ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வைட்டமின் டி சப்ளிமெண்ட் எந்த நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்..?

வைட்டமின் டி சப்ளிமெண்ட் எந்த நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்..?

வைட்டமின் டி சப்ளிமெண்ட்

வைட்டமின் டி சப்ளிமெண்ட்

நாம் நம்முடைய உடலில் உள்ள பெரும் பகுதி வைட்டமின்றி சூரிய ஒளியிலிருந்து தான் பெறுகிறோம். முக்கியமாக கோடை காலங்களில் கைகள் மற்றும் கால்களில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஒரு நாளைக்கு மூன்று முறை சூரிய ஒளிபடுமாறு நின்றாலே உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைத்து விடும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மனித உடலுக்கு தேவையான வைட்டமின்களில், வைட்டமின் டி-க்கு முக்கிய பங்கு உண்டு. எலும்புகளுக்கு மிக முக்கியமான ஊட்டச்சத்தாகவும், மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கும் வைட்டமின் டி உதவுகிறது. ஒருவேளை வைட்டமின் டி உங்கள் உடலில் குறைவாக இருந்தால் அதிகமான அழுத்தம் மற்றும் உடல் பலவீனமாக உணர்வது ஆகியவை ஏற்படலாம். மேலும் நீங்கள் வைட்டமின் டி எடுப்பதாக இருந்தால் அதற்கென சில வழிமுறைகள் உள்ளன. அவற்றை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே சப்ளிமெண்டுகளால் எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாமல் முழு பயனையும் உங்களுக்கு கொடுக்கும்.

முக்கியமாக இன்றைய காலங்களில் உடற்பயிற்சி செய்யும் பல நபர்கள் பல விதமான சப்ளிமெண்ட்டுகளை எடுத்துக் கொள்கின்றனர். அதில் இந்த வைட்டமின் ஒன்றாக உள்ளது. மேலும் கண்ட கண்ட நேரங்களில் இதை எடுப்பதும் வரைமுறை இல்லாமல் நினைத்தபோது எல்லாம் வைட்டமின் டி எடுத்துக் கொள்வதும் மிக கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் பயன்படுத்துவதற்கு முன்பு உங்களது மருத்துவரை ஒருமுறை கலந்தாலோசிக்க வேண்டும்.

எந்தெந்த நேரங்களில் எல்லாம் வைட்டமின் டி சப்ளிமெண்ட் செய்து கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மற்ற நேரங்களை விட காலை நேரத்தில் வைட்டமின் எடுத்துக் கொள்வதால் முழுமையான பயனை கொடுக்கும் எனவும் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

காலை நேரத்தில் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளலாம்:

மருத்துவர் ரோஸ் பெரி என்பவர் எக்ஸ்பிரஸ் யூ கே விற்கு அளித்த பேட்டியில் சப்ளிமென்ட்களை காலை நேரத்தில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

டாக்டர் பெரி என்பவர் இதைப் பற்றி கூறுகையில் “நாம் இயற்கையாகவே வைட்டமின் டி-யை சூரிய ஒளியில் இருந்து பெறுகிறோம். எனவே காலை நேரங்களில் வைட்டமின் எடுத்துக் எடுத்துக் கொள்வதால் அது இயற்கையாகவே வைட்டமின் டி-யை உடலில் சமநிலைப்படுத்துகிறது.

சூரிய ஒளியில் அதிகமாக இருக்கும் வைட்டமின் டி-ஆனது உடலில் போதுமான அளவில் இருந்தால், அந்த மனிதன் மிகுந்த சக்தியுடனும் உடல் சோர்வின்றி காணப்படுவான். இதுவே வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் மயக்கம், உடல் பலவீனம், உடல் சோர்வு ஆகியவை ஏற்படலாம் எனவே நீங்கள் சப்ளிமெண்ட்ஸ் எடுக்காவிட்டாலும் முடிந்த அளவு காலை நேரங்களில் சூரிய ஒளி உங்கள் மீது படுமாறு சிறிது நேரம் இருக்க வேண்டும்” என கூறியுள்ளனர்.

சூரிய ஒளி தான் உண்மையான சக்தி

நாம் நம்முடைய உடலில் உள்ள பெரும் பகுதி வைட்டமின்றி சூரிய ஒளியிலிருந்து தான் பெறுகிறோம். முக்கியமாக கோடை காலங்களில் கைகள் மற்றும் கால்களில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஒரு நாளைக்கு மூன்று முறை சூரிய ஒளிபடுமாறு நின்றாலே உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைத்து விடும்.

அதிலும் காலை 10 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை உள்ள நேரத்தில் நீங்கள் சூரிய ஒளி படுமாறு இருக்க வேண்டும். இந்த நேரத்தில் சூரிய ஒளி உடலில் படும்போது அதிக வைட்டமினை குறைவான நேரத்தில் உற்பத்தி செய்கிறது.

Also Read : கணையத்தில் புற்றுநோய் ஏற்பட்டால் உடலில் என்னென்ன அறிகுறிகள் தென்படும்..?

வைட்டமின் டி ஊட்டச்சத்துள்ள உணவு வகைகள்:

குளிர்காலங்களில் சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி கிடைப்பது வெகுவாக குறைந்து விடும். எனவே சில உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலம் உங்கள் உடலில் வைட்டமின் டி சமநிலையை ஏற்படுத்தலாம்.

சால்மோன், இறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு, கல்லீரல், ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகள் ஆகியவற்றை உண்பதின் மூலம் உடலில் வைட்டமின் டி சமநிலையை ஏற்படுத்தலாம்.

வைட்டமின் டி அதிகரித்தால் ஏற்படும் விளைவுகள்:

வைட்டமின் டி யை அதிகளவு எடுத்துக் கொண்டால், அது உடலில் மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். முக்கியமாக எலும்புகளை பலவீனப்படுத்துவதுடன் இதயம் மற்றும் சிறுநீரகங்களை செயல் இழக்க செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

இதைப் பற்றி பேசிய மருத்துவர் பெரி, “முக்கியமாக இளம் வயதினருக்கும், கருவுற்றிருக்கும் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்மணிகளுக்கும் மேலும் 11 ல் இருந்து 17 வரை சிறுவர்களுக்கும் வைட்டமின் டி ஆனது 50 மைக்ரோ கிராம்களுக்கு அதிகமாக செல்லக்கூடாது. குழந்தைகள் மற்றும் 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு 25 மைக்ரோ கிராம்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இதன் அளவு அதிகரித்தாலோ அல்லது குறையும் பட்சத்திலோ உடலானது பக்க விளைவுகளை வெளிப்படுத்த துவங்கும் என அவர் கூறியுள்ளார்.

Also Read : உங்கள் வயிற்று வலிக்கு காரணம் என்ன..? அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்!

வைட்டமின் டி குறைபாடு யாருக்கு அதிகம் ஏற்படும்:

உண்மையில் வைட்டமின் டி குறைபாடு இவருக்கு தான் ஏற்படும் என்று யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கத்தை பொறுத்து வைட்டமண்டி குறைபாடு யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆனால் மாதவிடாய் காலங்களில் இருக்கும் பெண்களுக்கு மற்றவர்களை விட அதிகமாக வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இயற்கையாகவே உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் மாறுவதுடன், அதிக அளவு சூரிய ஒளியில் இருப்பது குறைவதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

Published by:Sivaranjani E
First published:

Tags: Vitamin D, Vitamin Supplements