முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Hibiscus Tea | செம்பருத்தி டீ பற்றி இதுவரை அறிந்திராத அரிய நன்மைகள்..! தயாரிக்கும் முறை இதோ!

Hibiscus Tea | செம்பருத்தி டீ பற்றி இதுவரை அறிந்திராத அரிய நன்மைகள்..! தயாரிக்கும் முறை இதோ!

சருமத்திற்கு மட்டுமின்றி கூந்தல் ஆரோக்கியத்திற்கும் செம்பருத்தி இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

சருமத்திற்கு மட்டுமின்றி கூந்தல் ஆரோக்கியத்திற்கும் செம்பருத்தி இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

சருமத்திற்கு மட்டுமின்றி கூந்தல் ஆரோக்கியத்திற்கும் செம்பருத்தி இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

  • Last Updated :

செம்பருத்தி பூக்கள் மற்றும் அதன் இலைகளில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சரும பொலிவு மற்றும் அடர்த்தியான கூந்தலை பெறவும் உதவுகிறது. செம்பருத்தி பூக்களை வெளிப்புறங்களில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை விட, அதனை சாப்பிடுவது கூடுதல் நன்மைகளை தருகிறது. குறிப்பாக தேநீர் வடிவில் உட்கொள்ளும்போது சிறந்த பலன்களை தரும். செம்பருத்தி தேநீர் தயார் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

செம்பருத்தி பூக்கள் - 5

தண்ணீர் - தேவையான அளவு

புதினா இலைகள் - 4

எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

தேன் - சுவைக்கேற்ப

செம்பருத்தி தேநீர் தயாரிப்பது எப்படி?

முதலில், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அடுப்பில் வைக்கவும். பின்னர் செம்பருத்தி பூக்களை அதில் போடவும். தேநீரின் நிறம் சிவப்பு நிறமாக மாறும் வரை சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இதனுடன் புதினா இலைகளை போட்டு நன்கு கொதிக்கவைத்து அதை வடிகட்டி எடுத்துக்கொள்ளலாம். இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் ருசிக்கு தேன் சேர்க்கலாம். கோப்பையின் மேல் அழகுபடுத்த எலுமிச்சை துண்டுகள் மற்றும் புதினா இலைகளை வைக்கலாம். மேலும் விருப்பம் இருந்தால் இதனுடன் கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து அருந்தலாம்.

Must Read | சியா விதைகளா? சப்ஜா விதைகளா?- உடல் எடையை எது விரைவாக குறைக்க உதவும்?

செம்பருத்தி தேநீரின் நன்மைகள் :

செம்பருத்தி தேநீர் உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மைகளை நீக்குவது மட்டுமின்றி, கொலாஜன் உற்பத்தியையும் மேம்படுத்துகிறது. இதனால் உங்கள் சருமம் பொலிவாகும்.

செம்பருத்தி மலர்களால் தயார் செய்யப்பட்ட தேநீரை அருந்துவதால், உங்கள் உடலில் உள்ள நரம்புகளின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் உங்கள் சருமம் என்றும் இளமையாகவே காணப்படும்.

செம்பருத்தி வைட்டமின் பி மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது, இது சருமத்தில் நச்சுகள் சேராமல் தடுக்கிறது. இதனால் உங்கள் சருமத்தில் பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படுகிறது.

சருமத்திற்கு மட்டுமின்றி கூந்தல் ஆரோக்கியத்திற்கும் செம்பருத்தி இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இந்த தேநீரை தொடர்ந்து அருந்தி வந்தால் இதிலுள்ள அமினோ அமிலங்கள் உங்கள் முடியின் வேர்களுக்கு வலிமையை தருகிறது. இதனால் முடி உதிர்வு பிரச்னை இருப்பவர்கள் இந்த தேநீரை தாராளமாக அருந்தலாம்.

தினமும் காலையில் ஒரு கப் செம்பருத்தி தேநீர் அருந்தினால், அடர்த்தியான மற்றும் கருமையான கூந்தல் கிடைக்கும். இளநரை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் செம்பருத்தி மலர்களை சாப்பிடுவது நல்ல பலன் தரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீங்கள் பொடுகு பிரச்சனையால் அவதிப்பட்டால் செம்பருத்தி மலர்களை கொதிக்க வைத்த தண்ணீரை கொண்டு தலை குளித்து வரலாம். இது உச்சந்தலையில் இருந்து முழுமையாக சுத்தம் செய்கிறது. இதற்கு முதலில் தேவையான அளவு தண்ணீரை எடுத்து அதில் சில செம்பருத்தி மலர்களை போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆறியபின்னர் அந்த தண்ணீரை கொண்டு முடியை அலசி வரலாம். இதனால் உங்கள் தலையில் உள்ள பொடுகு படிப்படியாக குறைந்துவிடும்.

First published:

Tags: Healthy Lifestyle, Hibiscus, Tea