சமீபத்தில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று பொதுவான உடல் செயல்பாடுகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் தொடர்புடைய இறப்பு அபாயம் ஆகியவற்றுக்கு இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை வெளிப்படுத்தி உள்ளது. சர்குலேஷன் ஜர்னல் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு வயதானவர்கள் வாக்கிங் செல்வதன் முக்கியத்துவத்தை பற்றியும் பேசியுள்ளது.
குறிப்பாக வாக்கிங் செல்லும் ஸ்டெப்ஸ்களின் எண்ணிக்கை மற்றும் மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பிற ஆபத்து அபாயங்கள் குறைவதற்கு இடையே ஒரு உள்ள தொடர்பை கண்டறிந்துள்ளது. இந்த ஆய்வின் மூலம், நாளொன்றுக்கு 3 - 4 மைல்கள் அதாவது 6,000 - 9,000 ஸ்டெப்ஸ்கள் வரை நடக்கும் மூத்த வயதினர், ஒரு நாளைக்கு சுமார் 2,000 ஸ்டெப்ஸ்கள் மட்டுமே நடப்பவர்களை விட மாரடைப்பு அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு 40- 50% குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
6 ஆண்டுகால ஆய்வு :
சுமார் 6 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மொத்தம் சுமார் 20,152 பேர் பங்கேற்றனர். ஆய்வின் முடிவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஸ்டெப்ஸ்களின் எண்ணிக்கை இதய நோய்களின் அபாயத்தை குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நாளொன்றுக்கு அளவிடப்பட்ட ஸ்டெப்ஸ்கள் மற்றும் CVD நிகழ்வுகள் ஃபேட்டல் & நான்-ஃபேட்டல் அபாயகரமான கரோனரி ஹார்ட் டிசீஸ், பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு என வரையறுக்கப்பட்டது. முடிவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் நடக்கும் ஸ்டெப்ஸ்களின் எண்ணிக்கை அவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைப்பதை ஆய்வு கண்டறிந்துள்ளது.
அடிக்கடி ஆய்வு :
குறைந்த தாக்கம் கொண்ட உடற்பயிற்சியாக இருப்பதன் காரணமாக வாக்கிங் நம் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பது பற்றி அடிக்கடி செய்யப்படும் ஆய்வுகள் மூலம் நமக்கு பல புதிய விஷயங்கள் தொகுத்து அளிக்கப்படுகின்றன. உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியிட்ட அறிக்கையில் உலகில் சுமார் 80%-க்கும் அதிகமான இளம் பருவத்தினருக்கு போதுமான உடல் உழைப்பு இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ஒப்பிடும் போது 4 அடல்ட்களில் ஒருவர் நிபுணர்கள் பரிந்துரைத்த உடல் செயல்பாடுகளை இதுவரை செய்ததில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
Also Read : தொடர்ந்து இருமல் வந்துக்கிட்டே இருக்கா..? சளியா அல்லது மார்பு தொற்றா என உடனே செக் பண்ணுங்க..!
லான்செட் ஆய்வு :
கடந்த மார்ச் மாதம் தி லான்செட் இதழலில் வெளியிடப்பட்ட 15 ஆய்வுகளின் மெட்டா அனலைசிஸில் ஒரு நாளைக்கு அதிக ஸ்டெப்ஸ்கள் நடப்பது, படிப்படியாக இறப்பு அபாயத்தை குறைப்பதாக கூறப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் நாளொன்றுக்கு தோராயமாக 6000 - 8000 ஸ்டெப்ஸ்களும், மற்றவர்கள் நாளொன்றுக்கு 8000 -10000 ஸ்டெப்ஸ்களும் நடக்க இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.
அதிக ஸ்டெப்ஸ்கள் நடப்பது கூடுதல் நன்மை..
சில மாதங்களுக்கு முன் அதிக ஸ்டெப்ஸ்கள் நடப்பது தொடர்பாக JAMA Network-ல் வெளியிடப்பட்ட ஆய்வில், கேன்சர், இதய நோய் நிகழ்வுகள் மற்றும் இறப்பு ஆகியவற்றுக்கும் தினசரி நடக்கும் ஸ்டெப்ஸ்களின் எண்ணிக்கைக்கும் இடையே தொடர்பு இருப்பதை கண்டறிந்துள்ளது. இந்த ஆய்வில் சராசரியாக 61 வயது மதிக்கத்தக்க சுமார் 78,500 நபர்கள் பங்கேற்றனர். அதிக மக்கள் தொகை அடிப்படையிலான வருங்கால ஒருங்கிணைந்த இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் மேலே நாம் பார்த்த ஆய்வுகளை போல முடிவுகளையே வெளிப்படுத்தியது.
Also Read : தினமும் தலைக்கு குளிப்பது நல்லதா..? மருத்துவர்கள் தரும் விளக்கம்.!
ஒரு நாளைக்கு 10000 ஸ்டெப்ஸ்கள் வரை நடப்பது இறப்பு, கேன்சர் மற்றும் CVD நிகழ்வுகளின் குறைந்த ஆபத்துடன் தொடர்புடையதாக இந்த ஆய்வும் கூறுகிறது. தினசரி அதிக ஸ்டெப்ஸ்கள் நடப்பது, குறிப்பாக இன்சிடென்ட் டிசீஸ்க்ளுக்கு எதிரான ஆபத்துக்களை குறைப்பதில் கூடுதலாக செயல்படலாம் என்கிறது இந்த ஆய்வு.
பொதுவாக வயதானவர்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பலவகை நோய்களுக்கு எளிதில் ஆளாகிறார்கள், இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இவற்றில் முக்கிய ஒன்று உடல் செயல்பாடு குறைவாக இருப்பது. அதிகரித்த உடல் செயல்பாடுகள் அனைத்து காரணங்களால் ஏற்படும் இறப்பு தவிர உயர் ரத்த அழுத்தம், சிறுநீர்ப்பை, மார்பகம், பெருங்குடல் போன்ற குறிப்பிட்ட உறுப்புகளில் ஏற்படும் கேன்சர் அபாயங்களையும் குறைக்கும். மேலும் மனநலத்தை ஆரோக்கியமாக வைப்பதுடன் தூக்க சுழற்சியை மேம்படுத்தும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Heart disease, Walking