உடலில் நீர் கோர்த்து இருக்கிறது, ‘தண்ணி உடம்பு’, அதிக எடை இல்லை ஆனால் தோற்றம் கொஞ்சம் பருமனாக இருக்கிறது என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். உடல் எடை என்று வரும் போது, ‘வாட்டர் வெயிட்’ என்று தண்ணீரின் எடையும் அதில் சேர்ந்திருக்கும். குறிப்பாக, உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு இதைப் பற்றி நன்றாகத் தெரியும்.
இந்த நிலையில் உடலில் அதிகப்படியாக தண்ணீர் சேர்ந்திருக்கும். அது மட்டுமல்லாமல் உடலில் இருக்கும் தண்ணீரின் அளவை வெளியேற்றினால்தான் எடை குறைக்க முடியும். உடலில் நீர் கோர்த்து இருக்கிறது, எனவே தண்ணீர் தேவைப்படாது என்று நினைப்பதும் தவறு. நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு விடும். அதே நேரத்தில் தண்ணீர் போதுமான அளவு குடித்தால் கூட, உடல் எடை அதிகரிக்கும். இவ்வாறு ஒரு சிலருக்கு உடலில் நீர் கோர்த்துக் கொள்ளும் பிரச்சனை இருக்கிறது. இதற்கு என்ன காரணம் மற்றும் இதை எவ்வாறு குறைப்பது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
மனித உடலில் 60% தண்ணீர் நிரம்பி இருக்கிறது. எனவே இந்த தண்ணீரின் அளவு ஒவ்வொரு நாளுக்கும் ஒன்று அல்லது இரண்டு கிலோக்கள் வரை வித்தியாசப்படும். எனவே நீங்கள் வியர்வை வழியாக, சிறுநீர் வழியாக, உடல் உழைப்பின் மூலமாக ஒரு நாளைக்கு எவ்வளவு இழக்கிறீர்களோ, அதற்கு ஏற்றார் போல எடை மாறும்.
ஒரு சிலருக்கு வியர்த்துக் கொட்டிக் கொண்டே இருந்தால் கூட உடல் பருமன் ஆக காணப்படும். ஆனால், இவர்களுக்கு பெரும்பாலும் தண்ணீரால் தான் அதிக எடை இருக்கும். அதாவது உடலில் நீர் கோர்த்துக் கொண்டிருக்கிறது என்று கூறுவதால் தான் எடை அதிகமாக இருக்கிறது. தேசிய மருத்துவ நூலகம், இதற்கு முக்கிய காரணமாக கிட்னி செயல்பாடுகளில் உள்ள பிரச்சனைகள், இதய நோய் பாதிப்பு, மலச்சிக்கல் மற்றும் உடலுக்கு உழைப்பு இல்லாமல் இருப்பது ஆகியவற்றைக் கூறுகிறது.
உடலில் ஏன் அதிகப்படியான நீர் சேர்கிறது என்பதற்கான காரணங்கள்:
உணவுப் பழக்கங்கள்: அதிகப்படியான உப்பு உள்ள உணவுகள் சாப்பிட்டால் உடலில் நீர் அதிகமாக சேரும்.
ஊட்டச்சத்து குறைபாடு: உடலில் நீர் சரியான அளவில் இருக்க வேண்டும் என்றால், போதிய அளவுக்கு மக்னீஷியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் தேவை.
மாதவிடாய் சுழற்சி: பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னும் பின்னும், வயிறு உப்பசம் முதல் உடல் நீர் சேரும் பிரச்சனைகள் வரை ஏற்படும்.
Also Read : உட்கார்ந்து எழுந்தாலே கால் மரத்து போகிறதா..? இந்த குறைபாடுதான் காரணம்..!
உடல் ரீதியான செயல்பாடுகள் இல்லாமல் இருப்பது: உடலுக்கு உழைப்பே இல்லை என்றால், ரத்த ஓட்டம் மற்றும் ஆக்சிஜன் ஓட்டம் சரியாக இருக்காது. அதே போல, உடலில் உள்ள திரவங்களும் அங்கங்கே தேங்கி விடும்.
இதயம் மற்றும் கிட்னி சார்ந்த நோய்கள்: சிறுநீர் கழிப்பதில் பிரச்சனைகள் இருந்தால், உடலில் நீர் சேர்ந்து பருமனாக தோன்றுவீர்கள். இது கிட்னி பிரசச்சனையைக் குறிக்கிறது. அதே போல, இதய பாதிப்புகள் இருந்தாலும், ரத்த ஓட்டம் மற்றும் ஆக்சிஜன் ஓட்டம் தடைபட்டு நீர் தேங்கி விடும்.
மேலும், ஒரு சில மருந்துகளால், உடலில் நீர் கோர்த்துக் கொள்ளும்.
உடலில் உள்ள அதிகப்படியான நீர் வெளியேற தீர்வுகள்
* தினசரி உடற்பயற்சி செய்ய வேண்டும். உடல் உழைப்பு இருந்தால், திரவங்கள் தேங்காமல் எடையை கட்டுக்குள் வைக்க முடியும்
* உப்பு மற்றும் அதிக மாவுச் சத்து உள்ள உணவைக் குறைக்க வேண்டும்
* தினமும் போதிய அளவு தூங்க வேண்டும். தூக்கமின்மை கூட கிட்னி செயல்பாட்டை பாதித்து, நீர் தேங்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவ ஆய்வு கூறுகின்றது.
* மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை தண்ணீர் எடையைக் குறைக்க சிறந்த ஊட்டச்சத்துக்களாகும். குறிப்பாக, மக்னீஷியத்தில் உள்ள எலக்ட்ரோலைட் உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Water, Weight loss