உலக அளவில் ஏற்பட கூடிய இறப்புகளில் மாரடைப்பு என்பது மிக முக்கிய காரணமாக உள்ளது. உலக சுகாதார அமைப்பின்படி (WHO), 2016 ஆம் ஆண்டில் 17.9 மில்லியன் மக்கள் இதயம் சார்ந்த பாதிப்புகளால் இறந்துள்ளனர். இது உலகளாவிய இறப்புகளில் 31% ஆகும். இந்த இறப்புகளில், 85% பேர் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக இறந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மற்ற நோய்களை போன்று இல்லாமல் மாரடைப்பு என்பது திடீரென தாக்கும் பாதிப்பாக உள்ளது. மேலும் சில அறிகுறிகள் தோன்றினாலும், அவை அஜீரணம் அல்லது நெஞ்செரிச்சல் போன்ற பொதுவான ஒன்றை கொண்டதாக நாம் தவறாக கருதிவிடுகிறோம்.
எச்சரிக்கை அறிகுறிகள் :
பெரும்பாலான மாரடைப்பு மார்பின் மையத்தில் அல்லது இடது பக்கத்தில் அசௌகரியத்தை தர கூடியதாக உண்டாகும். இது ஒரு சில நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் அல்லது சிறிது நிமிடத்திற்கு சென்று விட்டு மீண்டும் வரும். அழுத்தம், இதய பகுதியில் பிடிப்பு அல்லது வலி போன்றவற்றை மாரடைப்பின் முதற்கட்ட அறிகுறியாக உணரலாம். மேலும், பலவீனமாக உணர்தல், லேசான தலை வலி அல்லது மயக்கம் போன்ற அறிகுறிகளும் இதில் அடங்கும். அதே போன்று, மாரடைப்பின் அறிகுறிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வேறுபடலாம் என்று அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (AHA) கூறுகிறது.
ஆண்களைப் போலவே, பெண்களுக்கும் மிகவும் பொதுவான மார்பு வலி (ஆஞ்சினா) அல்லது அசௌகரியம் உண்டாகலாம். ஆனால் மற்ற பொதுவான அறிகுறிகளில் சிலவற்றையும் அவர்களுக்கு ஏற்படலாம். குறிப்பாக மூச்சுத் திணறல், குமட்டல், வாந்தி, முதுகு அல்லது தாடை போன்ற சில பொதுவான அறிகுறிகளை ஆண்களை விட பெண்கள் அதிகம் அனுபவிக்கிறார்கள்.
காது மூலம் ஏற்படும் அறிகுறிகள் :
மாரடைப்பை காது மூலம் உண்டாகும் அசாதாரண அறிகுறிகள் மூலம் அடையாளம் காணலாம். இது ‘ஃபிராங்க்ஸ் சைன்’ என்று அழைக்கப்படுகிறது, இது காது மடலில் உண்டாக கூடிய மடிப்பு போன்ற உணர்வாகும். இந்த நிலைக்கு சாண்டர்ஸ் டி. ஃபிராங்க் என பெயரிடப்பட்டுள்ளது. மார்பு வலி மற்றும் கரோனரி தமனி அடைப்பு உள்ள நோயாளிகளுக்கு முதன்முதலில் இதை டி. ஃபிராங்க் என்பவர் கண்டறிந்ததால் இப்பெயர் வைக்கப்பட்டது. இது இதய நோயுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.
மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்..? கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்...
மேலும் இந்த ஃபிராங்கின் சைன் அறிகுறி என்பது பெருமூளைச் சிதைவுகளை முன்னறிவிப்பதாக இருக்கலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதன் தீவிரமானது நிலை 1 முதல் நிலை 3 வரை மாறுபடும். நிலை 1 என்பது காது மடலில் ஒரு சிறிய அளவு சுருக்கத்தை உண்டாக்க கூடும். நிலை 2a என்பது காது மடல் முழுவதும் மேலோட்டமான மடிப்புகளை அறிகுறியாக கொண்டதாக இருக்கும். நிலை 2b என்பது காது மடலில் பாதிக்கு மேல் விரிந்து, இறுதியாக நிலை 3 எனப்படும் காது மடல் முழுவதும் ஆழமான மடிப்பை உருவாக்க கூடிய ஒன்றாக இருக்கும்.
மாரடைப்பு மாறுபாடு
இளம் ஆண்கள் மற்றும் பெண்களை விட 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்களுக்கும், 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கும் மாரடைப்பு அபாயம் அதிகம் உள்ளது. கூடுதலாக, உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, உடல் பருமன், நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்ற பாதிப்புகள் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
நெஞ்சு எரிச்சலால் அவதிப்படுகிறீர்களா..? உடனே சரி செய்ய உதவும் வீட்டு வைத்தியங்கள்...
மாரடைப்பு அபாயத்தைத் தடுக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். சத்தான உணவு, வழக்கமான உடற்பயிற்சி, மற்றும் பிற சுகாதார வழிமுறைகளை பின்பற்றி வந்தால் இதய நோய்களை உருவாக்கும் வாய்ப்புகளை குறைக்கமுடியும். மேலும், இதயம் தொடர்பான சில பாதிப்புகளுக்கு நீங்கள் முன்னதாகவே மருந்துகளை எடுத்துக் கொண்டால், அதை தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.