உடல் எடையை குறைக்க பலர் தற்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். அதிலும் உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் ஃபாஸ்டிங் செய்வது, மிக குறைவாக சாப்பிடுவது, தினசரி முன்று வேளைக்கு பதிலாக 2 அல்லது ஒரு வேளை உணவு சாப்பிடுவது, டயட் உணவு முறையை பின்பற்றுவது என பல்வேறு எடைஇழப்பு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், ஆரம்பகட்டத்தில் இந்த எடை குறைப்பு முயற்சியில் பலர் தீவிரமாக ஈடுபட்டாலும், நாளடைவில் ஆரோக்கியமான டயட் உணவுகளை கடைபிடிப்பதை நிறுத்துகின்றனர். மேலும் உணவு கட்டுப்பட்டால் விரக்தி அடைந்து மீண்டும் பழைய உணவுமுறைக்கு மாறிவிடுகின்றனர். ஏனெனில் அவர்களால் பசியை கட்டுப்படுத்த முடியாது. எடை குறைப்பு விஷயத்தில் எந்த ஒரு செயல்களையும் தொடர்ந்து சரியாக பின்பற்றாவிடில் உடல் எடையை குறைக்க முடியாது.
சில நேரங்களில் வெறும் பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்ட டயட் உணவை உட்கொள்வது கூட உங்களுக்கு அதிக பசியை ஏற்படுத்தலாம். இருப்பினும், எல்லா டயட் உணவுகளும் அப்படி இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். தினமும் சாப்பிடும் கார்போஹைட்ரேட் மற்றும் முழு தானிய உணவுகள் கூட எடை குறைப்புவிஷயத்தில் மிகவும் பயனுள்ளவையாகவும், ஆரோக்கியமானவையாகவும் இருக்கும். ஆனால் அவற்றை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே நீங்கள் உங்களுக்கு பிடிக்காத டயட் கட்டுப்பாட்டுக்கு மாறுவதற்கு பதிலாக இதுபோன்ற ஆரோக்கியமான மற்றும் விரைவில் உங்களுக்கு பழகும் டயட் முறையை ஃபாலோ பண்ணலாம்.
உடல் எடையை குறைப்பதற்கான சில முக்கியக் மந்திரம் பின்வருமாறு:
* உங்கள் அதிகரித்த பசியைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் பழகிக்கொள்ளுங்கள். இது வேகமான எடை இழப்புக்கு வழிவகுக்கும்.
* மேலும் உங்கள் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும்.
சரி, உங்களுக்கு விரைவில் சலித்து போகும் டயட்டிற்கு பதிலாக நீங்கள் உங்கள் தினசரி செயல்பாட்டை கண்காணித்தலே போதும். உடல் எடையை குறைத்துவிடலாம். அது எப்படி என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.
ஜிம்முக்கு போகாமலே உடல் எடையை இப்படியும் குறைக்கலாம்..
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை சாப்பிடுவதை குறைக்கவும்:
விரைவாக உடல் எடையை குறைக்க, முதலில் நீங்கள் செய்யவேண்டியது சர்க்கரை, மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவின் நுகர்வை குறைக்க வேண்டும். இது உங்கள் பசியைக் கட்டுப்படுத்தவும், இன்சுலின் அளவைக் குறைக்கவும், விரைவில் உடல் எடையை கட்டுப்படுத்தவும் உதவும்.
புரதம், ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள்:
புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், காம்ப்லெக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் பச்சை நிற காய்கறிகள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். உங்கள் தினசரி உணவில் புரதம், ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் காய்கறிகளைச் சேர்ப்பதன் மூலம் குறைந்த கலோரி மற்றும் நிறைய ஊட்டச்சத்துக்களை பெற முடியும். இதனால் உங்கள் எடையை சீராக பராமரிக்க முடியும்.
உடற்பயிற்சி:
எடையை குறைக்கும் விஷயத்தில் உடற்பயிற்சிக்கு முக்கிய பங்கு உண்டு. தினமும் சுமார் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது உங்கள் வளர்சிதை மாற்றத்தை சுறுசுறுப்பாக்கும். ஒருவேளை குறைந்த கலோரி கொண்ட உணவினை தினசரி சாப்பிட்டு உங்களது உடல் எடை குறையவில்லை என்றால், நீங்கள் தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
எந்த டயட்டையும் பாலோ பண்ணாமல், உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்க வேண்டுமா..? இதோ டிப்ஸ்!
நல்ல தரமான தூக்கம் வேண்டும்:
நீங்கள் தினமும் 6-7 மணிநேரம் நன்றாக தூங்க வேண்டும். நிம்மதியான தூக்கம் உங்களை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் உணர வைப்பதை தவிர பல நன்மைகளை தருகிறது. ஆய்வின்படி, மோசமான தூக்கம் எடை அதிகரிப்பதற்கான மிகப்பெரிய ஆபத்து காரணிகளில் ஒன்று என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
காபி அல்லது டீ குடிக்கலாம்:
தினசரி ஒரு குறிப்பிட்ட அளவு காபி அல்லது டீ குடிப்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும்.
வேகமாகவும், அவசரமாகவும் சாப்பிடக்கூடாது:
பொதுவாக உணவை சாப்பிடும் பொது அதனை பொறுமையாக ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். அதற்கு பின்னணி காரணம், அப்போது தான் அதன் சத்துக்கள் உடலை சேரும். எனவே உணவை சரியாக மென்று சாப்பிடுவது மிக முக்கியம். அப்படி நீங்கள் வேகவேகமாக சாப்பிடும் போது அது எடை அதிகரிப்பு பிரச்சனைக்கு வழிவகுக்கும். வளர்சிதை மாற்றத்தை கூட பாதிக்கலாம். மெதுவாக சாப்பிட்டால் உங்கள் உடலில் எடை குறைக்கும் ஹார்மோன்களை அதிகரிக்க முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fitness, Weight loss