ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தினமும் பார்ப்பவரின் பெயரை கூட மறக்கிறீர்களா..? உங்க மறதி நோயை தவிர்க்கும் வழிகள்..!

தினமும் பார்ப்பவரின் பெயரை கூட மறக்கிறீர்களா..? உங்க மறதி நோயை தவிர்க்கும் வழிகள்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Alzheimer’s Disease | பொதுவாக இப்பிரச்சனையை 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் தான் அதிகளவில் சந்திக்கிறார்கள் என்பதால் ஆரம்பத்தில் இருந்தே வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மறதி என்பது நம்மில் பலருக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகும். ஒரு பொருளை வைக்கும் இடம் மறப்பது என்பது இயல்பான ஒன்று தான். அதே சமயம் இந்த நிலையே தொடர்ச்சியாக நீடித்தால் தான் பிரச்சனை ஆரம்பமாகிறது. இதைத் தான் அல்சைமர் எனப்படும் மறதி நோய் என்கிறோம். இந்நோய் பாதிக்கப்பட்ட நபரின் மூளையின் செயற்பாடு படிப்படியாக பாதிக்கப்பட்டு, அவரது நினைவாற்றல் , சிந்திக்கும் திறன், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறன், உடலின் செயல்பாடு எல்லாமே பாதிக்கப்படும்.

இதற்குரிய சிகிச்சைகள் அளிக்கப்படாத போது தான் இறுதியில் உயிரிழக்கும் நிலைக்கூட ஏற்படுகிறது. பொதுவாக இப்பிரச்சனையை 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் தான் அதிகளவில் சந்திக்கிறார்கள் என்பதால் ஆரம்பத்தில் இருந்தே வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே இந்நேரத்தில் அவை என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

Read More : எப்பவுமே நெகடிவ்வாகவே யோசிக்கிறீர்களா? இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க.. பாசிட்டிவா மாறுங்க!

 மறதி நோயைக் கட்டுப்படுத்தும் வாழ்க்கை முறைகள் மற்றும் பயிற்சிகள்:

இன்றைக்கு உள்ள ஒர்க் ப்ரம் ஹோமில் பலர் நாள் முழுவதும் உட்கார்ந்த இடத்திலேயே பணிபுரிவார்கள். இந்த செயல்முறை தான் உங்களுக்கு எதிரியாக அமைகிறது. எனவே உங்களது உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்வதற்கு விளையாட்டுகளில் கொஞ்சம் ஈடுபட வேண்டும். நடைபயிற்சி, ஏரோபிக் பயிற்சி, நடனம், சைக்கிள் ஓட்டுதல், யோகா போன்றவற்றில் ஈடுபாடு காட்ட வேண்டும். இந்த பயிற்சிகள் உங்கள் மூளைக்கான தசைகளை வலுப்படுத்த உதவியாக இருக்கிறது.
அல்சைமர் நோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்று தான் நீரிழப்பு. உடலில் நீரேற்றம் குறைவதால் உயிரணுக்களில் நீர் அளவு குறைவதோடு நச்சுப்புரதங்கள் வெளியேறுவதையும் தடுப்பதோடு மூளையில் பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே தினமும் குறைந்தது 1 முதல் 2 லிட்டர் வரை தண்ணீர் அருந்துவதை மறந்துவிடாதீர்கள்.
உங்களின் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கக்கூடிய புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும். இல்லையென்றால் அல்சமைர் அபாயத்தை 10 மடங்கு அதிகரிக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஹெல்த்லைன் அறிக்கையின் படி, பல ஆராய்ச்சியாளர்கள் மன அழுத்தத்திற்கும் அல்சைமர் நோய்க்கும் இடையே தொடர்பைக் கண்டறிந்துள்ளனர். இதோடு நாள்பட்ட மன அழுத்தம் நம் உடலில் உள்ள பல உயிரியல் பாதைகளைப் பாதிக்கிறது.
தூக்கமின்மையும் மறதி நோய்க்கு முக்கிய காரணமாக அமைகிறது. எனவே நல்ல தூக்கம் உங்களது மூளையின் செயல்திறனை அதிகரிக்கிறது. எனவே நல்ல தூக்கம் அவசியம்
முக்கியமாக வயதானக்காலத்தில் தனியாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும், நண்பர்களுடன் அரட்டையடிப்பது, ஜாலியாக அமர்ந்து உணவருந்துவது போன்றவற்றை வயதான பின்னரும் நீங்கள் மேற்கொண்டால், அல்சைமர் நோயின் அபாயங்கள் குறைக்கின்றன என்கிறது சில ஆராய்ச்சி முடிவுகள்.
உங்களது வீட்டில் உள்ள 60 முதல் 65 வயதைக்கடந்த வயதானவர்கள் வழக்கத்தை விட நினைவிழப்பு அதிகமாக இருப்பதை உணந்தால், உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Alzheimer Disease, Brain Health, Mental Health