உங்கள் உடல் பருமனுக்கு நீர்ச்சத்து அதிகரித்திருப்பதுதான் காரணமா..? குறைப்பதற்கான வழிகள் இதோ...

உடல் எடை குறைத்தல்

தேவையற்ற தண்ணீர் சத்தானது உடலில் இருந்து சிறுநீர் வடிவில் அகற்றப்படுவதற்கு பதிலாக, உறுப்புகளுக்கும் தோலுக்கும் இடையில் கூடுதல் திரவத்தை சேமிக்கத் தொடங்குகிறது.

  • Share this:
உடல் பருமன் தற்போது தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்து வருகிறது. ஆனால் சிலருக்கு அதிக நீர் சத்து மிகுதியால் கூட உடல் எடை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. நீர் சத்தால் அதிகரிக்கும் எடை என்பது என்பது ஒரு பொதுவான மற்றும் தற்காலிக நிலை, இது சில நாட்களுக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பும். உங்கள் உடலில் அதிகப்படியான தண்ணீர் சேரும் போது இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

ஆனால் இதனால் உடல் எடை அதிகரிப்பது சிலருக்கு மன வேதனையை தரக்கூடும். இதில் உள்ள நல்ல செய்தி என்னவென்றால், சில எளிய ஆலோசனையைப் பின்பற்றுவதன் மூலம் ஒரே இரவில் நீரால் அதிகரிக்கும் எடையை எளிதில் குறைக்க முடியும்.நீர் எடை என்றால் என்ன?

மனித உடல் 60 சதவீத நீரால் ஆனது, அவற்றில் பெரும்பாலானவை உயிரணுக்களில் தக்கவைக்கப்படுகின்றன. எனினும் திசுக்களில் திரவம் சேகரிக்கப்பட்டு உடலின் வீக்கத்திற்கு வழிவகுக்கும் போது ஒரு நபர் நீர் எடையை பெறுவார். இதில், தேவையற்ற தண்ணீர் சத்தானது உடலில் இருந்து சிறுநீர் வடிவில் அகற்றப்படுவதற்கு பதிலாக, உறுப்புகளுக்கும் தோலுக்கும் இடையில் கூடுதல் திரவத்தை சேமிக்கத் தொடங்குகிறது. அதிக உப்பு அல்லது கார்ப்உணவுகள், நீரிழப்பு, மாதவிடாய் ஹார்மோன்கள், பிறப்பு கட்டுப்பாடு ஹார்மோன்கள், கார்டிசோல் நிலை மற்றும் மருந்துகள் போன்றவை இதற்கு காரணமாக உள்ளது. ஆனால் நீர் எடை அதிகரிப்பு நிரந்தரமானது அல்ல என்பதால் இதுகுறித்து நீங்கள் கவலைப்பட தேவையில்லை.

இந்த பிரச்னையை சரி செய்ய நீங்கள் பின்பற்ற வேண்டியது என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

கார்ப் உட்கொள்ளலைக் குறைக்கவும்

கார்போஹைட்ரேட் என்பது நமது உடலுக்கு ஏராளமாக தேவைப்படும் மூன்று அத்தியாவசிய மக்ரோனூட்ரியன்களில் ஒன்றாகும், எனினும் நீங்கள் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ளும்போது நீர் தக்கவைப்பை ஏற்படுத்துகிறது. ஆற்றலை உற்பத்தி செய்ய உடலால் பயன்படுத்தப்படாத ஏராளமான கார்ப் நிறைந்த உணவுகளை நீங்கள் உட்கொள்ளும்போது, ​​அது கிளைகோஜனாக மாற்றப்பட்டு ஆற்றலுக்காக தசைகளில் சேமிக்கப்படுகிறது. எனவே, நீர் சத்தால் அதிகரித்த உடல் எடையை குறைக்க, கார்ப் உட்கொள்ளலைக் குறைத்து, உங்கள் உணவில் ஆரோக்கியமான உணவுகளை சேர்த்து சாப்பிடவும்.உப்பை உணவில் குறைக்கவும்

