ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சளி , இருமல் பிரச்சனைகளிலிருந்து நுரையீரலை பாதுகாக்கும் வழிகள்..!

சளி , இருமல் பிரச்சனைகளிலிருந்து நுரையீரலை பாதுகாக்கும் வழிகள்..!

நுரையீரல் பாதுகாப்பு

நுரையீரல் பாதுகாப்பு

பொதுவாக நுரையீரல் தொற்று மாசினால் தான் அதிகளவில் ஏற்படுகிறது. இதற்கு அடுத்தப்படியாக குளிர். எனவே இவை இரண்டில் இருந்தும் நுரையீரலைப் பாதுகாக்க மாஸ்க் அணிவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

“நுரையீரல் தொற்று“.. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக நாம் கேட்ட மிகவும் பிரபலமான வார்த்தைகளில் ஒன்று. ஆம் கொரோனா தொற்று நம்மை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கிய நிலையில், பல உயிரிழப்புகள் ஏற்பட்டது நுரையீரல் தொற்றினால் தான். அதுவும் குளிர்காலமான அக்டோபர் – நவம்பரில் மிகுந்தப் பாதிப்புகளை நாம் சந்திக்க நேர்ந்தது. சாதாரண சளி, இருமல் மற்றும் காய்ச்சல் என்றாலே குளிர்காலத்தில் பல்வேறு இன்னல்களை நாம் சந்திப்போம்.

அதுவும் ஆஸ்துமா, ஒவ்வாமை, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சில தீவிர நுரையீரல் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். எனவே குளிர்காலம் தற்போது தொடங்கி விட்ட நிலையில் நுரையீரலை எப்படி பாதுகாக்க வேண்டும்? செய்ய வேண்டிய வழிமுறைகள் எல்லாம் என்னென்ன என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

நுரையீரலைப் பாதுகாக்கும் வழிமுறைகள்:

தூசியைத் தவிர்த்தல்:

பொதுவாக நுரையீரல் தொற்று மாசினால் தான் அதிகளவில் ஏற்படுகிறது. இதற்கு அடுத்தப்படியாக குளிர். எனவே இவை இரண்டில் இருந்தும் நுரையீரலைப் பாதுகாக்க மாஸ்க் அணிவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

காற்றின் தரத்தைக் கண்காணித்தல்:

நீங்கள் வெளியில் செல்லும் போது உங்களால் முடிந்தால் AQI (Air Quality Index) என்ற காற்றுத் தரக்குறியீட்டைப் பயன்படுத்துங்கள். இது உங்கள் நுரையீரலைப் பாதுகாக்க உதவியாக இருக்கும். Plume Labs, Air Matters மற்றும் Airlief போன்ற இணையதளத்தின் மூலம் மாசின் அளவை தெரிந்து கொள்ள முடியும்.

Also Read : கணையத்தில் புற்றுநோய் ஏற்பட்டால் உடலில் என்னென்ன அறிகுறிகள் தென்படும்..?

குளிர்காற்று உள்ளே செல்லாதவாறு பாதுகாத்தல்:

குளிர்காலத்தில் ஈரப்பதான காற்று உங்கள் உடம்பிற்குள் செல்லாமல் இருப்பதற்காக மூக்கு, வாய் பகுதியை துணியால் நன்கு மூடிக்கொள்ள வேண்டும். இதோடு ஆஸ்துமா மற்றும் வீசிங் பிரச்சனை இருந்தால் அதற்கான மருத்துகளை குறிப்பாக இன்ஹேலர்களை எப்போதும் வெளியே செல்லும் போது நிச்சயம் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

காற்று சுத்திகரிப்பானைப் பயன்டுத்துதல்:

நீங்கள் வசிக்கும் நகரத்தின் காற்றின் தரம் மோசமாக இருப்பதால் HEPA ஃபில்டர்கள் மற்றும் ஈரப்பதமூட்டிகள் கொண்ட சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்தலாம்.

புகைப்பிடிப்பதை தவிர்த்தல்:

புகை பிடிப்பது உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்பதால் நுரையீரலைப் பாதுகாக்க புகைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

Also Read : இந்த அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து... பக்கவாதம் குறித்து எச்சரிக்கும் மருத்துவர்கள்..!

இவ்வாறு மேற்கொள்வதன் மூலம் குளிர்காலத்தில் நுரையீரல் பிரச்சனைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.இதோடு துளசி, ஆடோதொடா, தூதுவளை போன்ற மூலிகைகளை நீங்கள் உபயோகிக்க வேண்டும். குறிப்பாக துளசியில் உள்ள இம்யூனோமோடூலேட்டரி, ஆன்டிடூசிவ் மற்றும் எக்ஸ்பெக்டோரண்ட் பண்புகள் உள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

இதோடு சுவாச பயிற்சிகளை மேற்கொள்வதையும் நீங்கள் வழக்கமாக்கி கொள்ள வேண்டும். கபல்பார்தி மற்றும் பாஸ்த்ரிகா இரண்டு சுவாச பயிற்சிகள் உங்களது நுரையீரலை வலுப்படுத்தவும், சுவாச நோய்களிலிருந்து பாதுகாக்கவும் பெரும் உதவியாக உள்ளது.

Published by:Sivaranjani E
First published:

Tags: Cold, Fever, Lungs health