Home /News /lifestyle /

இந்த அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் உடனே சிறுநீரகங்களை பரிசோதித்து கொள்ளுங்கள்!

இந்த அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் உடனே சிறுநீரகங்களை பரிசோதித்து கொள்ளுங்கள்!

சிறுநீரக பாதிப்பு

சிறுநீரக பாதிப்பு

சில நாட்களாக நீங்கள் அடிக்கடி சோர்வாக உணர்ந்து வருகிறீர்கள், அந்த சோர்வும் அதிகமாக இருக்கிறது என்றால் அதற்கு சிறுநீரகங்கள் சரியாக செயல்படாமல் இருப்பது காரணமாக இருக்கலாம். சிறுநீரகங்கள் சரியாக செயல்படாததால் உடலில் நச்சுகள் உருவாகி உடலின் மற்ற முக்கிய உயிரியல் செயல்பாடுகளை பாதிக்கலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
நம்முள் இருக்கும் 2 சிறுநீரகங்கள் உடலில் இருந்து கழிவுகள், நச்சுகள் மற்றும் கூடுதல் திரவத்தை அகற்றும் பணிகளை முதன்மையாக செய்கின்றன. ரத்தத்தை சுத்தப்படுத்துகின்றன. உடலின் உயிரணுக்களால் உற்பத்தி செய்யப்படும் அமிலத்தை அகற்றி ரத்தத்தில் உள்ள சோடியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்றவற்றின் சமநிலையை பராமரிக்கின்றன.

எனவே மிகவும் முக்கிய உறுப்பான சிறுநீரகங்களை ஆரோக்கியமாக கவனித்து கொள்வது மிகவும் அவசியம். சிறுநீரகங்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை உணர்த்தும் பல அறிகுறிகள் இருக்கின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பலருக்கும் இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால், காலம் கடந்த பிறகு சிறுநீரகங்களில் பிரச்சனைகள் இருப்பது கண்டறிப்படுகிறது.

தவிர மிக முக்கியமாக நம் உடலின் முழு ரத்தமும் நாளொன்றுக்கு சுமார் 40 முறை சிறுநீரகங்கள் வழியாக செல்வதால், சிறுநீரக செயல்பாடுகளில் ஏற்படும் சிக்கல்களை வெளிப்படுத்தும் அறிகுறிகளை விரைந்து கண்டறிவதும், சிகிச்சை எடுப்பதும் இன்றியமையாதது.

அடிக்கடி சோர்வு:

சில நாட்களாக நீங்கள் அடிக்கடி சோர்வாக உணர்ந்து வருகிறீர்கள், அந்த சோர்வும் அதிகமாக இருக்கிறது என்றால் அதற்கு சிறுநீரகங்கள் சரியாக செயல்படாமல் இருப்பது காரணமாக இருக்கலாம். சிறுநீரகங்கள் சரியாக செயல்படாததால் உடலில் நச்சுகள் உருவாகி உடலின் மற்ற முக்கிய உயிரியல் செயல்பாடுகளை பாதிக்கலாம்.

போதுமான தூக்கம் இல்லையா?

போதுமான தூக்கம் இல்லாததற்கு பல காரணங்கள் இருந்தாலும் கூட, பாதிக்கப்பட்ட சிறுநீரகங்களும் கூட இதற்கு சில நேரங்களில் காரணமாகின்றன. தூக்கமின்மை சிறுநீரக நோய்க்கான நுழைவாயிலாக இருக்க கூடும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஸ்லீப் ஆப்னியா கோளாறு அல்லது போதிய தூக்கம் இல்லாமல் அவதிப்படுவது சிறுநீரக நோய்களுடன் தொடர்புடையது என்பதால் எச்சரிக்கை அவசியம்.



வறண்ட மற்றும் அரிக்கும் சருமம்..

எந்த அலர்ஜியும் இல்லாமல் ஒருவரது சருமம் வறண்டு மற்றும் அரிப்பு நீடித்தால், உடனடியாக டாக்டரிடம் சென்று கிட்னி டெஸ்ட் செய்து கொள்வது முக்கியம். சிறுநீரகங்கள் ரத்தத்தில் இருந்து நச்சுகளை அகற்றும் போது ஆரோக்கியமான சருமம் உறுதி செய்யப்படுகிறது. இதில் இடையூறு ஏற்பட்டு உடலில் நச்சுக்கள் குவிவதால் சரும பாதிப்புகள் ஏற்படுகின்றது. சில நேரங்களில் சருமம் செதில் செதிலாக உரிய கூடும்.

உடல் அறிகுறிகளை வைத்தே நோய்களை கண்டறியலாம் - எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்!

வீக்கம்..

சரியாக செயல்படாத கிட்னிகள் உடலில் சோடியம் குவிய காரணமாகிறது. அதிக அளவு சோடியம் பாதங்கள், கணுக்கால் மற்றும் கால்கள் வீங்க காரணமாகிறது. எனவே கால்களில் வீக்கம் ஏற்பட்டு, நீண்ட நாட்கள் நீடித்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.

கண்களை சுற்றி வீக்கம்..

சிறுநீரகங்கள் சிறுநீரில் அதிக அளவு புரதத்தை வெளியிடும் போது, கண்களைச் சுற்றி வீக்கத்தை ஏற்படுத்தும். பலவீனமான சிறுநீரக செயல்பாட்டிலிருந்து நச்சுகள் குவிவதன் விளைவாக கண்களில் வீக்கம் ஏற்படுகிறது. எனவே கண்களை சுற்றிய வீக்கம் நீண்ட நாட்கள் இருந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.



தசைவலி..

சிறுநீரகச் செயல்பாட்டில் ஏற்படும் கடும் பாதிப்பு , வளர்சிதை மாற்றக் கழிவுகள் ரத்தத்தில் அதிக அளவில் உருவாக்கப்பட காரணமாகிறது. இதனால் தசைகள் மற்றும் நரம்புகளுக்கு ஏற்படும் சேதத்தால் தசை பலவீனம், பிடிப்புகள் மற்றும் வலி ஏற்படலாம்.

சுவாசிப்பதில் சிக்கல்..

சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்படும் சிலரால் சரியாக சுவாசிக்க முடியாது. இதற்கு எரித்ரோபொய்டின் எனப்படும் ஹார்மோன் குறைபாடு காரணமாக இருக்கலாம். மற்றொரு காரணம் உடலில் உள்ள கூடுதல் திரவம் நுரையீரலில் சேர்வதால் மூச்சுத் திணறல் உண்டாகலாம்.

இரும்புச் சத்து குறைபாடு : கண்களில் காணப்படும் இந்த அறிகுறி பற்றித் தெரியுமா?

சிறுநீர் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம்..

சில நாட்களில் வழக்கத்தை விட அடிக்கடி சிறுநீர் கழித்தாலோ அல்லது வழக்கத்தை விட குறைவாக சிறுநீர் கழித்தாலோ தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

வழக்கமான சுகாதார பரிசோதனைகள் எந்த ஒரு நோயையும் கண்டறிய சிறந்த வழி. ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கங்களை பின்பற்றுவது சிறுநீரகங்களை பாதுகாக்கும். புகை மற்றும் மது பழக்கத்தை குறைத்து தினசரி உடற்பயிற்சி செய்யலாம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Kidney Disease, Kidney Failure

அடுத்த செய்தி