உலக நாயகன் நடிகர் கமல்ஹாஸனின் மகளான நடிகை ஸ்ருதி ஹாசன் எப்போதுமே தனது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் வெளிப்படையாக இருக்க கூடியவர். சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.
சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாவில் பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் உள்ளிட்ட சிக்கல்களுடனான தனது போராட்டம் பற்றிய தகவல்களை ஷேர் செய்து இருக்கிறார். இதன் மூலம் மனநலம் மற்றும் பிற உடல் உபாதைகள் பற்றி வெளிப்படையாகப் பேசும் பிரபலங்களின் பட்டியலில் இணைந்து உள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன். PCOS என்பது ஒரு ஹார்மோன் நிலை சிறிய நீர்க்கட்டிகளை ஏற்படுத்துகிறது. கருவுறாமை மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் சிக்கல், உடல் பருமன் உள்ளிட்ட பல அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
அதே நேரம் எண்டோமெட்ரியோசிஸ் என்பது பொதுவாக கருப்பையை இணைக்கும் திசு கருப்பைக்கு வெளியே வளரும் ஒரு கோளாறு ஆகும். கருப்பைகள், ஃபலோபியன் குழாய்கள் அல்லது குடல்களில் திசுக்கள் இருக்கலாம். இதனிடையே சமீபத்திய இன்ஸ்டா போஸ்ட்டில் ஜிம்மில் தீவிர வொர்கவுட்ஸ் செய்யும் வீடியோவை ஷேர் செய்து சரியான உணவு மற்றும் உடலுக்கு போதுமான ஓய்வு கொடுப்பதன் மூலம் ஹார்மோன் கோளாறை கையாள்வதாக கூறி இருக்கிறார்.ஆரோக்கியமான உணவு, நல்ல தூக்கம் மற்றும் வொர்க்வுட்ஸ்களை அனுபவித்து செய்ய வேண்டும்" என்றும் வலியுறுத்தினார். தனது கதையை ரசிகர்கள் மற்றும் ஃபாலோயர்ஸ்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
அவர் ஷேர் செய்துள்ள வீடியோவில் ஸ்போர்ட்ஸ் கியரில் காணப்படுகிறார். டிரெட்மில், சிட் அப்ஸ், புல் அப்ஸ், புஷ் அப்ஸ், மவுண்டைன் கிளிம்ப்ஸ், ஏபி க்ரஞ்ச்ஸ், சில யோகா ஆசனங்களுடன் டம்பெல்ஸ் தூக்குதல் போன்ற கடும் உடற்பயிற்சிகளையும் செய்கிறார். தன்னுடைய போஸ்ட்டில், " பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் உள்ளிட்ட மோசமான ஹார்மோன் பிரச்சனைகளை நான் எதிர்கொள்கிறேன் என்றார்.
கோடை காலத்திற்கு ஏற்ற பிரா வகைகள் என்ன..? எவ்வாறு தேர்ந்தெடுப்பது..?
இது ஒரு "கடினமான" சூழல் தான் என்பதை ஒப்பு கொண்ட ஸ்ருதி, இது போன்ற பிரச்சனைகள் "இயற்கையானது" என்பதை ஏற்று கொண்டதாக கூறினார். இது சமநிலையின்மை மற்றும் வளர்சிதை மாற்றச் சவால்களுடன் கூடிய இந்நிலைகள் ஒரு கடின போராட்டம் என பெண்களுக்குத் தெரியும். ஆனால் அதை ஒரு போராட்டமாக பார்ப்பதற்குப் பதிலாக என் உடல் அதன் சிறந்ததைச் செய்யும் ஒரு இயற்கையான இயக்கமாக ஏற்று கொள்கிறேன்.
சரியாக சாப்பிடுவது, நன்றாக தூங்குவது, என் வொர்க்அவுட்டை ரசித்து செய்வது உள்ளிட்டவற்றை சரியாக செய்வதை நன்றாக உணர்கிறேன். எனது உடல் இப்போது பர்ஃபெக்டாக இல்லை என்றாலும் என் இதயம் நிறைவாக இருக்கிறது. ஆரோக்கியமாக இருங்கள் மகிழ்ச்சியாக இருங்கள் மற்றும் அந்த மகிழ்ச்சியான ஹார்மோன்கள் ஓடட்டும் !!! இதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: PCOS, Shruthihassan