பல மேஜிக்குகளை செய்கிறது.

காலிஃபிளவர்:

காலிஃபிளவர் மற்றொரு ஆரோக்கியமான காய்கறி ஆகும், காலிஃபிளவர், ப்ரோக்கோலியின் குடும்பத்தைச் சேர்ந்தது. 100 கிராம் காலிஃபிளவரில் 25 கலோரிகள் உள்ளது. இது 92 சதவீத நீரையும், 2.5 கிராம் நார்ச்சத்தையும் கொண்டுள்ளது. உங்கள் வெய்ட் லாஸ் உணவில் இதை கண்டிப்பா சேர்க்க மறந்துடாதீங்க.

முலாம் பழம்:

முலாம் பழம் கோடையில் அதிகம் கிடைக்கும் பழங்களுள் ஒன்று. இப்போது கோடையும் துவங்கவுள்ளது. இது உடல் எடையையும் குறைக்க உதவி புரியும். இதில் ஏராளமான அளவில் நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்து, ஒருவரது பசியைக் கட்டுப்படுத்த அவசியமான ஒன்றாகும். இத்தகைய நார்ச்சத்து முலாம் பழத்தில் இருப்பதால், எடையைக் குறைக்க நினைக்கும் ஒவ்வொருவரும், அன்றாடம் ஒரு டம்ளர் முலாம் பழ ஜூஸைக் குடிப்பது நல்லது.கீரை:

கீரை உலகம் முழுவதும் பரவலாக உணவிற்கு பயன்படுத்தப்படும் ஒரு சுவையான, பச்சை இலை காய்கறி போன்றது. முருங்கை கீரை, பசலை கீரை, மணத்தக்காளி கீரை, பொன்னாங்கன்னி கீரை, அரைக்கீரை, சிறுகீரை என பல வகையான கீரைகள் உள்ள நிலையில், அவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் செய்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக வாழலாம். இந்த கீரைகளை அதிகம் எடுத்துக் கொண்டீர்கள் என்றால் உங்கள் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு கொழுப்புகள் மேலும் சேராமல் உங்களை பாதுகாக்கும்.இந்த குறைந்த கலோரி உணவில், 100 கிராமுக்கு 17 கலோரிகள் மட்டுமே உள்ளது. இந்த காரணத்தினாலேயே இது சாலட்களிலும் சாண்ட்விச்களிலும் மிகவும் பிரபலமாக சேர்க்கப்படுகிறது.

உங்கள் லைஃப்ஸ்டைல் ஹெல்தியாக இருக்கனும்னு நினைக்கிறீங்களா? 5 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

கேரட்:

கேரட்டானது கண்கள், சருமத்திற்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. கேரட்டில் வைட்டமின் ஏ, மற்றும் ஈ நிறைந்துள்ளன, மேலும் கலோரிகளும் மிக மிகக் குறைவாகவே உள்ளது. கேரட்டுகள் பச்சையாக சாப்பிட ஏற்ற ஓர் அற்புதமான மற்றும் சுவையான காய்கறி. கேரட் மற்றொரு பூஜ்ஜிய கலோரி உணவாகும், உங்கள் எடை இழப்பு உணவில் நீங்கள் சேர்க்க வேண்டிய முக்கிய ஹைட்ரேட்டிங் உணவுப் பொருள் என்றால் அது கேரட் தான்.

உடல் பருமன் பிரச்சனையை ஒருவர் சந்திக்க ஆரம்பித்துவிட்டால், அதைத் தொடர்ந்து இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகள் தானாக வந்துவிடும். மேற்சொன்ன உணவுகளை தவறாமல் நீங்கள் சாப்பிட்டு வந்தால் நிச்சயம் உங்கள் உடல் எடை குறையும் அதையும் நீங்கள் கண்கூடாக பார்க்கலாம்

 

 

 
Published by:Sivaranjani E
First published: