நம் உடல் ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் ஒரு அடிப்படை காரணியாகும். நாம் சரியான டயட்டை பாலோ செய்யாமல், உடல் பயிற்சியை மேற்கொள்ளாமல், உடல் ஆரோக்கியத்தை பற்றி அக்கறை கொள்ளாமல், சரியான நேரத்தில் சாப்பிடாமல், சரிவிகித மற்றும் சத்தான உணவுகளை உட்கொள்ளாமல் இருந்தோம் என்றால், நம் உடல் ஆரோக்கியம் என்பது கேள்விக்குறியாக தான் இருக்கும்.
அந்த வகையில் நம் உடலின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது, குறிப்பாக வைட்டமின் டி3 மற்றும் வைட்டமின் பி12 நமது உடலில் முக்கிய இயக்கங்கள் நடைபெற உதவுகிறது.
நம்மில் சிலருக்கு உடல் வலிகள், மூளையில் ஒருவித மந்தநிலை அல்லது நினைவாற்றல் இழப்பு, குறைந்த ஆற்றல் அளவுகள், பலவீனமான எலும்புகள், பார்வை மங்கிப்போதல், மனச்சோர்வு அறிகுறிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, ஹார்மோன் மாற்றங்கள், ஆட்டிசம் அல்லது ADHD, கருவுறாமை, உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு, வாய் புண், அல்சர், அல்சைமர்ஸ், டிமென்ஷியா, பார்கின்சன் போன்ற பாதிப்புகள் இருக்கலாம். இவற்றின் அடிப்படை காரணம் சத்துக்குறைபாடாக இருக்கும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
மேலும், உங்கள் உடலில் வைட்டமின் D3 மற்றும் B12 - ன் அளவுகள் குறைவதால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து செயல்பாடுகளும் பாதிக்கப்படும்.
வைட்டமின் டி3ன் முக்கிய பங்கு:
- வலுவான எலும்புகள், நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது
- இரத்த வெள்ளை அணுக்கள் உற்பத்தி
- டி செல்கள் எனும் ஸ்மார்ட் இம்யூனிட்டியை ட்ரெயின் செய்தல்
- தைராய்டு மற்றும் செக்ஸ் ஹார்மோன்களை உற்பத்தி செய்தல்.
- மூளையின் ஆரோக்கியம் மற்றும் நினைவாற்றல்
- கால்சியம் மற்றும் பாஸ்பரஸை உறிஞ்சுவது
- இன்சுலின் எதிர்ப்பு மற்றும் பல.
Also Read : மலம் கழிக்கும் போது எரிச்சலாக இருக்கிறதா..? உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கலாம்..!
வைட்டமின் பி12 - ன் முக்கிய பங்கு:
- ஆற்றல் உற்பத்தி
- கார்போஹைட்ரேட் மெட்டபாலிசம்
- குடல் ஆரோக்கியம்
- இரத்த RBC உற்பத்தி
- பார்வை நரம்புகள் உட்பட நரம்புகளின் ஆரோக்கியம்
- மூளை ஆரோக்கியம் மற்றும் நினைவாற்றல்
- மனநிலை கட்டுப்பாடு
வைட்டமின் D3 மற்றும் B12 குறைபாடு நமது உடலில் ஏற்படும் போது மேற்கண்டவற்றில் பாதிப்புகள் ஏற்படும். எனவே வைட்டமின் D3 மற்றும் B12 நிறைந்த உணவுகளை நமது அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
நமக்கு தினசரி வாழ்க்கைக்கு தேவையான வைட்டமின் பி 12-ஐ பெர்மெண்ட்டேட் புஃட், ஆர்கன் மீட், ப்ரூவர்ஸ் ஈஸ்ட் மற்றும் பால் ஆகியவற்றிலிருந்தும், வைட்டமின் டி 3-ஐ சூரிய ஒளியின் வெளிப்பாடு மற்றும் முழு முட்டைகள், காளான்கள் மற்றும் கொழுப்பு நிறைந்த மீன்களை சாப்பிடுவதன் மூலமும் பெறலாம்.
மேலும், ஆரோக்கியம் சார்ந்த இந்த வைட்டமின்கள் குறித்தவற்றை நாம் தீவிரமாக எண்ணத்தில் கொண்டால் மட்டுமே சிக்கல்கள் இல்லா வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vitamin B12, Vitamin D3