• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Cardiac Arrest | நிலைகுலைய செய்யும் மாரடைப்பு! இந்த எச்சரிக்கை அறிகுறிகளை கவனிக்காம விட்றாதீங்க..!

Cardiac Arrest | நிலைகுலைய செய்யும் மாரடைப்பு! இந்த எச்சரிக்கை அறிகுறிகளை கவனிக்காம விட்றாதீங்க..!

கார்டியாக் அரெஸ்ட் எற்படும் போது இதயத் துடிப்பு மிக வேகமாக அல்லது மெதுவாக இருக்கும்.

  • Share this:
வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் பல்வேறு காரணங்களால் இதயம் தொடர்பான சிக்கல்கள் சமீப காலமாக அதிகரித்து காணப்படுகின்றன. வயது வித்தியாசமின்றி இதயம் அரோக்கியம்  தொடர்பான கோளாறுகள் ஏற்படுவதற்கு சமீபத்தில் காலமான நடிகை மந்த்ரா பேடியின் கணவர் ராஜ் கவுசல் மரணம் மற்றும் கால்பந்தாட்ட மைதானத்தில் மயங்கி விழுந்து இதய நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்ற டேனிஷ் கால்பந்து வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் ஆகியோர் உதாரணம்.

ஏனென்றால், மந்த்ரா பேடியின் கணவருக்குக்கு கிட்டத்தட்ட 50 வயது. விளையாட்டு வீரர் கிறிஸ்டியன் எரிக்சனின் வயதோ வெறும் 29 தான். இருவருக்குமே கார்டியாக் அரெஸ்ட் என்ற இதய கோளாறு கண்டறியப்பட்டுள்ளது. கார்டியாக் அரெஸ்ட் மற்றும் ஹார்ட் அட்டாக் என 2 பாதிப்புகளையும் ஒன்று என பலர் நினைத்து கொள்கின்றனர். ஆனால் இவை இரண்டிற்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. ஹார்ட் அட்டாக் (மாரடைப்பு) என்பது இதயத்தசைக்குச் செல்லும் ரத்த விநியோகத்தில் ஏற்படும் தடைபடுவதால் நிகழ்வது. ஆனால் கார்டியாக் அரெஸ்ட் (இதய நிறுத்தம்) என்பது இதயம் துடிப்பது முற்றிலுமாக நின்று விடுகிறது.

இதயத்தை ரீஸ்டார்ட் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதயத்தை திறம்பட பம்ப் செய்யும் நடைமுறையில் ஏற்படும் தடையின் விளைவாக திடீரென இதயம் ரத்த ஓட்டத்தை இழக்க நேரிடுகிறது. மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு கீழ் இதயவறையில் குறுநடுக்கம் தோன்றி இதய நிறுத்தம் ஏற்படலாம். ஆனாலும் பெரும்பாலான மாரடைப்பு கோளாறு இதய நிறுத்தமாக மாறாது. இளைஞர்களோ அல்லது வயதானவர்களோ கார்டியாக் அரெஸ்ட் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படும் என்பதால், கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுவதற்கான எச்சரிக்கை அறிகுறிகளை பற்றி நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

கவனிக்க வேண்டிய அவசர அறிகுறிகள்:

சரியான நேரத்தில் செயல்படாவிட்டால் உயிருக்கு ஆபத்தானதாக மாறக்கூடிய இதய கோளாறுகளில் ஒன்று கார்டியாக் அரெஸ்ட். நமது இதய துடிப்பானது மின் தூண்டுதல்களால் (electrical impulses) கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த மின் தூண்டுதல்கள் அவற்றின் பேட்டர்னை மாற்றும் போது, ​​இதயத் துடிப்பு ஒழுங்கற்றதாகி, அசாதாரண ரிதத்துடன் இதயம் துடிக்கும் அரித்மியா நிலைக்கு வழிவகுக்கும். ஒருகட்டத்தில் இதயத்தின் ரிதம் நிறுத்தப்படும் போது, ​​இதய நிறுத்தும் ஏற்படுகிறது அதாவது இதயத் துடிப்பு நின்றுவிடும். இதய நிறுத்தம் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றை வேறுபடுத்திப் பார்க்க கூடிய சில அறிகுறிகளை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.

கார்டியாக் அரெஸ்ட் எற்படும் போது இதயத் துடிப்பு மிக வேகமாக அல்லது மெதுவாக இருக்கும், இதயம் தனது பம்ப்பிங்கை நிறுத்துகிறது. இது மாரடைப்பு போலில்லாமல் ஒரு அவசர நிலை ஆகும். கார்டியாக் அரெஸ்ட் என்பதற்கான மிகமுக்கிய 2 எச்சரிக்கை சுயநினைவிழந்து நீண்ட நேரம் மயக்கத்தில் இருப்பது மற்றும் தொடர்ச்சியான மார்பு வலி.

