முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் ஆரம்பகால அறிகுறிகள் எப்படி இருக்கும்..? உடனே செய்ய வேண்டியது என்ன..?

நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் ஆரம்பகால அறிகுறிகள் எப்படி இருக்கும்..? உடனே செய்ய வேண்டியது என்ன..?

தொற்று நோய் என்றாலே உயிர் போய்விடுமோ என்று அச்சப்படும் அளவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இரண்டு ஆண்டுகளாக உலகையே ஆட்டி வைத்தது. வைரஸ் தொற்று எந்த அளவுக்கு ஆபத்தானதோ, பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றும் தீவிரமானவை. பொதுவாக, காசநோய் முதல் வெண்குஷ்டம் வரை பெரும்பாலான உயிர்கொல்லி நோய்கள் பாக்டீரியாவால் தான் ஏற்படுகின்றன.

தொற்று நோய் என்றாலே உயிர் போய்விடுமோ என்று அச்சப்படும் அளவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இரண்டு ஆண்டுகளாக உலகையே ஆட்டி வைத்தது. வைரஸ் தொற்று எந்த அளவுக்கு ஆபத்தானதோ, பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றும் தீவிரமானவை. பொதுவாக, காசநோய் முதல் வெண்குஷ்டம் வரை பெரும்பாலான உயிர்கொல்லி நோய்கள் பாக்டீரியாவால் தான் ஏற்படுகின்றன.

நுரையீரல் பாதிப்பு அல்லது தொற்று இருந்தால் மூச்சு விடுவதில் சிரமம் மட்டுமின்றி, நெஞ்சு வலுயும் ஏற்படும்.

  • Last Updated :

கோவிட்-19 தொற்று பாதிப்பு ஏற்படத் தொடங்கியதிலிருந்தே நுரையீரல் ஆரோக்கியம் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ரெஸ்பிரேட்டரி ஹெல்த் பலவிதங்களில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டாலும், தீபாவளிக்கு பிறகு காற்றின் மாசு கணிசமான அளவு அதிகரித்துள்ளதால் நுரையீரல் கூடுதலாக பாதிப்படையும் சாத்தியமும் ஏற்பட்டுள்ளது.

மூச்சு விடுவதில் சிரமம் மட்டுமின்றி நெஞ்சு வலியால் சமீபத்தில் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏன் நுரையீரல் ஆரோக்கியத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் என்று சிந்திக்கலாம். நுரையீரல் மிகவும் எளிதாக தொற்று பாதிப்புக்கு உள்ளாகும் தன்மை கொண்டது. வைரஸ், பாக்டீரியா மற்றும் ஃபங்கஸ் தொற்றால் நுரையீரல் பாதிப்படையலாம். ஆனால், எல்லா பாதிப்புமே தீவிரமானதாக இருக்காது என்றாலும், சிலவற்றை நாம் அப்படியே கண்டுகொள்ளாமல் விட முடியாது. சில நேரங்களில் தானாகவே சரியாகக் கூடிய தன்மையைக் கொண்ட தொற்று, பல நேரங்களில் தீவிரமான நோயை ஏற்படுத்தும் அபாயமும் கொண்டுள்ளது. உங்களுக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு இருக்கிறதா என்பதைப் பற்றி பின்வரும் அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

தொடர்ச்சியான இருமல் மற்றும் சளி :

தொற்று பாதிப்பு ஏற்பட்டால், தொடர்ச்சியாக இருமல் மற்றும் சளி உண்டாகும். சுவாசக்குழாய் மற்றும் நுரையீரலில் உள்ள பாதைகளில் அழற்சி ஏற்பட்டு சளி உருவாவதால் அதை வெளியேற்றுவதற்காக இருமலும் சளியும் தொடர்ச்சியாக காணப்படும். அது மட்டுமின்றி, இவை தவிர நோய்களான பிரான்கிடிஸ் மற்றும் நியூமோனியா ஆகிய இரண்டுக்குமான அறிகுறிகள் ஆகும். சில நேரங்களில் சளி மற்றும் இருமலில் ரத்தம் வெளியேறலாம். சளி பச்சை, மஞ்சள் அல்லது நீல நிறத்தில் காணப்படலாம். இவ்வாறு இருந்தால், நீங்கள் உடனே மருத்துவரிடம் உங்களுக்கு என்ன பிரச்சனை என்பதைக் கண்டறிந்து, சரியான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் நெஞ்சு வலி :

