பருவமழை காலம் தன்னுடன் கூடவே பாக்டீரியா தொற்று உள்ளிட்ட பல நோய்களையும் அழைத்து வருகிறது. மழைக்கால ஈரப்பதம் செரிமான அமைப்பை வெகுவாக குறைக்கிறது மற்றும் நுண்ணுயிர் வளர்ச்சி, பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் செழிப்பாக வளர ஏற்ற பருவமாக இருக்கிறது.
இதன் விளைவாக அசிடிட்டி, உப்பசம், அஜீரணம், இரைப்பை குடல் அழற்சி, ஆசிட் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD) போன்ற இரைப்பை பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மழை சீசனில் இரைப்பை குடல் நோய் பிரச்சனைகள் கணிசமாக அதிகமாக இருக்கும். எனினும் நாம் எளிதாக தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம் என்கிறார் பிரபல மருத்துவர் சாந்தி ஸ்வரூப். மழை சீசனில் அதிக ஈரப்பதத்துடன் பாக்டீரியாக்கள் அதிகமாக வளர்வதோடு, நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பல மடங்கு அதிகரிக்கும் என்று எச்சரிக்கிறார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் அதற்கு அவர் அளித்துள்ள பதில்களை கீழே பார்க்கலாம்.
மழைக்காலத்தில் செரிமான அமைப்பு ஏன் மந்தமாகிறது, ஏன் கவனமாக இருக்க வேண்டும்?
பருவமழை என்பது வளிமண்டலத்தை ஈரப்பதமாக்குகிறது. எனவே இந்த சீசனில் காணப்படும் அதிக ஈரப்பம் காரணமாக பாக்டீரியாக்கள் அதிக அளவில் பெருகி, தொற்றுகள் பரவும் வாய்ப்புகள் பல மடங்கு அதிகரிக்கும். சில நேரங்களில் இந்த தொற்றுகள் குறிப்பிடத்தக்க தீவிர மருத்துவ நோயை ஏற்படுத்தக்கூடும், சில நேரங்களில் அவை அசௌகரியத்தை ஏற்படுத்தும். இடைவிடாத மழை மக்களை வீடுகளுக்குள்ளேயே கட்டுப்படுத்துவதால் உடல் செயல்பாடு குறைவதும் மற்றொரு காரணம். மழை காலத்தில் செரிமான அமைப்பு பாதிக்கப்படுவது என்பது கொழுப்பு, எண்ணெய் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதோடு தொடர்புடையது. இது செரிமான அமைப்பின் செயல்பாட்டை மெதுவாக்குகிறது.
ஏற்கனவே இரைப்பை குடல் நோய்கள் உள்ளவர்கள் மழை சீசனில் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள்?
பல இரைப்பை குடல் நோய்கள் நாள்பட்டவை. அழற்சி குடல் நோய், நாள்பட்ட டிஸ்ஸ்பெசியா மற்றும் அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி ஆகியவை இதில் அடங்கும். அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சியில், தொற்று மீண்டும் மீண்டும் இருக்கலாம் மற்றும் நாள்பட்ட டிஸ்ஸ்பெசியாவில், சிறிய தொற்றுகள் வலுவான அறிகுறிகளை தூண்ட கூடும்.
இரைப்பை குடல் நிலையின் தீவிரத்தை சுயமாக கண்டறிந்து கொள்ளலாமா?
எப்போதும் எடுத்து கொள்ளும் செரிமான மாத்திரையை சாப்பிட்ட பிறகு வயிற்றில் ஏற்பட்ட அசௌகரியம் குறைந்தால் பயப்பட தேவை இல்லை. குறையாவிட்டால் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். ஏனென்றால், பல நோய்கள் ஒன்றையொன்று பிரதிபலிக்கின்றன, உதாரணமாக இதய நோய் பாதிப்புகளை சிலர் இரைப்பை நோயாக உணரலாம். எனவே எப்போதும் ஒரு நபர் சுயமாக நிர்வகித்து கொள்ள முயல வேண்டாம் என்பது என் பரிந்துரை.
மலச்சிக்கலை பருவமழை அதிகரிக்குமா?
மலச்சிக்கலை பருவமழை தூண்டாது என்றாலும் தண்ணீர் குடிப்பதன் அளவு அல்லது உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது மலச்சிக்கலை மோசமாக்கலாம். ஏனென்றால் மலச்சிக்கல் ஏற்படுவதில் வாழ்க்கை முறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
ALSO READ | சர்க்கரையே இல்லாமல் ஐஸ்க்ரீம் செய்ய முடியுமா..? இதோ உங்களுக்கான ரெசிபி...
