முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இளைஞர்களை குறிவைக்கும் இதய செயலிழப்பு.. என்ன காரணம்.? இந்த அறிகுறிகளில் அலட்சியம் வேண்டாம்.!

இளைஞர்களை குறிவைக்கும் இதய செயலிழப்பு.. என்ன காரணம்.? இந்த அறிகுறிகளில் அலட்சியம் வேண்டாம்.!

early signs of heart failure in adults

early signs of heart failure in adults

இதய செயலிழப்பு கொண்ட நபருக்கு மிகுந்த உடல் சோர்வு ஏற்படும் மற்றும் சுவாசிக்க இயலாது. உடலில் மிகுதியான நீர்ச்சத்து சேர்ந்து கொள்ளும். இதனால் உடல் வீக்கமாக காட்சியளிக்கும் மற்றும் உடல் எடை அதிகரிக்கும்.

  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நம் உடலின் அனைத்து பாகங்களுக்கும் ரத்த விநியோகம் செய்வதில் இதயம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் உறுப்புகளின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வைக்கிறது. ஆனால், இதய நோய் ஏற்படும் பட்சத்தில் ரத்த விநியோகம் செய்யும் திறன் குறைந்து விடுகிறது. இதன் எதிரொலியாக உடல் பாகங்களின் தேவைகளை எதிர்கொள்ள முடியாத சூழல் ஏற்படுகிறது. இறுதியாக இதய செயலிழப்பு ஏற்படுகிறது.

இதய செயலிழப்பு கொண்ட நபருக்கு மிகுந்த உடல் சோர்வு ஏற்படும் மற்றும் சுவாசிக்க இயலாது. உடலில் மிகுதியான நீர்ச்சத்து சேர்ந்து கொள்ளும். இதனால் உடல் வீக்கமாக காட்சியளிக்கும் மற்றும் உடல் எடை அதிகரிக்கும். பாதங்கள் வீங்க தொடங்கும். வயிற்றில் இரைச்சல் உணர்வு ஏற்படும். நெஞ்சுப் பகுதியில் நீர் கோர்த்து நிற்கும் என்பதால், மல்லாக்க படுக்கும்போது அவர்களுக்கு மூச்சுவிட சிரமமாக இருக்கும்.

இதே நிலை தொடர்ந்தால், சாதாரணமாக அன்றாட பணிகளை செய்வது கூட கடினமாகிவிடும். மூச்சு விடுவதற்கு சிரமப்படுகின்ற நபருக்கு துரிதமாக எழுந்து நிற்பது, கழிவறை செல்வது போன்ற காரியங்கள் சிரமமாக இருக்கும். மேலும் பேசும்போது கூட மூச்சு வாங்கும்! மூச்சு இழுக்காமல் முழுமையாக பேசி முடிக்க இயலாது.

இதய நோய்கள் காரணமாக இதயம் பாதிப்படையும் அல்லது பலவீனம் அடையும். இறுதியாக இதய செயலிழப்பு ஏற்படும். இதயத்திற்கு ரத்தத்தை விநியோகம் செய்கின்ற ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதே இதுபோன்ற நோய்க்கான பொதுவான காரணம் ஆகும். இதனால் ஹார்ட் அட்டாக் மற்றும் இதய தசைகளில் பாதிப்பு போன்றவை ஏற்படும்.

Also Read : ஆண்கள் தங்களின் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க இதை பின்பற்றுங்கள்!!

நீரிழிவு, ஹைப்பர்டென்சன் போன்ற பாதிப்புகள் காரணமாக இதய தசைகள் நேரடியாக பாதிக்கப்படும். இதனால், ரத்தக் குழாய் நோய்கள் மற்றும் ஹார்ட் அட்டாக் போன்றவை ஏற்படும். பழுதடைந்த ரத்தக் குழாய் காரணமாக நாளடைவில் இதய செயலிழப்பு ஏற்படும். மது அருந்துதல், மையோகார்டிடீஸ் என்னும் வைரஸ் தொற்று பிரச்சினை, புற்றுநோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகள் போன்ற பல காரணங்களால் இதய தசைகள் பலவீனம் அடையும்.

