ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கர்ப்பிணிகள் எடை கூடினால் குழந்தைக்கு நீரிழிவு நோய் வருமா ?

கர்ப்பிணிகள் எடை கூடினால் குழந்தைக்கு நீரிழிவு நோய் வருமா ?

வெளியே சென்றால் தண்ணீரை பீச்சி அடிக்கும் ஸ்பிரே பாட்டிலில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு செல்லுங்கள். அதிக வெப்பத்தை உணரும்போது முகத்தில் ஸ்பிரே செய்து குளுமைபடுத்திக்கொள்ளுங்கள். வீட்டில் இருந்தால் முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள்.

வெளியே சென்றால் தண்ணீரை பீச்சி அடிக்கும் ஸ்பிரே பாட்டிலில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு செல்லுங்கள். அதிக வெப்பத்தை உணரும்போது முகத்தில் ஸ்பிரே செய்து குளுமைபடுத்திக்கொள்ளுங்கள். வீட்டில் இருந்தால் முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள்.

தாயின் உடலில் சுரக்கும் அதிக சர்க்கரை , இன்சுலின் மற்றும் ஹார்மோன்கள் மூலம் அதிக ஊட்டச்சத்து குழந்தைக்குக் கிடைக்கிறது. இதனால் எடைக் கூடுவது மட்டுமன்றி அவர்களின் வளர்ச்சிதை மாற்றத்தத்திலும் மாற்றங்கள் நிகழ்கிறது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  பொதுவாக பெண்கள் கர்ப காலத்தில் எடைக் கூடுவது வயிற்றுக்குள் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதற்கான அறிகுறியாகக் கருதுவார்கள். ஆனால் அதுவே ஒன்பதாவது மாதம், அளவுக்கு அதிகமாக எடைக் கூடுவது தாய்க்கு மட்டுமன்றி குழந்தைக்கும் பாதிப்பை உண்டாக்கும் என ஆய்வில் கூறியுள்ளனர். குறிப்பாக நீரிழிவு நோய் வரும் என்று எச்சரிக்கின்றனர்.

  கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிக எடைக் கூடினால் மூன்று மடங்கு நீரிழிவு நோயால் குழந்தைகள் பாதிக்கின்றனர் என்று ஆய்வு கூறப்பட்டுள்ளது. தாயின் உடலில் சுரக்கும் அதிக சர்க்கரை, இன்சுலின் மற்றும் ஹார்மோன்கள் மூலம் அதிக ஊட்டச்சத்து குழந்தைக்குக் கிடைக்கிறது. இதனால் எடைக் கூடுவது மட்டுமன்றி அவர்களின் வளர்ச்சிதை மாற்றத்தத்திலும் மாற்றங்கள் நிகழும் எனக் கூறப்படுகிறது.

  ஸ்காட்லாந்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 1,18,000 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அவர்களின் ஆரோக்கியம் குறித்த ரிப்போர்ட் கார்டுகளை ஆய்வு செய்துள்ளது. அதில் அவர்களின் அம்மாக்களில் கர்பகாலத்தையும் , நீரிழிவு நோய், இரத்தக் கொதிப்பு, கர்பத்திற்கு முன் அவர்களுடைய ஆரோக்கியம் என துல்லியமாக இந்த ஆய்வை நடத்தியுள்ளது.

  இப்படி அனைத்தையும் ஆராய்ந்ததில் குழந்தைகள் கர்பகாலத்தில் வயிற்றில் இருக்கும்போதே டைப் 2 - நீரிழிவு நோயால் 40 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கண்டறிந்தபின் மருத்துவர்களிடம் கர்ப்பகாலத்தில் அளவுக்கு அதிகமான எடைக் கூடுதலைத் தவிர்க்க அறிவுறுத்தச் சொல்லிக் கூறியுள்ளது அந்த ஆய்வு குழு.

  மேலும் அந்த ஆய்வில் குழந்தைகள் மட்டுமன்றி, கர்ப்ப கால நீரிழிவு நோயால் தாயும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுகிறது. எனவே சரியான டயட் பிளானுடன் கர்பகாலத்தை கவனமுடன் கையாளுமாறுக் கூறுகிறது.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Pregnancy