• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • திடீர் ஞாபகமறதி உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா? ஆய்வு சொல்லும் காரணம் இதுதான்..!

திடீர் ஞாபகமறதி உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா? ஆய்வு சொல்லும் காரணம் இதுதான்..!

ஞாபக மறதி, Memory loss

ஞாபக மறதி, Memory loss

புதிய அறைகளின் கதவைக் கடக்கும்போது பலர் இந்த பிரச்சனையை எதிர்கொண்டதை சுட்டிக்காட்டியுள்ள ஆய்வாளர்கள், புத்துணர்ச்சியை பெறுவத?

  • Share this:
டோர்வே எஃபெக்ட் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் திடீர் ஞாபக மறதியை பல சமயங்களில் அனைவரும் அனுபவித்திருப்போம். யாருக்கு எப்போது இந்த ஞாபக மறதி வரும் என்று நம்மால் கூற முடியாது. ஒரு அறைக்குள் ஏதோ ஒரு பொருளை எடுப்பதற்காக செல்வோம். ஆனால், அங்கு சென்றபிறகு மீண்டும் யோசிப்போம் எதற்காக இங்கு வந்தோம்? என்ன பொருளை எடுக்க வந்தோம்? என மூளையை கசக்கி பிழிவோம்.

ஒரு சிலருக்கு சிறிது நேரத்தில் ஞாபகம் வந்துவிடும், ஒரு சிலருக்கு சில நாட்கள் கழித்துகூட எதற்காக அந்த அறைக்குள் சென்றோம் என மூளையில் ப்ளாஷாகும். வயதானவர்களாக இருக்க மாட்டீர்கள், ஞாபக மறதி போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு இருக்காது. ஆனாலும், இந்த அனுபவத்தை எதிர்கொண்டிருப்பீர்கள்.

இது குறித்து 2011 ஆம் ஆண்டு நோட்ரே டோம் பல்கலைக்கழக (University of Notre Dame) ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆய்வு முடிவில், மக்கள் திடீரென தங்களின் சுயசிந்தனையை இழப்பதை உறுதி செய்தனர். "லொக்கேஷன் அப்டேட்டிங்" என அதற்கு பெயரிட்ட அவர்கள், அதில் புதிதாக ஒரு அறைக்குள் செல்லும்போது பழைய நினைவுகளை மூளை இழந்துவிடுவதாக தெரிவித்துள்ளனர். ஆய்வில் புதிய அறைகளின் கதவைக் கடக்கும்போது பலர் இந்த பிரச்சனையை எதிர்கொண்டதை சுட்டிக்காட்டியுள்ள ஆய்வாளர்கள், புத்துணர்ச்சியை பெறுவதற்காக மூளை திடீரென அவ்வாறு செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.



இந்த ஆய்வின் மீது இதுவரை தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை என்பதால், டோர்வே எஃபெக்ட் குறித்து நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வு ஒன்று பி.எம்.சி சைக்கலாஜிக்கல் இதழில் வெளியாகியுள்ளது. அந்த ஆய்வில், டோர்வே எஃபெக்ட் என்பது உண்மை எனக் கூறியுள்ளனர். மேலும், எதனால் திடீர் ஞாபகமறதி ஏற்படுகிறது என்ற கேள்விக்கு விளக்கமளித்துள்ள ஆய்வாளர்கள், மூளையில் அதிகப்படியான பளு இருந்தால், இந்தப் பிரச்சனை ஏற்படும் என்றும் விளக்கியுள்ளனர்.

Save Water : வெயில் காலம் வந்துடுச்சு..தண்ணீரை வீணாக்காதீங்க..! தினசரி பயன்பாட்டில் சேமிக்க டிப்ஸ்!

முந்தைய ஆய்வு உடல் மற்றும் மனதில் ஏற்படும் விளைவுகளை நோக்கமாக கொண்டிருந்த நிலையில், பி.எம்.சி இதழில் வெளியாகியுள்ள ஆய்வு, வெர்ச்ஷூவல் மற்றும் உடல்நிலை சூழலைகளை மையப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு பல்வேறு விதமான சோதனைகள் நடத்தப்பட்டன. மூளை ரிலாக்ஷாக இருக்கும் சமயத்தில் ஓர் அறைக்குள் செல்லும்போது பங்கேற்பாளர்கள் தெளிவாக இருப்பதை கண்டுபிடித்தனர். அவர்களின் யோசிக்கும் திறனை அதிகப்படுத்தி, மூளைக்கு அதிக வேலை கொடுத்தபிறகு ஓர் அறைக்குள் செல்ல அனுமதித்தனர். அப்போது, அவர்களிடம் டோர்வே எஃபெக்ட் எனப்படும் திடீர் ஞாபக மறதி ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.



இதன்மூலம், மூளைக்கு அதிக பளு இருக்கும்போது டோர்வே எஃபெக்ட் ஏற்படுவது ஏறத்தாழ உறுதி செய்தனர். எனவே, இத்தகைய பிரச்சனைகளை அடிக்கடி சந்திப்பவர்கள் உங்களின் மூளைக்கு அதிக பளுவைக் கொடுக்காமல், ஒரே வேலையில் முழுவதுமாக கவனம் செலுத்தினால் திடீர் ஞாபக மறதி பிரச்சனைகள் ஏற்படாது. மூளையையும், மனதையும் ரிலாக்ஸாக வைத்திருங்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: