Home /News /lifestyle /

“நமக்கு அஜீரணம் தானே“ என அலட்சியமாக இருக்காதீங்க... அது மாரடைப்பின் எச்சரிக்கையாக இருக்கலாம்

“நமக்கு அஜீரணம் தானே“ என அலட்சியமாக இருக்காதீங்க... அது மாரடைப்பின் எச்சரிக்கையாக இருக்கலாம்

மாரடைப்பு

மாரடைப்பு

உலக சுகாதார அமைப்பின் தகவலின் படி, உலகளவில் ஏற்படும் அதிகளவிலான உயிரிழப்பிற்கு இதய நோய்கள் தான் காரணம் எனக்கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் 17.9 மில்லின் பேர் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.

நெஞ்செரிச்சல், வாந்தி மற்றும் குமட்டல், மார்பு வலி, அசௌகரியம், அஜீரணம் போன்றவையெல்லாம் ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறிகளாகும்.

இன்றைக்கு மாறிவரும் வாழ்க்கை முறையால், பெரும்பாலான மக்கள் பல்வேறு உடல் நலப்பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக நீரழிவு, மாரடைப்பு, சிறுநீரகப் பிரச்சனைகள் என அடுக்கிக்கொண்டே போகலாம். உலக சுகாதார அமைப்பின் தகவலின் படி, உலகளவில் ஏற்படும் அதிகளவிலான உயிரிழப்பிற்கு இதய நோய்கள் தான் காரணம் எனக்கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் 17.9 மில்லின் பேர் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.

குறிப்பாக சிறு வயதினர் கூட இதய நோயினால் உயிரிழப்பதற்கு காரணம், நம்மிடத்தில் உள்ள அலட்சியம் தான் காரணம் என கூறப்படுகிறது. உதாரணமாக நாம் காலை அல்லது மதிய உணவை உட்கொண்டபிறகு மார்பு பகுதியில் அசௌகரியமான நிலையை உணர்வோம். இதற்கு நம்முடைய உணவு தான் காரணம் என அலட்சியமாக எடுத்துக்கொள்வோம். ஆனால் அவையெல்லாம் மாரடைப்பு ஏற்படுவதற்காக அறிகுறிகள் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

எனவே அஜீரணம் தானே என புரிந்துக்கொள்ளும் மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து இங்கே அறிந்து கொள்வோம். பொதுவாக மார்பு வலி மற்றும் அஜீரணம் போன்ற இரண்டிற்கும் ஏற்படும் வலிகள் பொதுவானதாக இருக்கும் என்பதால், மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ECG போன்வற்றை மேற்கொள்ள வேண்டும். பின்னர் மருத்துவர்கள் தெரிவிக்கும் தகவலையடுத்து நீங்கள் எந்த பிரச்சனைகளால் அவதிப்படுகிறீர்கள்? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.



மார்பு வலி மற்றும் அசௌகரியம்:

Harvard Health Publishing ன் கூற்றுப்படி, மார்பு எலும்பில் தொடங்கும் எரியும் நெஞ்செரிச்சல் நெஞ்சு வலியின் அறிகுறிகளாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதேப்போன்று அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் தெரிவிக்கும் தகவலின் படி, பெரும்பாலான மாரடைப்புகள் மார்பின் மையத்தில் சில நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் அசௌகரியத்தை ஏற்படும். ஆனால் சில நிமிடங்களில் வலி இருக்காது. ஆனால் இரண்டு நிலைகளும் மார்பு பகுதியில் அசௌகரியமான நிலையை நமக்கு ஏற்படுத்தக்கூடும். எனவே நாம் கவனமுடன் இருக்க வேண்டும். எனவே இந்நேரத்தில், மாரடைப்பிற்கான சில பொதுவான அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து இங்கே அறிந்து கொள்ளலாம்.

உயர் கொலஸ்டிரால் காரணமாக உங்கள் உடலில் இந்த வலிகள் தோன்றலாம்

மாரடைப்பின் பொதுவான அறிகுறிகள்:

மூச்சு திணறல் :

அதிகப்படியான வியர்வை மற்றும் பதட்டமான மனநிலை :

திடீரென கடுமையாக ஏற்படும் மார்பு வலி.. இவைகளுக்கு நாம் ஆன்டாக்சிட்களை உட்கொண்டாலும் அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் இவையெல்லாம் மாரடைப்பின் முக்கிய அறிகுறிகள் என நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.



மாரடைப்பைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் காரணங்கள்:

இன்றைக்கு உள்ள உணவு முறைகளால் நமக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டாலும் நம்முடைய சுயகட்டுப்பாடுகளும் முக்கியம் என கூறப்படுகிறது. பொதுவாக தற்போது அதிகரித்து வரும் இதய நோய் பிரச்சனைகளுக்கு வயது , பரம்பரை, பாலினம், புகைப்பிடித்தல் , குடிப்பழக்கம், போதைப்பொருள் உபயோகிப்பது போன்றவை காரணமாக அமைகிறது. இதோடு உயர் இரத்த கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவையும் மாரடைப்புக்கான முக்கிய காரணங்களாக கூறப்படும் நிலையில், நம்முடைய வாழ்க்கை முறை கொஞ்சம் மாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

மரணத்தை ஏற்படுத்தும் மூளைக்கட்டி வர என்ன காரணம்..? யாருக்கெல்லாம் வரக்கூடும்..?

குறிப்பாக உடல் எடையைக் கட்டுப்பாடோடு வைக்க வேண்டும், அதிக மன அழுத்தம் ஏற்படும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். இதோடு ஆரோக்கியமான ஊட்டச்சத்துள்ள உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டும். மேலும் தினமும் உடற்பயிற்சி செய்வது உங்களின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருப்பதோடு நீண்ட ஆயுளை உங்களுக்கு ஏற்படுத்தும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Heart attack, Heart disease

அடுத்த செய்தி