ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஜில் கிளைமேட்டில் ஜிம் போகவே கடுப்பா இருக்கா..? ராம் சரணின் வெறித்தனமான ஒர்க்அவுட் வீடியோவை பாருங்க..

ஜில் கிளைமேட்டில் ஜிம் போகவே கடுப்பா இருக்கா..? ராம் சரணின் வெறித்தனமான ஒர்க்அவுட் வீடியோவை பாருங்க..

ராம் சரண்

ராம் சரண்

Ram Charan: ரிலாக்ஸ் செய்ய சென்ற இடத்திலும் கூட இவர் தனது ஃபிட்னஸ் ரொட்டினுக்கு ரெஸ்ட் கொடுக்கவில்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஃபிட்னஸ் ரொட்டினை யார் தவறாமல் கடைபிடிக்கிறார்களோ இல்லையோ சினிமா துறையில் இருக்கும் நடிக, நடிகையர் தங்கள் உடலை ஃபிட்டாக வைத்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

ரசிகர்களை தொடர்ந்து கவர நடிகர்கள் தங்கள் உடல்நலம் மற்றும் ஃபிட்னஸை பராமரிக்க பெரும்பாலும் கூடுதல் முயற்சிகளை செய்ய வேண்டியிருக்கும். ஒருநாளின் எந்த நேரத்தில் ஷூட்டிங் இருந்தாலும் அந்த நேரத்தை அட்ஜஸ்ட் செய்து தினசரி தவறாமல் ஒர்கவுட்ஸ் செய்வதற்கு சினி பிரபலங்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். குறிப்பாக கமிட்டாகி இருக்கும் படத்திற்கான கேரக்டருக்காக உடலை வருத்தி கொண்டு தேவையான ஃபிட்ன்ஸை பெறுவதற்கு இவர்கள் செய்யும் தீவிர முயற்சிகள் நம்மை வியக்க வைக்கும்.

அந்த வகையில் பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர்களில் ஒருவரான நடிகர் ராம் சரண், தனது ஃபிட்னஸ் மீது அதிக அக்கறை கொண்டவர். சூப்பர் ஹிட் மூவியான் RRR-ல் இவரது உடற்கட்டமைப்பை பார்த்து ரசிகர்கள் வாய் பிளந்தனர். இவர் தனது பிஸியான நேரத்தில் இருந்து சற்று ஓய்வடுக்க விரும்பி ஒதுக்கி தனது மனைவி உபாசனா காமினேனியுடன் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். பிசி ஷெட்யூலில் இருந்து விலகி இவர் ஓய்வெடுக்க ஆப்பிரிக்காவிற்கு சென்றுள்ளார்.

 ரிலாக்ஸ் செய்ய சென்ற இடத்திலும் கூட இவர் தனது ஃபிட்னஸ் ரொட்டினுக்கு ரெஸ்ட் கொடுக்கவில்லை. சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ராம் சரண் "ஒர்கவுட்டிற்கு விடுமுறை கிடையாது" (Workout Has No Vacation) என்ற கேப்ஷனில் இன்ஸ்டாவில் ரீல் ஒன்றை (வீடியோ) ஷேர் செய்து இருக்கிறார். அதில் அவர் ரெஸ்ட் எடுக்க சென்ற வெளிநாட்டிலும் கூட தீவிர ஒர்கவுட்களில் ஈடுபடும் காட்சிகள் அடங்கி இருக்கிறது. பொழுதை கழித்து வரும் நாட்டில் வசிக்கும் சில உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து ஒர்கவுட் செய்வதோடு மட்டுமின்றி ஃபுட்பால் விளையாடும் வீடியோவை நடிகர் ராம்சரண் ஷேர் செய்துள்ளார்.
 
View this post on Instagram

 

A post shared by Ram Charan (@alwaysramcharan)இந்த வீடியோ ஃபிட்னஸ் ஃப்ரீக்கான ராம் சரண் வழக்கத்திற்கு மாறான தற்காலிக ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதற்கான வழியைக் கண்டுபிடித்துள்ளார் என்பதை காட்டுகிறது. ஸ்விமிங் ஃபூலில் நடிகர் நீச்சல் அடிப்பதுடன் துவங்கும் இந்த வீடியோ பிளாக் டி ஷர்ட் & பிரகாசமான ஆரஞ்சு நிற ஷார்ட்ஸுடன் டம்ப்பெல்ஸ் மற்றும் வெயிட்லிஃப்டிங் செட் போன்ற வடிவிலான சிமெண்ட் மற்றும் பாறை எடைகளை தூக்கி தீவிர பயிற்சியில் ஈடுபடுவதை காட்டுகிறது. இதனை தொடர்ந்து தீவிர புஷ்-அப்ஸ் மற்றும் கால்களுக்கான லெக் ஒர்கவுட்ஸ்களையும் அவர் செய்கிறார்.

சரியான தூக்கம் இல்லை என்றாலும் உடற்பயிற்சியில் ஈடுபாடு இருக்காது : எப்படி தெரியுமா..?

ஒர்கவுட் செஷனுக்கு பிறகு அவர் ஆரஞ்சு ஷார்ட்ஸ், ஒயிட் ஸ்னீக்கர்ஸ் மற்றும் பிளாக் டி-ஷர்ட் அணிந்து உள்ளூர் மக்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடுவதையும் இந்த இன்ஸ்டா ரீலில் காண முடிகிறது. முடிவில் தன்னுடன் விளையாடிய மக்களுடன் நின்று குரூப் ஃபோட்டோவுக்கும் போஸ் கொடுத்துள்ளார்.ஷேர் செய்யப்பட்டதில் இருந்து சுமார் 1.2 மில்லியனுக்கும் மேற்பட்ட லைக்ஸ்களை குவித்துள்ள நடித்தார் ராம் சரணின் இந்த ஒர்கவுட்ஸ் ரீலுக்கு சுமார் 5500-க்கும் மேற்பட்ட யூஸர்கள் பாராட்டி கமெண்ட்ஸ் செய்து உள்ளனர்.

சில நாட்களுக்கு முன் ராம் சரண் ஷேர் செய்த வீடியோவில் ஆப்பிரிக்க காட்டில் ஜீப் ஒன்றை ஓட்டிச் செல்வதையும், சிங்கங்களை ஃபோட்டோ எடுப்பதையும், உள்ளூர் உணவுகளை சமைப்பதையும் காண முடிந்தது. வெளிநாட்டில் ஓய்வெடுக்க சென்றாலும் கூட உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதற்கான வழிகளை ராம் சரண் தொடர்ந்து பின்பற்றி வருவது அவரது ரசிகர்களை மட்டுமின்றி உடற்பயிற்சி ஆர்வலர்களையும் கவர்ந்துள்ளது.

Published by:Srilekha A
First published:

Tags: Exercise, Ram Charan, Workout