ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உங்க உடலில் சூரிய ஒளியே படவில்லை எனில் இத்தனை பிரச்சனைகளை சந்திப்பீங்க..!

உங்க உடலில் சூரிய ஒளியே படவில்லை எனில் இத்தனை பிரச்சனைகளை சந்திப்பீங்க..!

 சூரிய ஒளி

சூரிய ஒளி

Vitamin D : ஒருவர் அடிக்கடி சோர்வு, பலவீனம், தசை வலி, மூட்டு வலி அல்லது எலும்பு முறிவுகளை சந்திக்கிறார் என்றால் அவர் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மனித உடலில் முக்கிய பங்கு வகிக்கும் வைட்டமின் டி சன்ஷைன் வைட்டமின் என்றும் குறிப்பிடப்படுகிறது. சூரிய ஒளியின் வெளிப்பாட்டின் மூலம் உடலில் இந்த வைட்டமின் உருவாகிறது. வைட்டமின் டி குறைபாடு உலகம் முழுவதும் பரவலாக உள்ளது.

எனினும் நம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஆண்டு முழுவதும் வெயில் அடித்தாலும் கூட கிட்டத்தட்ட 40 சதவீத இந்தியர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்கிறது என்ற புள்ளிவிவரம் நம்மை அதிர்ச்சி அடைய செய்கிறது. இந்த குறைபாடு பற்றி பகிர்ந்து கொண்ட ஒரு மருத்துவர் தன்னிடம் நீண்ட மாதங்களாக தசை வலி மற்றும் அதிக சோர்வு இருக்கிறது என்ற புகாருடன் வந்த 35 வயது நபர், தினசரி உடற்பயிற்சி செய்ய கூடிய பழக்கமுடையவர். இவரது வைட்டமின் டி அளவை பரிசோதித்த போது 20 ng/ml என்ற அளவுக்கு பதிலாக 8 ng/ml என்ற அளவே இருந்தது. இதனை தொடர்ந்து வைட்டமின் டி சப்ளிமென்ட்ஸ் கொடுத்ததில் ஆறு வாரங்களில் அவரது பிரச்சனை சரியானது என குறிப்பிட்டார்.

உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அளவை சீராக்க வைட்டமின் டி உதவுகிறது. எலும்புகள், பற்கள் மற்றும் தசைகள் ஆரோக்கியமாக இருக்க கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் தேவை. குழந்தைகளிடையே காணப்படும் வைட்டமின் டி குறைபாடு ரிக்கெட்ஸ் போன்ற எலும்பு குறைபாடுகளை ஏற்படுத்தலாம்.

பொதுவாக கால்சியத்தை உறிஞ்ச வைட்டமின் டி மிக முக்கியம். போதுமான வைட்டமின் டி இல்லை என்றால் போதுமான கால்சியம் நம் எலும்புகளுக்கு கிடைக்காது. எலும்புகளுக்கு மிக முக்கிய ஊட்டச்சத்தாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் வைட்டமின் டி அவசியம். வைட்டமின் டி குறைவாக இருந்தால் உடல் பலவீனம், எலும்பு வலி, தசைவலி உள்ளிட்ட பல குறைபாடுகளை சந்திக்க நேரிடும்.

Read More : காலையில் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடலாமா..? சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் என தகவல்..!

 ஒருவர் அடிக்கடி சோர்வு, பலவீனம், தசை வலி, மூட்டு வலி அல்லது எலும்பு முறிவுகளை சந்திக்கிறார் என்றால் அவர் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கலாம். மனநிலையை சீராக வைத்திருக்கவும் இந்த வைட்டமின் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. அடிக்கடி மனஅழுத்தம் அல்லது மனசோர்வு ஏற்பட்டாலும் கூட அதற்கு உடலில் போதுமான அளவு வைட்டமின் டி இல்லாதது காரணமாக இருக்கலாம். அதே போல சரியான தூக்கம் இன்றி தவிப்பதற்கும் இந்த வைட்டமின் பற்றாக்குறை காரணமாகிறது. பெரும்பாலும் குறைந்த அளவு வைட்டமின் டி ஏற்படுத்தும் சோர்வு மற்றும் மனநிலை சிக்கல் இவை இரண்டும் இரவு தூக்கத்தை கடினமாக்குகிறது.

அதிகமாக வியர்ப்பது மற்றும் விரைவான நீரிழப்பு உள்ளிட்ட சிக்கலையும் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுத்தும். தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த ஊட்டச்சத்து அவசியம். வைட்டமின் டி உடலில் போதுமான அளவு இல்லாவிட்டால் முடி உதிர்வு பிரச்சனையை சந்திக்க நேரிடும். காயங்கள் குணமாக அதிக நேரம் எடுத்து கொள்வது, அடிக்கடி தலைசுற்றல், எடை அதிகரிப்பு உள்ளிட்டவற்றுக்கும் வைட்டமின் டி குறைபாடு காரணமாகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக பெருந்தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் வைட்டமின் டி குறைபாடு கோவிட்-19 உட்பட சுவாச தொற்றுகளின் அபாயத்தை அதிகரிப்பது கண்டறியப்பட்டது.

நகர்ப்புறங்களில் குறைபாடு அதிகம்..

பொதுவாக கிராமப்புற மக்களை விட நகர்ப்புற மக்கள் வெயிலில் அலையாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்கிறார்கள். வெயிலில் விளையாடவும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வீடு அல்லது அலுவலகம் என 4 சுவர்களுக்குள் தங்கள் பொழுதை கழிக்கின்றனர். இதுவே பல நகர்ப்புற இந்தியர்கள் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட முக்கிய காரணமாக இருக்கிறது.

என்ன செய்யலாம்.?

கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட வைட்டமின் டி அளவு உடலில் இருப்பது மிகவும் முக்கியம். வைட்டமின் டி குறைபாட்டை சரி செய்ய உடலில் போதுமான வைட்டமின் டி அளவை அடைய ஒவ்வொருவரும் இலக்கு கொள்ள வேண்டும்.

கொழுப்பு நிறைந்த மீன் மற்றும் கடல் உணவுகள், மஷ்ரூம்கள், முட்டை மஞ்சள் கரு உள்ளிட்ட உணவுகளை டயட்டில் அதிகம் சேர்க்கலாம். தினமும் காலை வெயிலில் குறைந்தது அரை மணி நேரமாவது நடக்க வேண்டும். வைட்டமின் டி உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவது முக்கியம் என்றாலும் நம் உடல் மேல் போதுமான சூரிய ஒளி படுவதும் முக்கியம். எனவே மருத்துவ நிபுணர் பரிந்துரை பெற்று வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்து கொள்ளலாம்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Healthy Life, Vitamin D