ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே தடுக்க கூடிய சிறந்த வழிகள்...

சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே தடுக்க கூடிய சிறந்த வழிகள்...

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

முட்டை, கோழி மற்றும் பருப்பு வகைகளில் இருந்து வரும் புரதம், சிறந்த கிளைசெமிக் கட்டுப்பாட்டை உறுதிசெய்து, உங்களின் பசியை திருப்திப்படுத்துகிறது. கார்போஹைட்ரேட்டுகளுடன் புரதங்களை உட்கொள்வது இன்சுலின் செயல்பாடு மற்றும் இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில், நீரிழிவு நோயின் பாதிப்பு அதிவேகமாக வளர்ந்து வருகிறது. உலக அளவில் தற்போது சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது பெரிய நாடு இந்தியா என்பது அதிர்ச்சி அளிக்க கூடிய தகவலாக உள்ளது. சர்க்கரை நோய் என்பது வயது, பாலினம், இனம், மரபணுக்கள் போன்ற பல்வேறு காரணிகளால் ஏற்பட்டாலும், இந்த எண்ணிக்கை முக்கியமாக ஆரோக்கியமற்ற உணவு முறைகள் மற்றும் வாழ்க்கை முறைகளால் உருவாகிறது. எனவே, இந்த பதிவில் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளைத் தடுக்க எளிதான மற்றும் மிகவும் பயனுள்ள வழிகளை பற்றி பார்க்கலாம்.

எடை குறைப்பு : உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழலின் மாற்றங்கள், ஆகியவற்றின் காரணமாக சர்க்கரை நோய் ஏற்படுகிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே சர்க்கரை நோய் பாதிப்பு அதிகம் உள்ளது. உடல் பருமன் விஷயத்தில் அசாதாரண உடல் கொழுப்பு காரணங்களால் இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்படலாம். இது தான் சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும். எனவே, உடல் எடையை மிகவும் ஆரோக்கியமாகவும் படிப்படியாகவும் குறைப்பதன் மூலம் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.

கார்போஹைடிரேட் : சர்க்கரை நோய் என்றாலே எல்லா வகையான கார்போஹைட்ரேட்டுகளும் மோசமானவை அல்ல. பொதுவாக, நமது உடல் ஆற்றலுக்கு 60% - 65% கார்போஹைட்ரேட் தேவைப்படும். எனவே, சரியான கார்போஹைட்ரேட்டுகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துவது முக்கியம். முழு தானியங்கள், காய்கறிகள் மற்றும் நட்ஸ்களிலிருந்து வரும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் நார்ச்சத்து நிறைந்தவை. அவை மெதுவாக ஜீரணமாகி, திடீர் ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் இரத்த சர்க்கரையை படிப்படியாக அதிகரிக்கின்றன. எனவே, இது உங்கள் இன்சுலின் உற்பத்தியை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.

புரதங்கள் : முட்டை, கோழி மற்றும் பருப்பு வகைகளில் இருந்து வரும் புரதம், சிறந்த கிளைசெமிக் கட்டுப்பாட்டை உறுதிசெய்து, உங்களின் பசியை திருப்திப்படுத்துகிறது. கார்போஹைட்ரேட்டுகளுடன் புரதங்களை உட்கொள்வது இன்சுலின் செயல்பாடு மற்றும் இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும்.

தசை ஆரோக்கியத்திற்கு : கார்டியோ அல்லது எடைப் பயிற்சி போன்ற எந்த வகையான உடல் பயிற்சிகளும் தசை செல்கள் குளுக்கோஸின் சிறந்த பயன்பாட்டை உறுதி செய்கிறது. மேலும், இது இரத்த குளுக்கோஸ் அளவையும், இன்சுலின் உற்பத்தியையும் மேம்படுத்துகிறது. ஆதலால், வாரத்திற்கு குறைந்தது 5 நாட்கள் 40-50 நிமிட உடல் பயிற்சிகளை செய்து வருவது நல்லது.

உங்கள் உணவைத் திட்டமிடுங்கள் : இது வழக்கத்திற்கு மாறான ஆலோசனையாக இருந்தாலும், "உங்கள் உணவைத் திட்டமிடுவது" சர்க்கரை நோயை குறைப்பதற்கான ஒரு சிறந்த வழியாகும். சீரற்ற உணவுகளை சாப்பிடுவது, உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை தான் சர்க்கரை நோய் இல்லாத வாழ்க்கையை தரும். எனவே எப்போதும் உங்கள் உணவை பழக்கத்தை திட்டமிடுவது அவசியம். இதற்காக தினமும் சிறிது நேரத்தையும் ஒதுக்குங்கள்.

First published:

Tags: Diabetes, Type 2 Diabetes