இர்ரிடெபிள் பவுல் சின்ட்ரோம் உள்ளவர்களை பருவமழை எவ்வாறு பாதிக்கிறது?
Irritable Bowel Syndrome ஒரு நாள்பட்ட நிலை, இதில் மக்களுக்கு ஏற்ற தாழ்வுகள் இருக்கும். இது ஏற்பட முக்கிய தூண்டுதல் உணவு. கொழுப்பு, எண்ணெய், வறுத்த மற்றும் காரமான உணவுகளை அதிகம் சாப்பிட்டால் அது IBS-ஐ தூண்டலாம். சுவாரஸ்யமாக மேகமூட்ட நாட்களில் நீண்ட நேரம் சூரிய ஒளி இல்லாமல் போவதால் கூட சிலருக்கு எரிச்சலூட்டும் குடல் கோளாறுகள் ஏற்படுகின்றன.
மரபணு ரீதியாக இந்தியர்கள் இரைப்பை குடல் நோய்த்தொற்றுக்கு ஆளாகிறார்களா?
இல்லை என்றே நான் நினைக்கிறேன். ஆனால் முறையான சுகாதாரம் நாடு முழுவதும் இல்லாத காரணத்தால் இந்தியர்கள் GI நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
காலரா, வயிற்றுப்போக்கு ஏன் தீவிரமாக இருக்கின்றன?
நகரங்களின் அளவு அதிகரிப்பு மற்றும் மக்களுக்கு இடமளிப்பதற்கான உள்கட்டமைப்பு இல்லாததன் விளைவாக இருக்கலாம். மக்களுக்கு போதிய குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி இல்லை என்றால், தண்ணீரால் பரவும் நோய்கள் அதிகரிக்கும். ஆன்டிபயாடிக்ஸ் கண்மூடித்தனமாக பயன்படுத்தப்படுகின்றன மற்றும் தனிநபர்களிடையே ஆண்டிபயாடி எதிர்ப்பின் அதிகரிப்பு இந்த நோய்களின் தீவிரத்தை அதிகரிக்கிறது.
ALSO READ | எளிமையாக செய்யக்கூடிய சுவையான ஜப்பானிய டோஃபு உணவுகள் இதோ..
மழைக்காலத்தில் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் :
குறிப்பான உணவு முறை எதுவும் இல்லை, ஆனால் ஆரோக்கியமாக சாப்பிடுங்கள். தெரு உணவு போன்ற தொற்றுகளை உண்டாக்கக்கூடியவற்றை தவிர்த்து கொள்ளுங்கள். மழைக்காலத்தில் சுத்தமான தண்ணீரை குடிப்பது மிகவும் முக்கியம்.
ஃபில்ட்டர் தண்ணீர் பற்றி..
ஃபில்ட்டர் தண்ணீரை பற்றி பேசுகையில், வெவ்வேறு ஃபில்ட்டர்கள் வெவ்வேறு போரோசிட்டிகளை கொண்டிருப்பதால், அது பயன்படுத்தப்படும் ஃபில்ட்டரின் வகையை பொறுத்தது. எனவே மிகவும் பயனுள்ள மற்றும் நம்பகமான ஃபில்ட்டர் வகையை தேர்ந்தெடுக்கவும். ஒரு தொற்று என்பது ஃபில்ட்டர் வழியாக செல்லும் உயிரினங்களின் வகையை பொறுத்தது. குடிநீர் தரத்தை பூர்த்தி செய்யாது என்பதால் taps-ல் வழங்கப்படும் தண்ணீரை ஒரு நபர் தவிர்ப்பது நல்லது. தொற்றுகளை தடுக்க சில அளவு ஃபில்ட்ரேஷன் மற்றும் வாட்டர் ட்ரீட்மென்ட் முக்கியமானது. ஆக மொத்தம் குடல் தொற்றுகளை தடுக்க ஃபில்ட்டர் செய்யப்பட்ட நீரின் தரத்தை கவனிப்பது அவசியம்.
மழைக்கால வாழ்க்கைமுறை மாற்றங்கள் :
தவறாமல் உடற்பயிற்சி, போதுமான திரவங்கள் மற்றும் ஆரோக்கியமான சாப்பாடு உள்ளிட்டவை அடிப்படை. அதே நேரம் அதிகமாக சாப்பிட வேண்டாம், கொழுப்பு மற்றும் எண்ணெய் உணவுகளை தவிர்க்கவும், மது மற்றும் புகைப்பழக்கத்தை குறைக்கவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.