மாஸ்க் அணிவதால் கொரோனா தொற்றுப் பரவல் 23 மடங்கு குறைவு.. ஆய்வில் நிரூபணம்..

முககவசம்

1,124,952-க்கும் மேற்பட்ட உயிர்களை கொன்ற கொடிய கொரோனா வைரஸின் பரவலை குறைக்க மாஸ்க்குகளை அணிவது அவசியம் என உலக சுகாதார நிறுவனமும் பரிந்துரைக்கிறது.

 • Share this:
  கொரோனா தொற்று பரவலால் மனிதகுலம் நினைத்து பார்த்திராத அளவிற்கு ஒரு மோசமான சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. ஒருவருக்கு நோய் தொற்று ஏற்படுவது பொதுவான விஷயமாக பார்க்கப்பட்டதே தவிர காற்றில் வைரஸ் கலந்து அதை சுவாசித்தால் பிரச்சினை ஏற்படும் என்று ஒரு புது வகையான நோய் தொற்றுக்கு உலகம் ஒருபோதும் அனுபவப்பட்டதில்லை. அந்த வகையில் மாஸ்க் அணிவதன் அவசியம் என்ன என்பதை பற்றியும், அதனால் ஏற்படும் நன்மைகளையும் இந்த தகவல் விளக்குகிறது.

  உலகத் தலைவர்கள், பிரபலங்கள், சுகாதார வல்லுநர்கள் மேலும் பலரிடமிருந்து மாஸ்க் பற்றிய அவசியத்தை நீங்கள் கேட்டிருப்பீர்கள். மேலும் இந்த கூற்றை ஆதரிக்க புதிய ஆராய்ச்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. இயற்பியல் - ப்லுய்ட்ஸ் இதழில், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (IIT) பம்பாயின் புதிய ஆய்வு, ஒருவர் இருமும் போது மாஸ்க்கை அணிந்திருந்தால் நீர்த்துளிகள் வெளியில் செல்லாமல் இருக்கும். மாஸ்க் இல்லாமால் இரும்பியதை விட மாஸ்க்குடன் இரும்பினால் இது 23 மடங்கு குறைந்த அளவில் நீர்த்துளிகள் வெளியேற்றுகிறது என ஆய்வு கூறுகிறது.  மாஸ்க் இல்லாத இருமலின் அளவு சர்ஜிக்கல் மாஸ்க்குடன் ஒப்பிடும்போது ஏழு மடங்கு பெரியதாகவும், N95 மாஸ்க்குடன் ஒப்பிடும்போது 23 மடங்கு பெரியதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் அமித் அகர்வால் மற்றும் ரஜ்னீஷ் பரத்வாஜ் கண்டுபிடித்துள்ளனர். காற்று மாசுபாட்டிலிருந்து தற்காத்துக் கொள்ள பயன்படுத்தப்படும் முக கவசங்கள் தூசிகளை தடுக்கவும் பயன்படுகிறது. இருமல் துகள்கள், ஐந்து முதல் எட்டு விநாடிகள் காற்றில் இருப்பதையும் அவர்களின் ஆய்வு கண்டறிந்துள்ளது. அதன் பிறகு மாஸ்க் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எட்டு வினாடிகளுக்கு பின் அது மறைந்து போகும்.

  கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் தொற்று தாக்கலாம்.. முன்னெச்சரிக்கை அவசியம் - ஐசிஎம்ஆர் எச்சரிக்கை..

  இருமல் மற்றும் தும்மலின் போது வெளியாகும் நீர் துகள்கள் சுற்றுப்புறக் காற்றோடு அதன் சேர்க்கை ஆகியவை தொற்றுநோயின் பரவலைப் புரிந்து கொள்வதில் முக்கியமானது என்றும் அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இருமல் தொடங்கி முதல் ஐந்து முதல் எட்டு வினாடிகள் காற்றில் அதன் நீர்த்துளிகளை கொண்டிருக்கும் என்று அதன் பகுப்பாய்வு தெரிவிக்கிறது. ஒருவர் மாஸ்க் அணிந்திருந்தால் இந்த அளவைக் கடுமையாகக் குறைக்கமுடியும், இதன் விளைவாக அறையில் இருக்கும் மற்ற நபருக்கு நோய்த்தொற்றின் அபாயத்தை கணிசமாகக் குறைக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.  கைக்குட்டையைப் பயன்படுத்துவது இருமல் துகள்கள் பயணிக்கும் தூரத்தை வெகுவாகக் குறைக்கும் மற்றும் வெளியிடப்பட்ட நீர்த்துளிகளின் அளவைக் குறைக்கும், எனவே வைரஸ் சிதற வாய்ப்புகள் உள்ளன என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 1,124,952-க்கும் மேற்பட்ட உயிர்களை கொன்ற கொடிய கொரோனா வைரஸின் பரவலை குறைக்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த மாஸ்க்குகளை அணிவது அவசியம். இனி நீங்கள் வெளியில் செல்வதாக இருந்தால் கட்டாயம் மாஸ்க் அணிவதுடன் மேற்சொன்ன செய்திகளை நினைவில் கொள்வது உங்களை மட்டுமல்லாமல் உங்களை சுற்றி உள்ளவர்களையும் தொற்று நோய்களில் இருந்து காக்கும்.

   

   

   
  Published by:Sivaranjani E
  First published: