Home /News /lifestyle /

ரத்தத்தில் நச்சுகளை நீக்கி சுத்திகரிக்க உதவும் செயற்கை கிட்னி

ரத்தத்தில் நச்சுகளை நீக்கி சுத்திகரிக்க உதவும் செயற்கை கிட்னி

செயற்கை முறை சிறுநீரகம்

செயற்கை முறை சிறுநீரகம்

இதனால் இரத்தத்தை சுத்தீகரிக்க இனியும் மிக பிரமாண்ட கருவிகளை பயன்படுத்தி நீண்ட நேரம் பயன்படுத்தும் தெரபிகளை செய்ய வேண்டாம்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    அணிந்துகொள்ளக் கூடிய வகையில் தானாக இயங்கக் கூடிய கிட்னி (சிறுநீரகம்) அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெரிட்டோனியல் டயாலிசிஸ் செய்யும்போது இரத்ததை சுத்திகரிக்க  இந்த கிட்னி உதவுவதாக ஆய்வாளர் கூறுகின்றனர்.

    இந்த ஆய்வு முடிவுகளை ASN Kidney Week வெளியிட்டுள்ளது. அதில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட தானாக இயங்கக் கூடிய சிறுநீரம் இரத்தத்தில் உள்ள நச்சுகளை நீக்கி சுத்திகரிக்கவும் உதவும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இரத்தத்தை சுத்திகரிக்க இனியும் மிக பிரமாண்ட கருவிகளை பயன்படுத்தி நீண்ட நேரம் பயன்படுத்தும் தெரபிகளை செய்ய வேண்டியதில்லை.

    நச்சுகளை அகற்றும் போது பயன்படுத்தப்பட்ட டயாலிசிஸ் திரவத்தை புதிய திரவமாக இந்த தொழில்நுட்பம் மீண்டும் உருவாக்குகிறது. இதனால் பயன்படுத்தப்பட்ட டயாலிசிஸ் திரவம் வீணாகாமல் பாதுகாக்கப்படுகிறது.

    இந்த ஆய்வில் 15 பேரை ஈடுபடுத்தியுள்ளனர். அவர்களுக்கு இந்த செயற்கை முறை சிறுநீரகம் பயன்படுத்தி இரத்தத்தை சுத்திகரித்துள்ளனர். பின் ஒரு மாதம் அவர்களை கவனித்து வந்துள்ளனர். எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி அவர்கள் ஆரோக்கியமாக இருந்துள்ளனர்.




    லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.




    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Artificial Kidney

    அடுத்த செய்தி