சிறந்த வளர்ச்சிக்காக குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் மற்றும் வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு இருக்க வேண்டும் என் அனைவரும் விரும்புகிறோம். குழந்தைகள் ஊட்டமளிக்கும் உணவை தான் எடுத்து கொள்கிறார்கள் என்பதை உறுதி செய்வது முக்கியம்.
பெரும்பாலான குழந்தைகளுக்கு ஜங்க் ஃபுட் மீது பெரிதும் ஈர்ப்பு இருக்கிறது. குழந்தைகளிடம் இருக்கும் ஜங்க் ஃபுட் சாப்பிடும் பழக்கத்தை கட்டுப்படுத்த, துவக்கத்திலிருந்தே ஆரோக்கிய உணவு பழக்கங்களை உருவாக்க வேண்டும். குழந்தைகளை இயற்கையான, சத்தான உணவுகளை ரசித்து சாப்பிட வைத்து விட்டால் அவர்களுக்கு ஏற்படும் பல நோய்களை தவிர்க்கலாம்.
தேன், மஞ்சள், இஞ்சி, பூண்டு, எலுமிச்சை சாறு உள்ளிட்டவற்றை பேஸ்ட் செய்து ஃபிரிட்ஜில் வைத்து கொண்டு குழந்தையின் வயதை பொறுத்து, தினமும் காலை அரை டீஸ்பூன் அல்லது அதற்கும் குறைவான அளவு இந்த பேஸ்ட்டை கொடுப்பது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் என்கிறார் ஒரு நிபுணர். உணவு நிபுணர் டாக்டர். ஜோயல் ஃபுஹ்ர்மேன், "G-BOMBS" என்ற டயட் முறையை பரிந்துரைக்கிறார். இது ஆரோக்கியத்திற்காக தாவர அடிப்படையிலான உணவுகளை எடுப்பதாகும். புற்றுநோய் எதிர்ப்பு, நீரிழிவு எதிர்ப்பு மற்றும் நாள்பட்ட நோய்களை தடுக்க GBOMBS டயட் உதவுகிறது.
GBOMBS என்றால் என்ன?
G - க்ரீன்ஸ்:
பசுங்காய்கறிகள் மற்றும் கீரைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. இவை நமது ரத்த நாளங்களை பாதுகாக்கும் பொருட்கள் உள்ளன. நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது. பச்சை காய்கறிகளை சமைக்கும் போது, அதிக வெப்பம் காரணமாக அவற்றின் பண்புகள் போக கூடும்என்பதால், அவற்றை அதிகம் வேக வைக்க வேண்டாம் என்பது நிபுணரின் கருத்து.
B - பீன்ஸ்
பீன்ஸ் ஊட்டச்சத்தின் நல்ல மூலமாக உள்ளது. நீரிழிவு எதிர்ப்பு, எடை இழப்பு உணவு மற்றும் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது என பலவற்றுக்கு உதவுகிறது. இவற்றில் இருக்கும் கரைய கூடிய நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. பீன்ஸ், பட்டாணி அல்லது பருப்பு வகைகளை வாரத்திற்கு இரண்டு முறையாவது சாப்பிடுவது புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
O - ஆனியன்ஸ்:
வெங்காயம் அல்லியம் குடும்ப காய்கறிகளின் ஒரு பகுதியாகும். உணவுகளில் வெங்காயம் அதிகம் சேர்ப்பது இதய மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புகளில் சாதகமான விளவுகளை ஏற்படுத்தும். உடலில் நீரிழிவு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. மேலும் வெங்காயத்தை சேர்த்து கொள்வது இரைப்பை மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்க்கான குறைந்த அபாயத்துடன் தொடர்புடையது.
M - மஷ்ரூம்ஸ்:
மஷ்ரூம்ஸ் அதாவது காளான்களை தொடர்ந்து எடுத்து கொள்வது மார்பக, வயிறு மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கிறது. காளான்களை சமைத்து மட்டுமே சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். காட்டு காளான்கள் விஷமாக இருக்கலாம் என்பதால் அவற்றை உண்ண கூடாது.
B - பெர்ரிக்கள்:
பெர்ரிக்கள் மூளை வளர்ச்சிக்கு உதவ கூடியவை. ப்ளூபெர்ரிஸ் , ஸ்ட்ராபெர்ரிஸ் மற்றும் ப்ளாக்பெர்ரிஸ் உள்ளிட்ட பெர்ரிக்கள் சூப்பர் ஃபுட்கள் ஆகும். சுவையாக அதே சமயம் சத்துக்கள் அதிகமாக இருக்கும். இவை ஃபிளாவனாய்ட்ஸ் மற்றும் ஆக்ஸிஜனேற்ற வைட்டமின்கள் உள்ளிட்ட ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்துள்ளன.
S - சீட்ஸ்:
சீட்ஸ் மற்றும் நட்ஸ்களில் ஆரோக்கிய கொழுப்புகள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உட்பட பல நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஒவ்வொரு சீட்ஸ்களுக்கும் தனித்து ஊட்டச்சத்து மதிப்பு உள்ளது. ஆளி, சியா மற்றும் சணல் விதைகள் ஆரோக்கியமான ஒமேகா -3 கொழுப்புகளின் வளமான ஆதாரங்கள் ஆகும்.
Published by:Lilly Mary Kamala
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.