ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வால்நட்... தினமும் எவ்வளவு சாப்பிடலாம்..?

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வால்நட்... தினமும் எவ்வளவு சாப்பிடலாம்..?

வால்நட்ஸ்

வால்நட்ஸ்

வால்நட்டில் மோனோ அன்சாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் என்ற இரண்டு வகையான கொழுப்பு அமிலங்கள்

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சமீப காலமாக அனைவரையும் அச்சுறுத்தக்கூடிய மிகப்பெரிய உடல் நலக் கோளாறாக இதய நோய்கள் உருவாகி உள்ளன. யாரை, எப்போது, எந்த நேரத்தில் பாதிக்கும் என்பது தெரியாத அளவில் இதய நோய் இளைஞர்களை கூட தாக்கி வருகிறது. இதய நோய் பாதிப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அதிக கொலஸ்ட்ரால் மற்றும் முறையற்ற வாழ்க்கை முறை.

எனவே குறிப்பாக ரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் போது இதய நோய் பாதிப்புகள் ஏற்படக்கூடிய அபாயம் அதிகரிக்கின்றது. கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்து இதய நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் அற்புத உணவுகளில் ஒன்று வால்நட். வால்நட்டை தினமும் எவ்வளவு சாப்பிடலாம், வால்நட் சாப்பிடுவதால் எவ்வாறு இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

மூளையை பாதுகாக்கும் வால்நட் :

வால்நட் என்பது வட அமெரிக்காவை சேர்ந்த ஒரு சூப்பர் ஃபுட் என்று கூறப்படுகிறது. இதில் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் புரதம் ஆகியவை நிறைந்துள்ளன. இது மனிதர்களின் மூளையைப் போலவே காட்சியளிக்கிறது. மேலும், வால்நட் மனிதர்கள் மூளையின் செயல்பாட்டிற்கு, சுறுசுறுப்புக்கு, நினைவு மற்றும் நினைவாற்றலுக்கு என்று மூளையை ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவும் ஒரு சூப்பர் ஃபுட் ஆக கருதப்பட்டு வருகின்றது.

தினமும் வால்நட்ஸ் சாப்பிடுவது மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தி சிந்தனை திறனை வலுப்படுத்தும். சமீப காலத்தில் வால்நட் மூளை மட்டுமல்லாமல் இதயத்தையும் பாதுகாக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்கும் வால்நட் :

பொதுவாகவே, உடலுக்கு நல்ல கொழுப்பு மற்றும் கொழுப்பு அமிலங்கள் ஆகிய இரண்டுமே அத்தியாவசியமானவை. கொலஸ்ட்ரால் என்பது உடலுக்கு தேவையானது தான். ஆனால், அதில் இரண்டு வகை உள்ளன. கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் போது தான் கார்டியோவாஸ்குலர் நோய்கள் உருவாகி ஆபத்து ஏற்படுகிறது. இது மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஆகியவற்றை உண்டாக்குகிறது. அதே நேரத்தில், உடலில் இருக்கும் நல்ல கொழுப்புகளின் அளவு அதிகரிக்கும் பொழுது, கெட்ட கொலஸ்ட்ரால் இயற்கையாகவே குறைந்து இதய ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது.

வால்நட்டில் மோனோ அன்சாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் என்ற இரண்டு வகையான கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இரண்டுமே உடலில் இருக்கும் அதிக அடர்த்தியுள்ள கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்தை பாதுகாக்கிறது.

வால்நட் எவ்வாறு இதயத்தை பாதுகாத்து இதய நோய்கள் வராமல் தடுக்கும்?

பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிட்ட ஒரு ஆய்வின்படி தினசரி தோராயமாக 40 கிராம் வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தால் உங்கள் இதயம் இதய ஆரோக்கியம் மேம்படுவதோடு மட்டுமல்லாமல் இதய மேம்படுவதோடு மட்டுமல்லாமல் இதய நோய்களுக்கான ஆபத்து கிட்டத்தட்ட குறைந்துவிடும் என்பதை என்பது கூறப்பட்டுள்ளது இதனுடன் சேர்த்து வாரத்திற்கு நான்கு நாட்கள் பழங்களை உணவில் கணிசமான அளவு சேர்த்துக் கொண்டால் இதய நோய் உண்டாகும் ஆபத்து 37% வரை குறைகிறது என்பதை ஆய்வு வெளியிட்டுள்ளது.

Also Read : இதய நோய் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டுமா..? இந்த பரிசோதனைகளை அவசியம் செய்யுங்கள்..!

ஊட்டச்சத்துக்களின் தொகுப்பு என்று ஒருசில உணவுகள் கூறப்படும்; அந்த அளவுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும். அதில் வால்நட் ஒன்று. ஊட்டச்சத்துக்கள் மட்டும் அல்லாமல் வால்நட்டில் இருக்கும் மருத்துவ பண்புகள் உடலில் இருக்கும் அழற்சி, அதாவது வீக்கத்தை குறைத்து ரத்த நாளங்களின் செயல்பாடுகளை அதிகரிக்கும். இதன் மூலம் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

இதய ஆரோக்கியத்திற்கு ஒரு சில குறிப்பிட்ட உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பலவிதமான மருத்துவ ஆய்வுகள் தெரிவித்து வந்துள்ளன. அதில் தாவர அடிப்படையிலான ஒமேகா அமிலங்கள் வால்நட்டில் அதிகமாக இருப்பதால், வால்நட்டை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது இதய நோய் வராமல் பாதுகாக்கும் என்பதை சமீபத்திய ஒரு மருத்துவ ஆய்வு கண்டறிந்துள்ளது.

அமெரிக்கா இதய ஆய்வு மையம் தொடர்ந்து இதய நோய்கள் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது பற்றி ஆய்வை மேற்கொண்டு வரும் நிலையில், ஒரு வாரத்திற்கு எந்த அளவுக்கு சீட்ஸ் மற்றும் நட்ஸ் எடுத்துக் கொள்வது இதயத்தை பாதுகாக்கும் என்பதை பற்றிய விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளது. அதன் படி, வாரத்துக்கு மற்ற உணவுகளுடன், நான்கு அல்லது ஐந்து முறை நட்ஸ் உடன் வால்நட் சாப்பிடுவது இதே நோய் ஆபத்துகளை தடுக்கும் என்பதை வலியுறுத்தியுள்ளது.

வால்நட்டை தினசரி எவ்வளவு, எப்போது சாப்பிடலாம்?

வால்நட் எவ்வளவு ஆரோக்கியமானது என்பது தெரிந்து விட்டது; இப்பொழுது தினசரி எவ்வளவு வால்நட் சாப்பிடலாம் என்பதை பற்றி கேள்வி எழலாம். ஒரு கைப்பிடி அளவு வால்நட்டை தினமும் சாப்பிடுவது ஆரோக்கியமானது. ஒரு கைப்பிடி அளவு என்பது 25 கிராம் முதல் 40 கிராம் வரை வரும். அல்லது தினசரி 5-6 வால்நட்களை குறைந்தபட்சம் சாப்பிடுவது நல்லது.

வால்நட்டை மாலை நேரத்தில் சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் இருக்கும் PICO மெலடோனின் உங்கள் மூளை செயல்திறனை அதிகரித்து செரடோனின் அளவுகளை மேம்படுத்தும். இதன் மூலம் இரவில் உங்களுக்கு நன்றாக தூக்கம் வரும்.

Also Read : மார்பக புற்றுநோய் தொடர்பாகக் கூறப்படும் 5 கட்டுக்கதைகளும், உண்மைகளும்...

வால்நட்டை எப்படி சாப்பிடலாம்?

வால்நட்டை அப்படியே சாப்பிட விரும்புபவர்கள் 2 – 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடலாம். இதன் மூலம் செரிமான கோளாறு ஏற்படாமல் இருக்கும். அடுத்ததாக வால்நட்டை பொடிசெய்து பால் அல்லது வேறு ஏதேனும் பானத்தில் சேர்த்து குடிக்கலாம். பொடி செய்த வால்நட்டை தயிரில் கலந்து சாப்பிடலாம்.

வால்நட்டுக்கு தனியான, ஸ்ட்ராங்கான வாசனையும் சுவையும் இல்லை என்பதால் நீங்கள் எந்த உணவில் வேண்டுமானாலும் வால்நட்டை சேர்க்கலாம்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Health Benefits, Walnut