விட்டிலிகோ என்பது ஒரு அரிதான சரும குறைபாடு ஆகும். இது உங்கள் தோலில் வெள்ளை நிற திட்டுக்களை (white patches) உருவாக்கும். உங்கள் இயற்கையான சருமம் எந்த நிறத்தில் இருந்தாலும் இந்த திட்டுக்கள் வெளிர் நிறத்தில் காணப்படும். இது ஒரு நோய் அல்ல, ஸ்கின் டிஸ்ஆர்டர் (skin disorder) என்று கூறப்படுகிறது. மருத்துவ உலகில் எவ்வளவோ முன்னேற்றங்கள், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் வந்தாலும் இந்த சரும குறைபாட்டுக்கு இன்னும் சரியான தீர்வை கண்டுபிடிக்க இயலவில்லை.
உடலில் எந்த பாகத்தையும் பாதிக்கக்கூடிய இந்த குறைபாட்டைப் சுற்றி பலருக்கும் உண்மையான விவரங்கள் தெரியவில்லை. உள்ளன. விட்டிலிகோ பாதிக்கப்பட்ட நபரின் அருகில் செல்வதற்கு பலரும் தயங்குவார்கள். இதற்கான முக்கியக் காரணம் இந்த குறைபாட்டை பற்றிய பல்வேறு கட்டுக்கதைகள், போலியான கணிப்புகள் உள்ளது தான்.
விட்டிலிகோ என்பது ஒரு உங்கள் உடலில் இருக்கும் பிக்மெண்ட் (Pigment-சருமத்துக்கு நிறம் கொடுக்கும்) குறைபாட்டால் ஏற்படும் ஒரு குறைபாடு. இது உங்கள் சருமத்தில் இருக்கும் இயல்பான நிறத்தை பாதிக்கிறது. மொத்தமாக உங்கள் உடலிலுள்ள தோல் முழுவதும் பாதிக்காமல், திட்டுத்திட்டாக விட்டிலிகோ உருவாகிறது. இது மிகவும் அரிதான ஒரு சரும நோய்தான். உலகில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான மக்கள் தான் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சருமநோய் மருத்துவர், டாக்டர் மாதுரி அகர்வால் பகிர்ந்துள்ளார்.
விட்டிலிகோ பாதிப்புக்கான காரணம் பற்றி, விட்டிலிகோ நோய் பரப்பும் தன்மை கொண்டது என்று பல்வேறு போலியான கட்டுக்கதைகள் உள்ளன. இவற்றில் எது கதை, எது உண்மை என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
விட்டிலிகோ யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் :
கட்டுக்கதை: கலப்பின பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு விட்லிகோ பாதிப்பு ஏற்படும்.
உண்மை: விட்டிலிகோ பெற்றோர்களின் பாரம்பரிய இனத்தால் (ethnicity) உருவாகாது. ஒருவர் வளர்ந்தவுடன் வெள்ளைத் திட்டுக்கள் உடலில் உருவாக தொடங்கியவர்களுக்கு, பிறக்கும்போதே விட்டிலிகோ பாதிப்பு இல்லாமல் இருக்கவும் வாய்ப்பும் உள்ளது. அதுமட்டுமின்றி விட்டிலிகோ ஒரு ப்ராக்ராசிவ் கண்டிஷன் (Progressive Condition) அதாவது நீங்கள் வளர, உங்களுக்கு வயதாக ஆக சருமத்தில் காணப்படும் திட்டுக்களும் அதிகரிக்கும்.
உடலில் தாதுக்கள் குறைவாக இருப்பதை எச்சரிக்கும் அறிகுறிகள் : அலட்சியம் காட்டாதீர்கள்..!
விட்டிலிகோ தொற்று போல பரவுமா?
கட்டுக்கதை: விட்டிலிகோ பாதிக்கப்பட்டுள்ள நபரிடமிருந்து விலகி இருக்க வேண்டும். ஏனென்றால் இது உங்களுக்கும் பரவும் ஆபத்து உள்ளது.
உண்மை: விட்டிலிகோ என்பது தொற்று நோய் கிடையாது. பாதிக்கப்பட்டவரின் அருகில் நீங்கள் இருந்தால் அது உங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்த குறைபாடு வேறு ஒருவரிடமிருந்து உங்களுக்கு பரவாது. அதனால் சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் அடி கொண்ட விதிலிகோ பாதிக்கப்பட்ட நபரை பார்த்தால் அவர்களிடமிருந்து உடனே விலகிச் செல்வது முறையாகாது.
விட்டிலிகோவுக்கான சிகிச்சை முறைகள் :
கட்டுக்கதை: நீங்கள் பல்வேறு எண்ணெய்களை பயன்படுத்தி, சருமத்தை நன்றாக பராமரித்து, தேவையான சப்ளிமெண்ட்களை எடுத்தால் விட்டிலிகோ விலகிவிடும்.
தற்போதுவரை விட்டிலிகோவிற்கு நிரந்தர தீர்வு அளிக்கும் சிகிச்சை முறை எதுவும் இல்லை. இந்த குறைபாட்டை நிரந்தரமாக சரி செய்து உங்களின் சருமத்தின் இயல்பான நிறத்தை கொண்டு வர முடியாது. ஆனால் விட்டிலிகோ அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள பல்வேறு தெரப்பிகள் உள்ளன. உதாரணமாக அல்ட்ரா வயலெட் லைட் தெரபி, டாட்டூ போட்டுக் கொள்வது, ஸ்கின் மாற்று அறுவை சிகிச்சை போன்றவை.
உங்களுக்கு எந்த வகையான சிகிச்சை முறை பொருந்தும் என்பதை உங்கள் சரும மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து அதற்கேற்றார் போல முடிவு செய்ய வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.