’வைட்டமின் D’ குறைபாடு தசைகளை பலவீனமாக்கும் : ஆய்வில் தகவல்

உடல் உழைப்போடு உணவிலும் கவனம் செலுத்துவது உங்கள் வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக்கும் .

news18
Updated: October 31, 2019, 10:45 PM IST
’வைட்டமின் D’ குறைபாடு தசைகளை பலவீனமாக்கும் : ஆய்வில் தகவல்
’வைட்டமின் D’
news18
Updated: October 31, 2019, 10:45 PM IST
வைட்டமின் D குறைபாடு எலும்பு தசைகளை வலுவிழக்கச் செய்யும் எனவும், இந்த பாதிப்பு பதின்பருவம் முதல் முதுமை வரை தொடரும் எனவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறு வயது முதலே இதை கவனத்தில் எடுத்துக்கொள்ளாவிட்டல் முதுமையில் எலும்பு தசைகள் பலவீனமடைந்து மூட்டு வலிகள் அதிகரிக்கச் செய்யும்.

நீங்கள் என்னதான் தசைகளை வலுவாக்க உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலும் அதை பாதுகாக்க உதவும் வைட்டமின் D உடலுக்குக் கிடைத்தால்தான் அதில் பலன் உண்டு. இல்லையெனில் அதில் எந்தவித பலனும் இல்லை என்கிறது ஆய்வு. எனவே உடற்பயிற்சியோடு வைட்டமின் D சத்தையும் எடுத்துக்கொள்வது அவசியம் என்கிறது.


international journal Clinical Interventions வெளியிட்ட இந்த ஆய்வில் 4000 பேர் பங்கேற்றுள்ளனர். சிறு வயது முதலே வைட்டமின் D சத்தில் கவனம் செலுத்தாவிட்டால் 60 வயதை எட்டும்போது தசைகளின் பலவீனம் மூன்று மடங்காக அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்கிறது.

உடல் உழைப்போடு உணவிலும் கவனம் செலுத்துவது உங்கள் வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக்கும் என்கிறது அந்த ஆய்வு.

பார்க்க :

Loading...

மழைக்கால நோய்களில் இருந்து குழந்தைகளை தற்காத்துக் கொள்வது எப்படி?

First published: October 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...