உடல் எடையை குறைக்கும் முயற்சி அல்லது எடையை பராமரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் பலர் தங்கள் எடையில் ஏற்ற இறக்கங்களை எதிர் கொள்கிறார்கள். காலப்போக்கில் எடை அதிகரிப்பது பொதுவானது என்றாலும் தெளிவான காரணமின்றி எதிர்பாராவிதமாக ஒருவர் எடை அதிகரித்தால், அதை அலட்சியமாக எடுத்து கொள்ள கூடாது.
ஆரோக்கியமான டயட்டை பின்பற்றாமல் இருப்பது அல்லது தினசரி வழக்கமான உடற்பயிற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது பொதுவாக உடல் எடையை பாதிக்கும் இரண்டு முக்கிய காரணிகள். எனினும் இவற்றை தவிர எதிர்பாராத எடை அதிகரிப்பை ஏற்படுத்த கூடிய வேறு பல காரணங்கள் உள்ளன.
எதிர்பாராத எடை அதிகரிப்பின் பின்னால் இருக்கும் சில காரணங்கள் இங்கே...
மன அழுத்தம்:
இயந்திர் வாழ்க்கைக்கு நடுவே மன அழுத்தம் என்பது மிகவும் பொதுவான ஒன்றாக மாறி விட்டது. வேலை அழுத்தம், காலக்கெடுக்கள், கடுமையான நடைமுறைகள் உள்ளிட்டவை காரணமாக ஏற்படும் கோபம், சோகம், கவலை போன்ற பல காரணிகள் மன அழுத்தத்திற்கு பங்களிக்கின்றன. மன அழுத்தம் ஹார்மோன் லெவலில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்துகிறது. ஹார்மோன் சமநிலையின்மை எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.
தூக்கமின்மை:
போதுமான அளவு தூங்காமல் இருப்பதும் கூட எதிர்பாராத எடை அதிகரிப்புக்கு பங்களிக்கிறது. அதே போல உறங்கும் முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் நம்முடைய உணவுப் பழக்கம் மற்றும் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தூக்கத்தில் பிரச்சனை உள்ள நபர்கள் தங்கள் ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையானதை விட அதிக கார்போஹைட்ரேட்டுகளை சாப்பிடுகிறார்கள். இதன் விளைவாக அவர்களின் உடல் எடை அதிகரிக்கிறது.
நீங்கள் ரன்னிங் செய்யும்போது அளவுக்கு அதிகமாக பயிற்சி எடுக்கிறீர்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்..!
மருந்துகள்:
ஆம். ஒரு சில மருந்துகள் உடல் எடையை அதிஅக்ரிக கூடியவையாக இருக்கின்றன. மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள், ஸ்டெராய்டுகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் போன்ற சில மருந்துகளின் பக்கவிளைவு எடை அதிகரிப்பு ஆகும். எனவே நீங்கள் மருந்துகளை எடுத்து கொண்டாலும் தகுந்த மருத்துவ நிபுணரிடம் ஆலோசித்து பின் எடுத்து கொள்ள துவங்குங்கள்.
ஹைப்போ தைராய்டிசம் :
நம் தைராய்டு சுரப்பி போதுமான தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்யாத போது ஹைப்போ தைராய்டிசம் ஏற்படுகிறது. தைராய்டு சுரப்பி நம் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஹைப்போ தைராய்டிசம் காரணமாக நம் உடலின் வளர்சிதை மாற்றம் குறைகிறது. இதனால் கலோரிகளை விரைவாக எரிக்கும் தன்மை குறைந்து உடல் டை அதிகரிக்கும்.
உங்கள் டீனேஜ் பிள்ளைகளுக்கு ஈட்டிங் டிஸ்ஆர்டர் இருப்பதை கண்டறிவது எப்படி..?
பிசிஓஎஸ்:
PCOS கொண்ட இனப்பெருக்க வயதுடைய பெண்களுக்கு ஹார்மோன் லெவல் சீராக இருக்காது. இதன் விளைவாக எடை இழப்பு சவாலாக இருக்க கூடும் மற்றும் எதிர்பாராத வகையில் எடை அதிகரிப்பு இருக்கலாம். PCOS-க்கு எந்த சிகிச்சையும் இல்லை என்றாலும், அறிகுறிகளைக் குறைக்க அதிக உடற்பயிற்சி செய்தல் மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களை மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
அதிகம் சாப்பிடும் பழக்கம்:
பசி இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதுமே அதிகம் சாப்பிட்டு கொண்டே இருக்கும் பழக்கம் Binge eating disorder என்ற சிக்கலாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகமாக உண்ணும் தொடர் நிகழ்வுகளால் எடை அதிகரிப்பு உட்பட பல உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Weight gain