ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சர்க்கரை நோய் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்புக்கு உதவும் சாதனங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

சர்க்கரை நோய் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்புக்கு உதவும் சாதனங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

சர்க்கரை நோய் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்புக்கான சாதனம்

சர்க்கரை நோய் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்புக்கான சாதனம்

சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். தற்போதைய புதுவரவாகக் கருதப்படும் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜன்ஸ் மூலமாக சுகாதார ஆய்வுகளை மிகத் துல்லியமாக கணக்கிட முடிகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சர்க்கரை நோய் வெகுஜன மக்களை பாதிக்கக் கூடியதாக இருப்பதால், இன்றைக்கு 40 வயதை தாண்டியவர்களை கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது 10 பேரில் குறைந்தபட்சம் 7 பேராவது இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். சர்க்கரை நோய் ஒரு சைலண்ட் கில்லர் என்று சொல்லலாம்.

மருந்துகளை முறையாக உட்கொள்வது, தினசரி உடற்பயிற்சி செய்வது போன்ற நடவடிக்கைகளின் மூலமாக ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆனால், கட்டுப்பாடு இன்றி போனால் இதய நோய் பிரச்சினைகள், தூக்கமின்மை, கண் பார்வை பிரச்சினை, சில சமயம் கால் விரல்களை இழப்பது போன்ற தீவிரத்தன்மை வாய்ந்த சிக்கல்களை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்.

சமீபத்திய மருந்துகள் :

சமீபத்திய சர்க்கரை நோய் மருந்துகளான வில்டாகிளிப்டின் மற்றும் சிதாகிளிப்டின் போன்ற மருந்துகள் காப்புரிமையை இழந்துள்ளன. 2023ஆம் ஆண்டில் டேபோகிளிப்லோசின் என்னும் மருந்தும் காப்புரிமையை இழக்க இருக்கிறது. 2024ஆம் ஆண்டில் கனக்லோஃபோசின் என்னு மருந்தும், அதைத் தொடர்ந்து 2025ஆம் ஆண்டில் லினாகிளிப்டின் மற்றும் எமாக்ளிஃப்ளோசின் ஆகிய மருந்துகளும் காப்புரிமையை இழக்கின்றன.

பெரும்பாலும் அனைத்து மருந்துகளுமே கிளிப்டின் மருந்து குடும்பத்தின் கீழ் வருகின்றன. இவை டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்தக் கூடியது என்று அறியப்படுகிறது. இதற்கு முந்தைய பிரச்சித்தி பெற்ற மெடோஃபார்மின் மருந்து இந்த அளவுக்கு பலன் தருவதில்லை. இதற்கிடையே குறைவான விலையில் மேலும் பல மருந்துகள் விற்பனைக்கு வர இருக்கின்றன. குறிப்பாக, இனி வரக்கூடிய மருந்துகளானது, டைப் 2 நோயாளிகளில் மிகவும் பாதிக்கப்பட்டோருக்கு தீர்வு தரக் கூடியதாக அமையும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சர்க்கரை கட்டுப்பாடு சாதனங்கள் :

சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். தற்போதைய புதுவரவாகக் கருதப்படும் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜன்ஸ் மூலமாக சுகாதார ஆய்வுகளை மிகத் துல்லியமாக கணக்கிட முடிகிறது.

அதேபோன்று நம் உடலில் பொருத்திக் கொள்ளக் கூடிய, தொழில்நுட்ப சாதனங்கள் தற்போது விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளன. இந்த சென்சார்கள் உங்கள் சர்க்கரை அளவை உடனுக்குடன் கண்டறியும். டைப் 2 நீரிழிவு உள்பட பலதரப்பட்ட நோய்களை குணப்படுத்தக் கூடிய ஒற்றை மருந்தை அடிப்படையாக கொண்ட தெரஃபிக் சிகிச்சை முறைகள் அமலுக்கு வர இருக்கின்றன என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

Also Read : பெண்களுக்கு ஏற்படும் நீரிழிவு நோயின் அறிகுறிகள் வேறுபடுமா.?

இருப்பினும் எந்தவொரு தொழில்நுட்பமும் பயன்பாட்டிற்கு வரும் முன்பாக மிக விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். அதே சமயம், மேம்பட்ட தொழில்நுட்ப சிகிச்சைகள் ஒருபுறம் இருந்தாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூலமாக நம்மை நாம் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Diabetes, Diabetes symptoms, Type 2 Diabetes