நுரையீரல் பாதிப்பு அல்லது தொற்று இருந்தால் மூச்சு விடுவதில் சிரமம் மட்டுமின்றி, நெஞ்சு வலுயும் ஏற்படும். ஆனால், இந்த இரண்டு அறிகுறிகளும், நுரையீரல் நோய்க்கானது மட்டுமல்ல. இதய பாதிப்பு இருந்தாலும், இந்த இரண்டு அறிகுறிகளும் காணப்படும். எனவே நீங்கள் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசித்து, சரியான சிகிச்சை பெற வேண்டும். அதே போல, தீவிரமான நுரையீரல் தொற்று இருந்தால், வீசிங் எனப்படும் பாதிப்பும் ஏற்படும்.

டெங்கு காய்ச்சலில் இருந்து விரைவில் குணமடைய உதவும் வீட்டு வைத்தியங்கள்..

குளிர் காய்ச்சல், உடல் சோர்வு :

பொதுவாக ஜுரம், தலைவலி, சளி என்று வரும் போது ஓரளவுக்கு நீங்களே சமாளித்துக் கொள்ள முடியும். ஆனால், தீவிரமான உடல் சோர்வு, குளிர் தாங்கிக்கொள்ள முடியாத நிலை மற்றும் காய்ச்சல் இருந்தால், அவை நுரையீரல் தொற்றின் அறிகுறிகள் ஆகும்.

நுரையீரல் தொற்று சிகிச்சை :

நுரையீரல் தொற்று என்பதை உறுதி செய்த பின், மருத்துவர் என்ன வகையான தொற்று என்பதைக் கண்டறிந்து அதற்கு ஏற்றார் போல மருந்துகளை அளிப்பார். பாக்டீரியா தொற்று இருந்தால், ஆன்டிபையாடிக்ஸ் மருந்துகளை உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார். அதே போல, பூஞ்சை தொற்றால் பாதிக்கபட்டிருந்தால், ஆன்டி-ஃபங்கல் மருந்துகள் பரிந்துரை செய்வார்.

ஆனால், மருந்துகள் எதுவும் வைரஸ் தொற்றுக்கு பயன்தராது. உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பே வைரஸ் தொற்றை எதிர்த்து போராடி தொற்றை நீக்கும். இவை மட்டுமின்றி, உங்களுக்கு இருக்கும் அறிகுறிகளுக்கு ஏற்ப கூடுதல் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். உதாரணமாக, உங்களுக்கு வீசிங் பாதிப்பு இருந்தால், நெபுலைசர் சிகிச்சை செய்யலாம்.

வீட்டிலேயே செய்யக்கூடிய எளிதான சிகிச்சை முறைகள் :

வீட்டிலேயே நீங்கள் செய்யக்கூடிய சிறிய சிகிச்சை முறைகள் உங்கள் அறிகுறிகளின் தாக்கத்தைக் குறைத்து, தொற்றிலிருந்து விரைவாக நிவாரணம் பெற உதவுகிறது.

* நிறைய தண்ணீர் மற்றும் சூடான திரவங்கள் / திரவ உணவுகள் உட்கொள்ள வேண்டும்

* போதிய ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்

* ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்

* தினசரி ஓரிரு முறை நீராவி பிடிக்கலாம்

top videos

    * புகைபிடிக்கக் கூடாது மற்றும் புகை பிடிப்பவர்கள் அருகில் இருப்பதை தவிர்க்க வேண்டும்

    First published:

    Tags: Health tips, Lungs health