சில சமயம் மிகுதியாக உணர்ச்சிவசப்படுவது அல்லது உடல் ரீதியாக நெருக்கடிகளை எதிர்கொள்வது போன்ற காரணங்களால் இதய தசை பலவீனம் அடையும் மற்றும் இதனால் இதய செயலிழப்பு ஏற்படும். சில நபர்களுக்கு பிறவியிலேயே இதயத்தில் குறைபாடுகள் இருக்கும். அதன் காரணமாகவும் இதய செயலிழப்பு ஏற்படும்.

பரிசோதனை முறை

உடல் ரீதியிலான பரிசோதனைகள், சில ரத்தப் பரிசோதனைகள், எக்ஸ்-ரே, இசிஜி மற்றும் எகோகார்டியோகிராம் போன்ற பரிசோதனைகள் மூலமாக இதய நோய்கள் மற்றும் இதய செயலிழப்பு போன்றவற்றை கண்டறிய முடியும். சில சமயம் சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ பரிசோதனைகள் தேவைப்படலாம்.

இதய நோயால் பாதிக்கப்படும் பெரும்பாலான நோயாளிகளுக்கு வாய்வழி மருந்துகளே போதுமானதாக இருக்கிறது. சில சமயம் மருத்துவமனையில் சேர்த்து, ஊசி செலுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது. சிலருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கலாம். சில நபர்களுக்கு மருந்துகள் வேலை செய்யாது. அதை இதய செயலிழப்பு என்று குறிப்பிடலாம். ஆனால், இதுபோன்ற நோயாளிகளுக்கும் கூட இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம்.

இதய மாற்று அறுவை சிகிச்சை

மூளைச்சாவு அடைந்த நோயாளிகளிடம் இதயத்தை தானமாக பெற்று, இதய மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ளலாம். இதற்குப் பிறகு சில கட்டுப்பாடுகள் மற்றும் மருந்துகளுடன் ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லலாம்.

Also Read : அடிக்கடி நெஞ்சு சுருக் சுருக்னு வலிக்குதா?... உஷார் மாரடைப்பு அறிகுறியா இருக்கலாம்.. இதய நோய் பற்றி தெரிஞ்சிக்கோங்க..!

இன்றைய தினம் இதய மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்படுகிறது. ஒருவேளை கொடையாளரின் இதயமானது, கொடை பெறுபவருக்கு பொருந்தவில்லை என்றால் செயற்கை இதயம் கூட பொருத்தலாம். இந்த சிகிச்சையை இந்தியாவின் முன்னணி மருத்துவமனைகளில் பெற முடியும்.

வருமுன் காப்பதே சிறந்தது

இதய செயலிழப்பிற்கு தீர்வு காண பல சிகிச்சை முறைகள் இருக்கின்றன என்றாலும் கூட, வருமுன் காப்பதே சிறந்த தீர்வாகும். முடங்கி கிடக்காமல் சுறுசுறுப்பாக செயல்படுவது, தினசரி உடற்பயிற்சிகளை செய்வது, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது, புகை, மது பழக்கங்களை கைவிடுவது போன்றவை மூலமாக இந்த பாதிப்பை தவிர்க்கலாம்.

ஹைப்பர்டென்சன், உடல் பருமன், அதிக கொலஸ்ட்ரால், கட்டுப்பாடு இல்லாத நீரிழிவு போன்ற பிரச்சினைகளை தவிர்க்க வேண்டும். யோகா, தியானம் போன்றை நல்ல பலனை தரும்.

First published:

Tags: Health Checkup, Healthy Life, Heart attack, Heart disease, Heart Failure, Heart health