உப்பு தண்ணீரை ஈர்க்கிறது, இது உங்கள் உடல் எடையை அதிகமாக்குகிறது/ இதனால் வீக்கம் மற்றும் உடல் எடை அதிகரிக்கும். நீங்கள் அதிக உப்பு நிறைந்த தின்பண்டங்களை உட்கொள்ளும் நபராக இருந்தால் அதை குறைக்க வேண்டிய நேரம் இது. நமது உடல் செயல்பட ஒரு நாளைக்கு 2,300 மில்லிகிராம் உப்பு மட்டுமே தேவைப்படுகிறது. ஆனால் நமக்குத் தெரியாத நிறைய உணவுப் பொருட்களில் உப்பு மறைக்கப்பட்டுள்ளது. எனவே, உங்கள் தினசரி உப்பு உட்கொள்வதில் கவனமாக இருங்கள் மற்றும் குறைந்த அளவு உப்பைப் பயன்படுத்த முயற்சிக்கவும்.

உடல் உழைப்பு இல்லாமல் அமர்ந்தே இருந்தாலும் கொரோனா வரும் - ஆய்வு

நீரேற்றமாக இருங்கள்

நீரால் அதிகரித்த எடையை குறைக்க அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என கூறுவது கொஞ்சம் வித்தியாசமாகத் தோன்றலாம், ஆனால் இது உண்மையாக செயலாற்றும். நமது உடல் பெரும்பாலும் தண்ணீரினால் ஆனது, நீங்கள் போதுமான அளவு குடிக்காதபோது, ​​உங்கள் உடல் அதில் இருக்கும் ஒவ்வொரு அவுன்ஸ் திரவத்தையும் சேமிக்கத் தொடங்குகிறது. இது சில நேரங்களில் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கிறது. உங்கள் தினசரி திரவ உட்கொள்ளலை 2 முதல் 3 லிட்டர் வரை பராமரிக்கும்போது, ​​நீர்ச்சத்து உடலில் தாங்காது. மேலும் அதிகப்படியான தண்ணீர் சிறுநீரில் இருந்து வெளியேறும். எனவே உங்கள் உணவில் இளநீர், வெள்ளரி, தர்பூசணி மற்றும் தக்காளி போன்ற ஹைட்ரேட்டிங் பழங்களை சேர்க்கலாம்.உணவில் அதிக பொட்டாசியம் சேர்க்கவும்

பொட்டாசியம் ஒரு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும், இது நமது நரம்பு மண்டலம் மற்றும் தசைகள் சுருங்க உதவுகிறது. இது உப்பு சத்திற்கு நேர்மாறாக செயல்படுகிறது மற்றும் ஊட்டச்சத்துக்களை செல்கள் மற்றும் கழிவுப்பொருட்களை உயிரணுக்களுக்கு வெளியே நகர்த்த உதவுகிறது. நீர் எடை அதிகரித்தால், பொட்டாசியம் நிறைந்த உணவை உணவில் சேர்ப்பது உடல் டையை குறைக்கவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும். வாழைப்பழம், உருளைக்கிழங்கு, கீரை ஆகியவை பொட்டாசியத்தின் சில நல்ல ஆதாரங்கள் என்பதால் இவற்றை அன்றாட உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி

நீர் சத்தால் அதிகரித்த எடையை குறைக்க உடற்பயிற்சி செய்வது மிகவும் அடிப்படை வழியாகும். தீவிரமான வொர்க்அவுட்டில் ஈடுபடுவது உயிரணுக்களில் உள்ள அதிகப்படியான தண்ணீரை வியர்வை மூலம் இழக்க உதவும். தினமும் உடற்பயிற்சி செய்வது அதிக கிளைக்கோஜனை எரிக்க உதவுகிறது. ஒர்க்அவுட் இரத்த ஓட்டத்தைத் தூண்டும் மற்றும் சுழற்சியை மேம்படுத்தலாம், இது உடல் முழுவதும் திரவம் சேமிக்கப்படுவதை குறைக்கும்.

 
Published by:Sivaranjani E
First published: