முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சைக்கிளிங் செல்லும்போது ஹெல்மெட் அணிவது அவசியம் : பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா ட்வீட்

சைக்கிளிங் செல்லும்போது ஹெல்மெட் அணிவது அவசியம் : பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா ட்வீட்

ஆயுஷ்மான் குரானா

ஆயுஷ்மான் குரானா

சைக்கிளிங் செய்வதால் மனநலம் மேம்படுகிறது, நோய் எதிர்ப்பு சக்தி பலமாகிறது. உடல் எடையையும் சீராக நிர்வகிக்க முடிகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உலக சுகாதார அமைப்பு 18-64 வயது கொண்டவர்கள் குறைந்தது 150 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது அவசியம் என்கிறது அல்லது ஏதேனும் உடலுழைப்பு தரும் செயல்களை செய்ய வேண்டும் என்கிறது. அதேபோல் நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முற்படுகிறீர்கள் எனில் குறைந்தது ஒரு நாளைக்கு 20 நிமிடங்களாவது சைக்கிளிங் செல்லுங்கள் என மருத்துவர்களும் அறிவுத்துகின்றனர். மற்ற உடற்பயிற்சிகளை காட்டிலும் சைக்கிளிங் செல்லும் போது மனதளவிலும், உடலளவிலும் நல்ல ரிலாக்ஸ் கிடைக்கும். ஆரோக்கியமும் கிடைக்கும்.

அதாவது சைக்கிளிங் செய்வதால் மனநலம் மேம்படுகிறது, நோய் எதிர்ப்பு சக்தி பலமாகிறது. உடல் எடையையும் சீராக நிர்வகிக்க முடிகிறது. எனவேதான் ஆயுஷ்மான் குரானாவும் சைக்கிளிங் அவசியத்தை பற்றிய வீடியோவை ட்விட்டரில் பகிந்துள்ளார்.

இயற்கையோடு இயைந்து சைக்கிளிங் ஓட்டுவது உண்மையிலேயே மனம் , உடல் இரண்டுமே ஓய்வு பெறும். அவ்வாறு செல்லும்போது பாதுகாப்பும் அவசியம் என்பதை மறவாதீர்கள். அதைத்தான் ஆயுஷ் அவருடைய வீடியோவிலும் பகிர்ந்துள்ளார்.

அதாவது ஆயுஷ்மான் சைக்கிளிங் செல்கிறார். அப்போது ஒருவர் அவரிடம் ஏன் ஹெல்மெட் அணிந்து சைக்கிளிங் செய்கிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு அவர் என் சகோதரரின் ஹெல்மெட் படம் வெளியாகிறது. அதற்காக அணிந்திருக்கிறேன். அதுமட்டுமன்றி, ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அணிந்து செல்கிறேன். ஃபிட்னஸ் அவசியம்தான். அதேசமயம் சாலை விதிகளை கடைப்பிடிப்பதும், உயிர்க்கவசத்தை அணிவதும் அவசியம் எனக் கூறியுள்ளார்.
 
View this post on Instagram

 

A post shared by Ayushmann Khurrana (@ayushmannk)சைக்கிளிங் இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால்தான் ஜிம்மில் கூட சைக்கிளிங் இருக்கும். பரபரப்பான வாழ்க்கை சூழலில் இப்படியான சைக்கிளிங் கட்டாயம் தேவைப்படுகிறது.

உடலில் இந்த வகை கொழுப்பு இருந்தால் இதய பிரச்சனைகள் வருவது குறைவு தெரியுமா ?

இதயம் மட்டுமன்றி பக்கவாதம், மாரடைப்பு, சில புற்றுநோய்கள், மனச்சோர்வு, நீரிழிவு, உடல் பருமன் மற்றும் கீல்வாதம் போன்ற நோய்களைத் தடுப்பது அல்லது கட்டுப்பாட்டில் வைக்கவும் சைக்கிளிங் மிகவும் உதவிகரமாக இருக்கும். எனவே நீங்களும் சைக்கிளிங் செல்ல முயற்சித்தால் ஹெல்மெட் கட்டாயம் அணியுங்கள்.

First published:

Tags: Ayushmann Khurrana, Cycling, Fitness, Helmet