வைட்டமின்-E நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வரவே வராதாம்..

வைட்டமின் ஈ

உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் வைட்டமின் E உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

 • Share this:
  தொற்றுநோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் உணவுகளை தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும். உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் வைட்டமின் ஈ உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

  தோல்வறட்சி, உடலில் அரிப்பு மற்றும் முடி உதிர்தல் ஆகிய பிரச்சனைகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ள கிரீம், ஜெல் உள்ளிட்ட ரசாயன பொருட்களை எடுத்துக்கொள்வதைவிட வைட்டமின் ஈ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். வைட்டமின் ஈ, தோல் மற்றும் முடி உதிர்தல் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைவதுடன், உடலில் பொலிவையும் கொடுக்கும். அந்தவகையில், வைட்டமின் ஈ ஊட்டச்சத்து அதிகமாக இருக்கும் உணவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

  1. பாதாம் : வைட்டமின் ஈ சத்து பாதாமில் அதிகளவில் உள்ளது. இதனை நாள்தோறும் அன்றாட உணவில் சேர்த்து வந்தால் குளிர்காலத்தில் ஏற்படும் தோல் வறட்சி மற்றும் உடல் அரிப்புகளை தடுக்கலாம். காலையில் ஊறவைத்த 2 பாதாம்களை சாப்பிட்டால், பாக்டீரியாக்களை அழித்து செரிமானப் பிரச்சனைகளை சீராக்கும். பாதாமை தவறாமல் சாப்பிட்டு வந்தால் முகமும் பொலிவு பெறும். இதயத்துக்கும் சிறந்த உணவாக இருக்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஈ, மக்னீசியம், மோனோசாச்சுரேட்டுகள் ஆகியவை ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், கொலஸ்ட்ரால் உறிஞ்சுவதையும் கனிசமான அளவில் தடுக்கிறது. மேலும் முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் வராமல் தடுக்கும்.

  2. கீரை : நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கீரைகளில் குவிந்து கிடக்கின்றன. குறிப்பாக, பசலைக்கீரை, கடுகு கீரை ஆகியவற்றில் வைட்டமின் ஏ மற்றும் ஈ அதிகளவில் உள்ளன. இவற்றில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், வைட்டமின் ஏ குறைபாட்டால் ஏற்படும் முடி உதிர்வையும் தடுக்கின்றன. கடுகு கீரையை வேக வைத்து சாப்பிடலாம். வெந்தயக் கீரை, சிறுகீரை உள்ளிட்டவைகளையும் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. வெறும் கீரைகளை மட்டும் எடுத்துக்கொள்வதைவிட அவற்றுடன் முட்டை சேர்த்தும் சாப்பிடலாம். நாள்ளொன்றுக்கு 30 கிராம் கீரையை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான 50 விழுக்காடு வைட்டமின்களை பெறலாம்.

  3. அவகோடா : அவக்கோடாவில் வைட்டமின் ஈ ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. இது தோல் மற்றும் முடி உதிர்வு பிரச்சனைகளில் இருந்து ஒரேசேர நம்மை பாதுகாக்கிறது. ஃபட்டர் ப்ரூட் என அழைக்கப்படும் அவகோடாவில் நல்ல கொழுப்புகள் நிறைந்திருக்கின்றன. அண்மை காலமாக காலை உணவு பட்டியலில் அவகோடா இடம்பெற்று வருகிறது. அவகோடா பழத்தை சிற்றுண்டியாகவும் எடுத்துக்கொள்ளலாம். பொட்டாசியம் சத்து நிறைந்திருப்பதால் இரத்த அழுத்தம், உடல் பருமன் உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு இது சிறந்த உணவாகவும் அமையும்.

  Also Read : கேரட்டில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்.. தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்..

  4. சூரியகாந்தி விதைகள் : சூரிய காந்தி விதைகளில் நமது உடலுக்கு தேவையான 50 விழுக்காடு வைட்டமின் ஈ ஊட்டசத்து உள்ளது. அத்துடன், துத்தநாகம், செலினியம் உள்ளிட்ட சத்துகளும் நமக்கு கிடைப்பதால் முடி பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இது இருக்கும். ரத்தத்தில் பி.எச் அளவை சமநிலையில் வைத்து ஆரோக்கியத்தை பாதுகாக்க சூரியகாந்தி விதைகள் உதவுகின்றன. கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கும் 'கிளைகோஜன்' அளவை கட்டுக்குள் வைப்பதிலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

  5. வேர்க்கடலை : வேர்க்கடலையில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்புகள் சருமத்தின் எண்ணெய் பதத்தை தொடர்ந்து பாதுகாக்கும். இதனால் குளிர்காலத்தில் நமது சருமம் வறண்டு போவதை தடுக்கலாம். தோலில் எண்ணை பதத்தை தொடர்ந்து பராமரிக்க வேர்க்கடலையை அடிக்கடி உட்கொண்டு வருவது நல்லது. வேர்க்கடலையின் மெல்லிய சிவந்த தோலில் இருந்து Capric acid எனப்படும் வேதிப்பொருள் பெறப்படுகிறது. இது பூஞ்சைக் காளான்களைப் போக்கும் தன்மைக் கொண்டது. பூஞ்சைகளால் தோலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க வேர்க்கடலை சிறந்த தீர்வாக இருக்கும். இதில், ஆண்டிஆக்சிடென்ட் நிறைந்து காணப்படுகிறது. இது வெயில் காலங்களில் சூரிய கதிர்கள் மூலம் தோல் செல்கள் சேதமடைவதை தடுக்கிறது. இருந்தாலும் வெயில் காலங்களில் அளவுக்கு அதிகமாக வேர்க்கடலை உண்ணக்கூடாது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: