உடலை ஆரோக்கியமாக பராமரிப்பது, நோய் தொற்றைத் தடுப்பது, எலும்புகளை வலுப்படுத்துவது, காயங்களை விரைவாக குணப்படுத்துவது போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்கு வைட்டமின்கள் முக்கியமானவையாக உள்ளது. குறிப்பாக வைட்டமின் பி12 மூளை மற்றும் நரம்பு அமைப்பின் இயல்பான செயல்பாட்டிற்கும், ரத்த உற்பத்திக்கும் உதவுகிறது. உடலுக்குத் தேவையான அளவு வைட்டமின் பி12 கிடைக்காவிட்டால், மூளை மற்றும் நரம்பு மண்டல பிரச்சனைகள், ரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படக்கூடும்.
வைட்டமின் பி12 அவசியமானதா..?
வைட்டமின் பி12, நீரில் கரைக்கூடியது. இந்த வைட்டமின் நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், மரபணுக்கள் (டிஎன்ஏ) மற்றும் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. உடலுக்குத் தேவையான அளவு வைட்டமின் பி12 கிடைக்கவில்லை என்பதை சில அறிகுறிகள் மூலமாக எளிதில் கண்டறிய முடியும்.
காலை எழும் போது தோன்றும் அறிகுறிகள்:
பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நர்சிங் வெளியிட்டுள்ள கணக்கெடுப்பின் படி, 7 ஆயிரம் வைட்டன் மி பற்றாக்குறை உள்ள நோயாளிகளிடம் சோர்வு என்பது பொதுவான அறிகுறியாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கணக்கிடப்பில் பங்கேற்ற 99 சதவீதம் பேர் காலையில் எழும்போது மிகுந்த சோர்வுடன் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காலை எழும் போதுதே சுறுசுறுப்பாக இல்லாமல், சோர்வாக காணப்படுவது வைட்டபின் பி12 பற்றாக்குறையின் முதன்மையான அறிகுறி என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வேறு வகையான அறிகுறிகள் என்னென்ன..?
யுனைடெட் கிங்டமின் தேசிய சுகாதார சேவைகள் (NHS) அமைப்பு சோர்வைத் தவிர பிற அறிகுறிகளை பட்டியலிட்டுள்ளது. அவை,
- சோர்வு அல்லது உச்சகட்ட அசதி
- மூச்சுத் திணறல்
- தலைவலி மற்றும் தலைச்சுற்றல்
- தோல் நிறம் வெளிறிப்போவது
- இதயத் துடிப்பு
- இரைப்பை குடல் பிரச்சினைகள்
- கவனம் செலுத்துவதில் சிரமம் ஆகியன ஆகும்.
உடல் அறிகுறிகளை வைத்தே நோய்களை கண்டறியலாம் - எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்!
வைட்டமின் பி12 பற்றாக்குறையை கண்டறிவது எப்படி..?
நமது உடலில் வைட்டமின் பி12 பற்றாக்குறை இருப்பதை ரத்தம் அல்லது சிறுநீர் பரிசோதனை மூலமாக உறுதி செய்யலாம். ஒருவருக்கு ஏற்படக்கூடிய அறிகுறிகளைப் பொறுத்து என்ன மாதிரியான ரத்தப்பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என மருந்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ரத்த பரிசோதனையில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக உள்ளதா? அல்லது ரத்த சிவப்பணுக்களின் அளவு இயல்பை விட பெரியதாக உள்ளதா? என்பதைப் பொறுத்து முடிவை அறிந்து கொள்ளலாம்.
வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள்:
வைட்டமின் பி12 சத்தை உடலால் இயற்கையாகவே உருவாக்க முடியாது என்பதால், நாம் உண்ணும் உணவில் இருந்து மட்டுமே பெற முடியும். மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, ஹாம், கோழி, ஆட்டுக்குட்டி, மட்டி, நண்டு, பால் பொருட்கள், பாலாடைக்கட்டி மற்றும் தயிர் மற்றும் முட்டைகள் செறிவூட்டப்பட்ட தானியங்கள் வைட்டமின் பி12-யின் சிறந்த மூலங்களாக உள்ளன. சைவ பிரியர்கள் வைட்டமின் பி12 அடங்கியுள்ள சைவ உணவுகள் அல்லது சப்ளிமெண்ட்கள் தொடர்பாக மருத்துவரை கலந்தாலோசித்து முடிவெடுக்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vitamin B12, Vitamin Deficiancy