நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும், நாம் புத்துணர்ச்சியுடன் இயங்குவதற்கும் ஊட்டச்சத்துக்கள் மிக, மிக அவசியம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. வயது முதிர்வு அல்லது பரம்பரை சார்ந்த குறைபாடுகளை தடுக்க ஊட்டச்சத்துகள் மிக அவசியமாகும்.
என்னதான் பார்த்து, பார்த்து சத்து மிகுந்த உணவாக சாப்பிட்டாலும் ஏதோ சில காரணங்களால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு விடுகிறது. குறிப்பாக இளம் வயதினருக்கு ஊட்டச்சத்துகள், மினரல்கள் மற்றும் புரதங்கள் ஆகியவை மிகுதியாக தேவை என்ற நிலையில், அவை போதுமான அளவுக்கு கிடைப்பதில்லை.
இதுபோன்ற சிக்கல்களுக்கு தீர்வு காணும் விதமாகத்தான் சந்தையில் ஊட்டச்சத்து மருந்து, மாத்திரைகள் விற்பனைக்கு கிடைக்கின்றன. ஆனால், நாம் இதை எந்த வயதில் உட்கொள்ள வேண்டும், எப்போது நமக்கு இது தேவை என்ற அடிப்படை குறித்து ஆய்வுகள் சொல்லும் தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
20களில் ஊட்டச்சத்து மாத்திரைகள்...
1. ஒரு சின்ன ஸ்பூன் அளவு புரதம் சார்ந்த மருந்து என்பது உங்கள் தினசரி புரதத் தேவையை நிறைவு செய்யும். நம் உடலில் தசைகளை கட்டமைக்க மிக முக்கியத் தேவையாக இருப்பது புரதம் ஆகும்.
2. உடலில் போதுமான அளவு கால்சியம் சத்து இருந்தால்தான் வலிமையான எலும்புகள் அமையும். பல் ஆரோக்கியமாக இருக்கும்.
3. வைட்டமின் டி3 மருந்துகளை எடுத்துக் கொண்டால் உடலின் மரபணு ஆரோக்கியம் மேம்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
4. இரும்புச் சத்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் ரத்த சோகை, இரும்புச் சத்து பற்றாக்குறை போன்றவற்றை எதிர்கொள்ளலாம்.
இந்த அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் உடனே சிறுநீரகங்களை பரிசோதித்து கொள்ளுங்கள்!
30களில் ஊட்டச்சத்து மருந்துகள்....
30ஐ தாண்டிய வயதுகளில் உள்ள நபர்களுக்கு, உடல் ஊட்டச்சத்துகளை உறிஞ்சும் வேகம் குறையத் தொடங்கும். இந்த சமயத்தில் பின்வரும் சத்துக்கள் நமக்கு முக்கியமானவை.
1. வைட்டமின் டி, ஒமேகா 3, விட்டமின் சி, கொலாஜன், புரத மருந்துகள், விட்டமின் இ ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இது தவிர மெக்னீசியம், ஜிங்க், கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம்.
2. கால்சியம் மற்றும் விட்டமின் டி சேர்த்துக் கொண்டால் நம் எலும்புகள் வயதுக்கு ஏற்ப பலம் அடையும்.
3. கற்றாழை, முருங்கை கீரை அல்லது இயற்கையான புரோபயாடிக் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
40களில் உள்ளவர்களுக்கு...
1. ஆண்டிஆக்ஸிடண்ட்களாக கருதப்படும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ போன்றவை முக்கியமாகும். இவை சருமம், முடி பாதுகாப்புக்கு உகந்தவை.
2. கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை இந்த வயதில் ஏற்படும் பற்சிதைவை தடுக்க உதவும்.
3. வைட்டமின் பி12 எடுத்துக் கொண்டால் ரத்தத்தில் சத்துக்களை உறியும் தன்மை மேம்படும்.
4. மெக்னீசியம் மற்றும் பி-காம்ப்ளக்ஸ் போன்றவை ஒட்டுமொத்த ஆற்றலை மேம்படுத்தும்.
காலையில் எழுந்ததுமே சோர்வா இருக்கா..? அப்ப இந்த வைட்டமின் குறைபாடு ஏற்பட்டிருக்கலாம்..!
50களில் உள்ளவர்களுக்கு....
1. வைட்டமின் டி மற்றும் கால்சியம் ஆகியவை எலும்பு ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் மூளை செயல்திறன் மேம்பாடு மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு உதவும்.
2. ஜிங்க் மற்றும் இதர ஆண்டிஆக்ஸிடண்ட்களை சேர்த்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
3. ஒமேகா 3 மற்றும் அழற்சிக்கு எதிரான மருந்துகளை எடுத்துக் கொண்டால் வயோதிகம் சார்ந்த பிரச்சனைகளை குறைக்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vitamin Supplements