Home /News /lifestyle /

காய்கறிகளை பயன்படுத்தி ஆணுறைகள் தயாரிப்பு... புது முயற்சிக்கு அதிக வரவேற்பு...

காய்கறிகளை பயன்படுத்தி ஆணுறைகள் தயாரிப்பு... புது முயற்சிக்கு அதிக வரவேற்பு...

ஆணுறை

ஆணுறை

சீமை சுரைக்காய், பிளம், கத்தரிக்காய், வெங்காயம் மற்றும் அவகேடோ பழ விதை போன்ற பல வகைகள் இதில் உள்ளன. மேலும் இவற்றின் பேக்கேஜிங் மிக சிறப்பான முறையில் செய்யப்படுகிறது.

பல வகையான காண்டம்களை பற்றி கேள்விப்பட்டிருப்போம். சாக்லேட் வாசனை கொண்ட காண்டம் முதல் ஸ்ட்ராபெரி வாசனை கொண்ட காண்டம் வரை கடைகளில் விற்கப்பட்டு வருகிறது. இவற்றில் புதுமையையும், சுற்றுசூழலுக்கு பாதுகாப்பையும் தர கூடிய புதுவித காண்டம் ஒன்றை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளனர்.

காய்கறிகளின் மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த காண்டம்கள் புதிய மாற்றத்தை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்டுகிறது. இதன் முக்கிய நோக்கம், மக்கும் தன்மை கொண்டது என்பதும், நீடித்து பயன்படுத்த கூடும் என்பதுமே.. ஆணுறைகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவது மற்றும் பசுமையான வகையில் இதை மேம்படுத்துவது ஆகிய இரண்டும் சேர்ந்த நோக்கத்தால் உருவானது தான் இந்த புதிய வெஜிடபிள் காண்டம்கள்."தி ஹார்டிகல்ச்சுரல் சொசைட்டி" மற்றும் ரிலேட் தலைமையிலான அமைப்பு தான் இந்த காய்கறி மூலப்பொருட்களை கொண்டு தயாரித்த காண்டம்களை பாதுகாப்பான உடலுறவுக்கான ஒரு தனித்துவமான அணுகுமுறையாக பரிந்துரைக்கிறது.

இந்த அமைப்பு பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு ஆரோக்கியமான ஆணுறைகளை தயாரித்துள்ளனர். சீமை சுரைக்காய், பிளம், கத்தரிக்காய், வெங்காயம் மற்றும் அவகேடோ பழ விதை போன்ற பல வகைகள் இதில் உள்ளன. மேலும் இவற்றின் பேக்கேஜிங் மிக சிறப்பான முறையில் செய்யப்படுகிறது. பிரிட்டனில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பால்வினை நோய்கள் பரவுவது அதிகரித்துள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது போன்ற நோய்களின் தடுப்புக்கான பல்வேறு வழிகள் கிடைத்தாலும், ஆணுறைகளை பயன்படுத்துவது என்பது தொடர்ச்சியான செயலாக இருப்பதில்லை.



ஆணுறைகள் பால்வினை நோய்களின் பரவலை தடுக்க கூடிய மிகவும் முக்கியமான காரணியாக உள்ளது. நிரந்தர கருத்தடை முறை மற்றும் அவசரகால கருத்தடை மாத்திரை ஆகிய வழிகள் இருந்தாலும் ஆணுறைகளை பயன்படுத்துவது தான் மிகவும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான வழியாக இருக்கும். கடந்த காலங்களில் உடலுறவின் போது ஆணுறைகளை பயன்படுத்தவில்லை என்று 52 சதவீதம் பேர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

Female Condom : பெண்ணுறை பயன்பாடு பற்றி தெரியுமா..? முழுமையான தகவல்கள் இங்கே...

2020-இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் ஒரு மாதத்திற்கு ஒரு முறை அல்லது அதற்கு மேல் மட்டுமே உடலுறவு வைத்து கொள்வதாக பணக்காரர்கள் கூறியுள்ளனர். இருப்பினும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் கடந்த 6 மாதங்களில் ஆணுறை பயன்படுத்தவில்லை என்றும், கடந்த 10 ஆண்டுகளில் இந்த வயதினருக்கு பால்வினை நோய்கள் அதிகரித்து வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தங்களது 65 ஆண்டுகளில் 38 சதவீதம் பேர் பாதுகாப்பான உடலுறவு பற்றி விவாதிப்பதைத் தவிர்த்து வருவதாகவும் இதில் தெரிவித்து உள்ளனர்.



பால்வினை நோய்களை தடுக்க காண்டம் போன்ற ஆரோக்கியமான வழிகளை பின்பற்றுவது தான் சிறந்த முறை என்றும், புதிய காய்கறி மூலப்பொருட்கள் மூலம் தயாரித்த காண்டம்களை பயன்படுத்தி மேற்கொள்வது மேலும் சிறந்தது என்றும் இந்த ஆய்வு குழுவினர் கூறியுள்ளனர். எது எப்படியோ, உடலுறவு கொள்ளும்போது பாதுகாப்பான வழிகளை பின்பற்றுவது என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Condom

அடுத்த செய்தி