Coronavirus : கொரோனா மூன்றாம் அலை பாதிப்பை எவ்வாறு தடுப்பது..? தொற்றுநோயியல் நிபுணரின் விளக்கம்

கொரோனா மூன்றாவது அலை

மக்கள் எல்லா நேரங்களிலும் முகக்கவசங்களை அணிந்து கொள்ள வேண்டும் மற்றும் வெளியே செல்லும்போது அல்லது கும்பல் இருக்கும் இடத்தில், பொது இடங்களில் சமூக விலகலை காட்டாயம் பராமரிக்க வேண்டும்.

  • Share this:
கொரோனாவின் இரண்டாம் அலை பாதிப்புகள் இந்தியாவில் குறைந்துவருவதை தொடர்ந்து, 3வது அலை பாதிப்பு குறித்த கவலைகள் அனைவரின் மனதிலும் இருக்கிறது. ஏனெனில், இதுவரை குழந்தைகளை பெரிதும் பாதிக்காத வைரஸ், 3ம் அலைகளின் போது அவர்கள் பரவலாக பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் 2ம் அலையை காட்டிலும் 3ம் அலையில் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் என்ற பொது சுகாதார பள்ளியின் தொற்றுநோயியல் நிபுணர் வரவுள்ள மூன்றாவது அலையை தடுக்க அல்லது குறைந்தபட்சம் கட்டுப்படுத்த நாம் ஒவ்வொருவரும் எடுக்கக்கூடிய எளிய மற்றும் முக்கியமான வழிமுறைகள் குறித்து பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவரிடம் நடத்திய ஒரு ஆன்லைன் நேர்காணலின் போது ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கூறியதாவது, அடிப்படை இனப்பெருக்க விகிதத்தை அதிகரிக்கும் நான்கு காரணிகளை முதலில் அடையாளம் காண்பதன் மூலம் கொரோனா வைரஸ் பரவத் தொடங்குகின்றன. மேலும் இதனை அவர் R நம்பர் என்று குறிப்பிட்டார். இதன் மூலம் வைரஸ் ஒரு அலையை உருவாக்கும்.

R எண் என்பது தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களையும் அவர்களின் தொடர்பால் பரவும் பாதிப்புகளின் எண்ணிக்கையையும் குறிக்கிறது. ஒருவேளை R = 1.5 என்றால், வைரஸ் 100 பேர் முதல் 150 பேரை அதிகம் பாதிக்கும் என்று அர்த்தம். மேலும் வைரஸ் தனது இனப்பெருக்க விகிதத்தை அதிகரிப்பதற்கான முக்கிய நான்கு காரணிகளை ‘DOTS’ என சுருக்கி விளக்கியுள்ளார்.* D என்பது தொற்றுநோய்களின் காலம். (D- “the duration of infectiousness”)

* O என்பது பரவுவதற்கான வாய்ப்புகளின் எண்ணிக்கையை குறிக்கிறது. அதாவது ஒரு சிறிய எண்ணிக்கையிலான நபர்களால் பலர் பாதிக்கப்படும் சூப்பர்-பரவல் நிகழ்வுகள். (O - the number of opportunities for transmission)

* T என்பது பரிமாற்றத்தின் நிகழ்தகவு (T - the probability of transmission)

* S என்பது தொற்றுநோயால் பாதிக்கப்படக்கூடிய மக்கள்தொகையின் விகிதம் (S - population susceptible to infection)

தி வயர் பத்திரிகையில் செய்தியாளர் கரண் தாப்பருடன் 25 நிமிட நேர்காணலில் கலந்து கொண்ட டாக்டர் பிரையன் வால், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் இந்தியா இன்ஸ்டிடியூட் கோவிட் -19 ரெஸ்பான்ஸ் டாஸ்க் ஃபோர்ஸ் உறுப்பினர் ஆவார். அதில் அவர் கூறியதாவது DOTS-ஐ உருவாக்கும் நான்கு காரணிகளில் ஏதேனும் ஒன்று மற்றொரு அலைகளைத் தடுக்கலாம் அல்லது கட்டுப்படுத்தலாம் என்று விவரித்தார்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