ஒரு நோயாளி திடீரென்று தலைசுற்றி மயக்கமடைந்து சுயநினைவை இழப்பது இதய துடிப்பு தொடர்பான அறிகுறியாக இருக்கலாம். தவிர அவர்களின் இதயத் துடிப்பு மிக வேகமாகவோ அல்லது மெதுவாகவோ இருக்கலாம். இவை தவிர உழைப்பின்றி ஓய்வில் இருக்கும் போது கூட அடிக்கடி மார்பு வலிப்பது போன்ற உணர்வும் ஏற்பட கூடும். இந்த அறிகுறிகள் காணப்பட்டால் நோயாளிகள் உடனடியாக ஒரு ஈ.சி.ஜி செய்து கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். தொடர்ச்சியாக அடைப்பு கண்டறியப்பட்டால் ஆஞ்சியோகிராஃபி செய்து அடைப்பை சரி செய்யலாம்.

ஃபிட்டாக இருப்பவர்கள் அல்லது இளம் வயதினருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுவது ஏன்?

இளம் வயதினர் மயக்கமடைந்து அவர்களுக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுவதற்கு பொதுவான அறிகுறிகளில் ஒன்று மரபணு கோளாறு ஆகும். தனிநபருக்கு இருக்கும் மரபணு குறைபாடு அவரது இதயத்தில் மின் அசாதாரணத்தை (electrical abnormality ) ஏற்படுத்த கூடும். இது அவருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட காரணமாக இருக்கிறது. நிறைய தடகள விளையாட்டில் ஈடுபடும் நபர்களின் இதயம் விரிவாக்கப்பட்ட இதயம் (enlarged heart) என்று கூறப்படுகிறது. இத்தகைய நபர்களுக்கு இதயத் துடிப்பு பிரச்சனைகள் ஏற்பட கூடும். இவர்களது இதயத்துடிப்பு திடீரென அதிகரிக்கலாம். குறிப்பாக ஒரு தொழில்முறை விளையாட்டு வீரர் பல ஏரோபிக் விளையாட்டுகளை விளையாடினால், அவருக்கு இதய சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே அனைத்து தொழில்முறை விளையாட்டு வீரர்களும் ஈ.சி.ஜி மற்றும் எக்கோ சோதனைகளுக்கு தங்களை அவ்வப்போது உட்படுத்தி கொள்வது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுவதற்கான வாய்ப்பை தடுக்கும் சில வழிகள்:

கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை நீங்கள் தவிர்க்க விரும்பினால், ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருப்பது அவசியம். சத்தான, குறைந்த எண்ணெய், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். ஆரோக்கியமற்ற உணவுகள், உடல் எடை மற்றும் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்களை தவிர்த்து விடுவது நல்லது. உடலுழைப்பு மிகவும் முக்கியமான ஒரு அம்சம். உடலுக்கு வேலை கொடுப்பது நம்மை மிகவும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் முக்கியமான வழிகளில் ஒன்று.

குறிப்பாக புகை மாற்று மதுப்பழக்கம் இதய சிக்கல்களை அதிகரிக்கும் என்பதால் இவற்றை அறவே ஒதுக்க வேண்டும். உங்கள் குடும்ப மருத்துவரிடம் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும். மேலும் அவர் பரிந்துரைக்கும் வழியில் குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்கள் இதய ஆரோக்கியத்தை பற்றி தெரிந்து கொள்ள வழக்கமான சில டெஸ்ட்களை செய்து கொள்ள வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கார்டியாக் அரெஸ்ட் ஏற்படும் நபருக்கு உடனடியாக Cardiopulmonary resuscitation எனப்படும் சி.பி.ஆர் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள நபரின் மார்பின் நடுவில் (மார்பக எலும்பில்) இரு கைகளையும் ஒன்றாக இணைத்து வைத்து கொள்ள வேண்டும். மார்பின் மையத்தில் ஹார்டாகவும், வேகமாகவும் அழுத்த வேண்டும். இது மார்பை ஒரு அங்குலத்திற்கு உள்நோக்கி நகர்த்தும். ஒரு நிமிடத்திற்கு 100 முறை என்ற விகிதத்தில் அழுத்த விடும். மேலும், அமுக்குவதற்கு இடையே மார்பு முழுவதுமாக உயர அனுமதிக்க வேண்டும். மருத்துவ உதவி கிடைக்கும் வரை பாதிக்கப்பட்ட நபருக்கு இந்த சிபிஆர் உதவியை தொடர வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: