முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வைட்டமின் டி, மல்டிவைட்டமின், ஒமேகா -3 : பெண்களை மட்டும் கொரோனாவிலிருந்து பாதுகாக்குமாம் - ஆய்வு

வைட்டமின் டி, மல்டிவைட்டமின், ஒமேகா -3 : பெண்களை மட்டும் கொரோனாவிலிருந்து பாதுகாக்குமாம் - ஆய்வு

மல்டிவைட்டமின்கள், ஒமேகா -3, புரோபயாடிக்குகள் அல்லது வைட்டமின் டி சப்ளிமென்ட்டுகளை எடுத்துக்கொள்வது கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் வரும் அபாயத்தைக் குறைக்கும்.

மல்டிவைட்டமின்கள், ஒமேகா -3, புரோபயாடிக்குகள் அல்லது வைட்டமின் டி சப்ளிமென்ட்டுகளை எடுத்துக்கொள்வது கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் வரும் அபாயத்தைக் குறைக்கும்.

மல்டிவைட்டமின்கள், ஒமேகா -3, புரோபயாடிக்குகள் அல்லது வைட்டமின் டி சப்ளிமென்ட்டுகளை எடுத்துக்கொள்வது கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் வரும் அபாயத்தைக் குறைக்கும்.

  • 1-MIN READ
  • Last Updated :

உலகெங்கிலும் உள்ள மக்கள் தொற்றுநோயின் பிடியில் சிக்கித் தவிக்கும் போது, ஒரு புதிய ஆய்வின் மூலம் வெளியான தகவலால் பெண்களுக்கு சற்று ஆறுதல் கிடைத்துள்ளது. ஆய்வின்படி, சில வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது கொரோனா வைரஸ் பாதிக்கப்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, மல்டிவைட்டமின்கள், ஒமேகா -3, புரோபயாடிக்குகள் அல்லது வைட்டமின் டி சப்ளிமென்ட்டுகளை எடுத்துக்கொள்வது கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் வரும் அபாயத்தைக் குறைக்கும் என்று பெண்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான ஆய்வில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், வைட்டமின் சி, துத்தநாகம் அல்லது பூண்டு சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது வைரஸால் பாதிக்கப்படுவதற்கான குறைந்த ஆபத்துடன் தொடர்புடையது அல்ல என்றும் கண்டறியப்பட்டுள்ளது. பி.எம்.ஜே. ஊட்டச்சத்து தடுப்பு மற்றும் உடல்நலம் இதழில் (BMJ Nutrition Prevention & Health) இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வு எவ்வாறு நடத்தப்பட்டது?

வழக்கமான சப்ளிமென்ட்டுகளை எடுத்துக்கொள்ளும் நபர்கள் SARS-CoV-2 வைரஸால் பாதிக்கப்படுவதறகான வாய்ப்பு குறைவாக இருக்கிறதா என்பதை ஆராய இங்கிலாந்தில் உள்ள கிங்ஸ் கல்லூரி லண்டனைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடம் COVID-19 அறிகுறி ஆய்வு செயலியை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. தொற்றுநோயின் பரிணாமம் குறித்த சுய-அறிக்கை தகவல்களை சேகரிக்க 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் சுவீடனில் இந்த பயன்பாடு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செயலியில் சுமார் 372,720 இங்கிலாந்து சந்தாதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களில், கடந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய்களின் முதல் அலையின் போது மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் முழுவதும் அவர்கள் எடுத்துக்கொண்ட சப்ளிமென்ட்டுகள் குறித்தும், மேலும் அவர்கள் எடுத்துக்கொண்ட கொரோனா பரிசோதனைகள் குறித்தும் ஆராய்ச்சியார்கள் பகுப்பாய்வு செய்தனர்.

அதில், மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில், 175,652 இங்கிலாந்து சந்தாதாரர்கள் தவறாமல் சப்ளிமென்டுகளை எடுத்துக் கொண்டனர். இதுதவிர சுமார் 197,068 பேர் எந்த விதமான சப்ளிமென்டுகளையும் எடுத்துக்கொள்ளவில்லை. மேலும், ஆய்வில் பங்கேற்றவர்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு அதாவது 67 சதவீதத்தினர் பெண்கள் மற்றும் அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதிக எடை கொண்டவர்கள் ஆவர். மேலும் அவர்கள் எடுத்துக்கொண்ட கொரோனா சோதனையின் போது, சுமார் 23,521 பேர் SARS-CoV-2 வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். சுமார், 349,199 பேர் மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் கொரோனா சோதனையில் நெகட்டிவ் ரிசல்ட்டை பெற்றனர்.

கொதிக்கும் நீரில் ஆவி பிடித்தால் கொரோனா வைரஸ் அழியுமா? உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்!

இதன் மூலம், புரோபயாடிக்குகள், ஒமேகா கொழுப்பு அமிலங்கள், மல்டிவைட்டமின்கள் அல்லது வைட்டமின் டி ஆகிய சப்ளிமென்டுகளை எடுத்துக்கொண்டவர்களில் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து முறையே 14 சதவீதம், 12 சதவீதம், 13 சதவீதம் மற்றும் 9 சதவீதம் ஆகியவற்றுடன் தொடர்புடையது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வைட்டமின் சி, துத்தநாகம் அல்லது பூண்டு சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்பவர்களிடையே இதுபோன்ற விளைவுகள் எதுவும் காணப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக பாலினம், வயது மற்றும் எடை (பி.எம்.ஐ) ஆகியவற்றைப் பார்த்தபோது, புரோபயாடிக்குகள், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், மல்டிவைட்டமின்கள் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றின் பாதுகாப்பு பெண்களுக்கு மட்டுமே அதிகபடியாக கிடைத்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் சரி, எவ்வளவு எடை உள்ளவர்களாக இருந்தாலும் சரி சப்ளிமென்டுகள் எடுத்துக்கொள்ளும் பெண்களில் கொரோனா பாதிக்கும் அபாயம் குறைவு என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்ற தெளிவான தொடர்புகள் எதுவும் ஆண்களில் காணப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

சில வேறுபாடுகள் இருந்தபோதிலும், அமெரிக்கா (45,757) மற்றும் ஸ்வீடிஷ் (27,373) சந்தாதாரர்களிடமும் இதே மாதிரியான முடிவுகள் பிரதிபலித்தன என்று அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் இது ஒரு கண்காணிப்பு ஆய்வு மட்டுமே என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

First published:

Tags: Corona safety, Omega 3, Vitamin D, Women Health