ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வைட்டமின் பி12 கர்ப்பிணி பெண்களுக்கு ஏன் அவசியம்..? எந்தெந்த உணவுகளில் கிடைக்கிறது..?

வைட்டமின் பி12 கர்ப்பிணி பெண்களுக்கு ஏன் அவசியம்..? எந்தெந்த உணவுகளில் கிடைக்கிறது..?

வைட்டமின் பி12

வைட்டமின் பி12

பெண்களுக்கான இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் கர்ப்ப காலம் ஆகியவற்றுக்கு வைட்டமின் பி 12 மிக முக்கியமான சத்து ஆகும். பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் தேவைப்படும் மிக முக்கியமான வைட்டமின் ஆகும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

குழந்தை பெற்றெடுத்த புதிய தாய்மார்கள் அல்லது கர்ப்பிணி பெண்கள் போன்றோரு மிக அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களில் வைட்டமின் பி 12 சத்துக்கு முக்கிய இடம் உண்டு. இது ஒரு நுண்ணூட்டச்சத்து ஆகும். நமது உடல் தாமாக இதை உற்பத்தி செய்ய முடியாது. ஆகவே, சத்தான உணவுகள் மூலமாக நாம் இதை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை ஆற்றல் விட்டமின் என்றும் கூட குறிப்பிடுகின்றனர்.

வைட்டமின் பி 12 மூலமாக நம் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன.

* நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

* சருமம் மற்றும் கூந்தல் நலனை பாதுகாக்கிறது.

* புதிய தாய்மார்களுக்கு பிரசவ கால சோர்வை குறைக்கிறது.

* பிறவிக் குறைபாடுகளை தடுக்கும்.

* குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும்.

* எலும்பு நலனுக்கு உறுதுணையாக இருக்கும்.

* இதய நலன் காக்கிறது.

* கண்களில் வயது சார்ந்த பிரச்சனை குறைகிறது.

* சிவப்பு ரத்த அணுக்கள் உருவாக்கும்.

பெண்களில் வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள் :

* ஆற்றல் இழப்பு, சோர்வு மற்றும் மனக்கவலை.

* நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, நோய்த்தொற்றுக்கு எதிரான சக்தி குறைவு.

* வாய்ப் பகுதியில் புண், நாக்கு மற்றும் வாய் பகுதிகளில் பிளவுகள்.

* ஹைப்பர்பிக்மெண்டேசன், கருவளையங்கள் உள்ளிட்ட சரும பிரச்சனைகள்.

* செரிமானக் கோளாறுகள் மற்றும் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வயிறு உப்புச பிரச்சனைகள்.

* தூக்கமின்மை அல்லது அதிக தூக்கம், உடலில் எரிச்சல் உணர்வு, அதிக வலி, பார்வை குறைபாடு, குழப்பம் மற்றும் ஞாபகத் திறன் இழப்பு, ரத்த சோகை

யார் யாரெல்லாம் கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்ய கூடாது..?

மகளிர் நலனுக்கு மிக முக்கியம் :

பெண்களுக்கான இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் கர்ப்ப காலம் ஆகியவற்றுக்கு வைட்டமின் பி 12 மிக முக்கியமான சத்து ஆகும். பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் தேவைப்படும் மிக முக்கியமான வைட்டமின் ஆகும். இது உடலுக்கு நல்ல ஆற்றலை கொடுக்கும். கருவில் வளரும் குழந்தைகளுக்கு நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகளை தடுக்கும்.

வைட்டமின் பி 12 சத்து கொண்ட உணவுகள் :

கர்ப்ப காலத்தில் வைட்டமின் பி 12 சத்து கொண்ட உணவை பெண்கள் அதிகம் உட்கொள்ள வேண்டும். முட்டையின் மஞ்சள் கரு, டுனா, சால்மன் மற்றும் கானாங்கெழுத்தி போன்ற மீன்கள் மற்றும் இறைச்சியில் கிடைக்கும் கல்லீரல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக, ஆட்டுப்பால் மற்றும் பசுந்தயிர் போன்றவற்றிலும் வைட்டமின் பி 12 சத்து மிகுதியாக உண்டு.

வயிறு நலனுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இல்லையேல் வைட்டமின் பி 12 சத்து உடலில் உறிஞ்சாமல் போய்விடும். மெட்பார்மின் மற்றும் ஆண்டசிட் மாத்திரைகளின் நீண்ட கால பயன்பாடு காரணமாகவும் வைட்டமின் பி 12 குறைபாடு ஏற்படும்.

First published:

Tags: Pregnancy care, Pregnancy diet, Vitamin B12