இதன் பொருள் மக்கள் எல்லா நேரங்களிலும் முகக்கவசங்களை அணிந்து கொள்ள வேண்டும் மற்றும் வெளியே செல்லும்போது அல்லது கும்பல் இருக்கும் இடத்தில், பொது இடங்களில் சமூக விலகலை காட்டாயம் பராமரிக்க வேண்டும். காய்கறி மார்க்கெட்டுகளில் கூடுவது முதல் அரசியல் பேரணிகள் வரை பெரிய கூட்டங்களை நாம் தவிர்க்க வேண்டும் என்றும் டாக்டர் வால் கூறினார். பெரிய எண்ணிக்கையிலான உட்புறக் கூட்டங்களை விட பொதுவெளியில் நடத்துவது பாதுகாப்பாக இருந்தாலும் அவை தவிர்க்கப்பட வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். 

எல்லா நேரங்களிலும் நல்ல காற்றோட்டத்தின் அவசியம் மிக முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார். மேலும் காற்றுச்சீரமைக்கப்பட்ட அறைகளில் கூட, மக்கள் தொடர்ந்து காற்றோட்டத்தை உறுதி செய்வதற்காக கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்து வைக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார். இருப்பினும், டெல்லி மற்றும் மகாராஷ்டிரா அரசாங்கங்கள் மால்கள் மற்றும் உணவகங்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்கியது குறித்து அவரிடம் கேட்டபோது அவர் ஒரு தெளிவான பதிலை அளிக்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல பிரிட்டன் வழங்கிய இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தளர்வுகளின் போது உணவகங்களில் உட்புறத்தில் அமர்ந்து உணவருந்த அனுமதித்திருப்பது கவனிக்கத்தக்கது. முதல் கட்டமாக உணவகங்கள் டெலிவரி அல்லது அவுட்டோர் மூலம் உணவு வழங்குவதை கடைபிடிப்பதன் மூலம் நோயை கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் டெல்லி மற்றும் மும்பையில் 50% நபர்களுடன் உணவகங்களில் அமர்ந்து உணவு சாப்பிடலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும்போது செய்யும் இந்த தவறுகள் உங்கள் பாதிப்பை மேலும் தீவிரமாக்கும் என்பது தெரியுமா..?

அதே நேரத்தில், பாதிக்கப்படக்கூடிய மக்களின் எண்ணிக்கையை குறைக்க இந்திய அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் டாக்டர் வால் பேசினார். முதலாவதாக, இந்த மக்கள்தொகையின் எண்ணிக்கையை அடையாளம் காண "நன்கு வரையறுக்கப்பட்ட செரோ-பரவல் கணக்கெடுப்பு" தேவை என்று அவர் கூறினார். இது நாடு முழுவதும் ஒரே மாதிரியாக விநியோகிக்கப்படாததால், கணக்கெடுப்பு அதன் இருப்பிடத்தையும், அதில் ஏதேனும் பெரிய பாதிப்புகள் இருக்கிறதா என்பதையும் அடையாளம் காண வேண்டும்.இரண்டாவது கட்டம் வெகுஜன நோய்த்தடுப்பு ஆகும். ஜூன் 15ம் தேதி நிலவரப்படி, இந்திய மக்கள்தொகையில் 3.7% மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசிகளை பெற்றுள்ளது, கிட்டத்தட்ட 16% பேர் ஒன்றை டோஸ் தடுப்பூசியை மற்றும் பெற்றுள்ளனர். இறுதியாக, டெல்டா மாறுபாடு டெல்டா + அல்லது ஏ.ஒய் 1 எனப்படும் மிகவும் மோசமான வடிவமாக மாறியுள்ளது என்று பப்ளிக் ஹெல்த் இங்கிலாந்தின் சமீபத்திய கண்டுபிடிப்பைக் பற்றி குறிப்பிட்ட டாக்டர் வால், இந்தியா கணிசமாக மரபணு வரிசைமுறையை அதிகரிக்க வேண்டும். ஆனால் முகக்கவசத்தை அணிவது, சமூகத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை செயல்படுத்துவதன் மூலம் பரவலை கட்டுப்படுத்தலாம் என்று கூறியுள்ளார்.

 
Published by:Sivaranjani E
First published: