ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்கு வழக்கமான உடற்பயிற்சி அல்லது உடல் செயல்பாடு என்பது மிக அவசியம். அதிலும் நடைபயிற்சி, ரன்னிங் மற்றும் பிற வகையான கார்டியோ பயிற்சிகள் பல ஆரோக்கிய நன்மைகளை உங்களுக்கு தருகின்றன.
கார்டியோ உடற்பயிற்சிகள் மூலம் கிடைக்கும் நன்மைகள்
நடைபயிற்சி மற்றும் ரன்னிங் இரண்டும் ஏரோபிக் இருதய அல்லது “கார்டியோ” உடற்பயிற்சி என்றழைக்கப்படுகிறது.
கார்டியோ பயிற்சியின் சில ஆரோக்கிய நன்மைகள் பின்வருமாறு:
* உடல் எடையை குறைக்க அல்லது ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது
* ஸ்டாமினாவை அதிகரிக்கிறது
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
* நாட்பட்ட நிலைமைகளைத் தடுக்க அல்லது நிர்வகிக்க உதவுகிறது
* உங்கள் இதயத்தை பலப்படுத்துகிறது
* உங்கள் ஆயுளை நீட்டிக்க முடியும்
கார்டியோ உடற்பயிற்சி உங்கள் மன ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஒரு ஆய்வின் நம்பகமான தகவலின்படி, வாரத்திற்கு மூன்று முறை 30 நிமிட மிதமான தீவிர உடற்பயிற்சி கவலை மற்றும் மனச்சோர்வைக் குறைக்கிறது. இது உங்கள் மனநிலையையும் சுயமரியாதையையும் மேம்மபடுத்துகிறது.
அந்த வகையில் நடைபயிற்சி மற்றும் ரன்னிங் இரண்டுமே சிறந்த உடற்பயிற்சிகளாகும். ஆனால் இவற்றில் எவை உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்ற கேள்வி நம்மில் எழலாம். உங்கள் பிட்னஸ் மற்றும் சுகாதார குறிக்கோள்களைப் பொறுத்தே இதில் எதை கடைபிக்கலாம் என்பது தீர்மானிக்கப்படுகிறது. அதன்படி, எந்த உடற்பயிற்சியை நீங்கள் செய்தால் நல்லது என்பதை பற்றி பார்ப்போம்.
கலோரி குறைப்பு:
நீங்கள் அதிக கலோரிகளை எரிக்க அல்லது வேகமாக எடை குறைக்க விரும்பினால், ரன்னிங் செய்வது சிறந்த தேர்வாகும். அதேசமயம், நடைபயிற்சி உங்கள் உடல்நலத்திற்கு ஏராளமான நன்மைகளையும் அளிக்கும். இது ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது.
ஆரோக்கியமான இதயத்தை உறுதி செய்தல்
ஒப்பீட்டளவில், ரன்னிங் செய்வது நடப்பதை விட இதயத்தை கடினமாக உழைக்கச் செய்கிறது. எனவே, இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
ஆரோக்கியமான எடையை பராமரித்தல்
உடல் எடையைக் குறைப்பதும் அதைப் பராமரிப்பதும் உங்கள் குறிக்கோள் என்றால், விரைவான முடிவுகளுக்கு ரன்னிங் சிறந்த தேர்வாகும்.
தொப்பை கொழுப்பு குறைப்பு
தொப்பை கொழுப்பை குறைக்க விரும்புவோர் ரன்னிங் வாக்கிங் இரண்டுமே செய்வது நல்லது. வழக்கமான நடைப்பயணத்துடன் அதிக தீவிர ரன்னிங் பயிற்சியை மாற்றி மாற்றி செய்வது உங்கள் வயிற்றில் உள்ளுறுப்பு கொழுப்பை அகற்ற உதவும்.
உடல் எடையை குறைக்க முயற்சி செய்வோருக்கு ’சுகர் டீடாக்ஸ்’ பற்றி தெரியுமா?
ஸ்டாமினாவை அதிகரிக்கும்
நடைபயிற்சி மற்றும் ரன்னிங் இரண்டுமே உடல்நிலையை மேம்படுத்துவதோடு உங்கள் ஸ்டாமினாவை அதிகரிக்கும்.
நாள்பட்ட நோய்களைத் தடுக்கிறது
நீங்கள் ஓடுவது அல்லது பேசிக்கொண்டே நடப்பது போன்ற எந்தவொரு வடிவத்திலும் மேற்கொள்ளும் உடல் செயல்பாடு நாள்பட்ட நோய்களைத் தடுக்கிறது.
கவனத்தில் கொள்ள வேண்டியவை:
உங்களுக்கு முன்பே ஏதேனும் காயம், அல்லது வேறு ஏதேனும் சுகாதார நிலைமைகள் இருந்தால் அதிக தீவிரத்துடன் ரன்னிங் செய்வதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக நடைப்பயிற்சியை தேர்வு செய்வது நல்லது.
நீங்கள் உடற்பயிற்சியை புதிதாக ஆரம்பிக்கிறீர்கள் என்றால், சில நேரங்களில் ரன்னிங் செய்வது கடினமாக இருக்கும். அதுபோன்ற காலகட்டத்தில் நடைபயிற்சி செய்யலாம். கிட்டத்தட்ட அனைத்து உடற்பயிற்சி நிலைகளுக்கும் நடைபயிற்சி அணுகக்கூடியது. இது உங்கள் இதய ஆற்றலை அதிகரிக்கும் மற்றும் ஒட்டுமொத்தமாக அதிக சக்தியை அளிக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.