முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவரா நீங்கள்? உங்களுக்கு இந்த பிரச்சனை வரலாம்!

சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவரா நீங்கள்? உங்களுக்கு இந்த பிரச்சனை வரலாம்!

மாதிரி படம்

மாதிரி படம்

அசைவ உணவை விட சைவ உணவு மிகவும் ஆரோக்கியமானது என்றும், சைவ உணவை தொடர்ந்து எடுத்து வருவது உடலை பலவீனமாக்கும் என்றும் ஆய்வு கூறுகிறது.

  • Last Updated :

சைவ உணவு உடலுக்கு நல்லதா அல்லது அசைவ உணவு உடலுக்கு நல்லதா என்ற விவாதம் பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டே தான் வருகின்றன. அசைவ உணவை விட சைவ உணவு மிகவும் ஆரோக்கியமானது என்றும், சைவ உணவை தொடர்ந்து எடுத்து வருவது உடலை பலவீனமாக்கும் என்றும் வெவேறு ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய ஆய்வு முடிவு ஒன்றின் படி, சைவ உணவை உட்கொள்ளும் மக்கள் மோசமான எலும்பு ஆரோக்கியத்தை கொண்டிருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.சைவ உணவு மற்றும் கலப்பு உணவைப் பின்பற்றும் மக்களின் எலும்பு ஆரோக்கியம், இந்த புதிய ஆய்வில் குதிகால் எலும்பின் அல்ட்ராசவுண்ட் அளவீடு மூலம் தீர்மானிக்கப்பட்டது.

ஆய்வு முடிவில் அசைவம் உள்ளிட்ட கலப்பு உணவை சாப்பிடுபவர்களுடன் ஒப்பிடும் போது, சைவ உணவைப் பின்பற்றுபவர்களுக்கு குறைந்த அல்ட்ராசவுண்ட் மதிப்புகள் இருப்பதைக் காட்டியது. இது மோசமான எலும்பு ஆரோக்கியத்தை குறிக்கிறது.

ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஜெர்மன் பெடரல் இன்ஸ்டிடியூட்டின் ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரியாஸ் ஹென்சல் வெளியிட்டுள்ள இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், " சைவ உணவு பெரும்பாலும் ஆரோக்கியமானவையாக கருதப்படுகிறது. எவ்வாறாயினும் சைவ உணவானது எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதை எங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன" என்று தெரிவித்துள்ளார். இந்த ஆய்வுக்காக, 36 சைவ உணவை பின்பற்றுபவர்கள், 36 கலப்பு உணவு முறையை பின்பற்றுபவர்கள் என மொத்தம் 72 பேர் பயன்படுத்தப்பட்டனர்.

நோய்களில் இருந்து காக்கும் கொய்யா.. அதிகம் சாப்பிட்டால் வரும் ஆபத்துகள் பற்றித் தெரியுமா?

பங்கேற்பாளர்களின் வயது, புகைப்பழக்கம், கல்வி, உடல் நிறை குறியீட்டெண், உடல் செயல்பாடு மற்றும் மது பழக்கம் பற்றிய தகவல்களும் சேகரிக்கப்பட்டன. ஆய்வில் கலந்துகொண்ட அனைத்து பங்கேற்பாளர்களின் குதிகால் எலும்பில், அல்ட்ராசவுண்ட் அளவீடுகளைப் பயன்படுத்தி அவர்களின் எலும்பு ஆரோக்கியமும் மதிப்பிடப்பட்டது.

எலும்பு ஆரோக்கியத்தில் ஊட்டச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே ஒரு புள்ளிவிவர மாதிரியைப் பயன்படுத்தி, 28 ஊட்டச்சத்து மற்றும் எலும்பு தொடர்பான அளவுருக்கள் ரத்தம் அல்லது சிறுநீரில் இருந்து எலும்பு ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 12 பயோமார்கர்ஸ் வடிவத்தை ஆராய்ச்சி குழுவால் அடையாளம் காண முடிந்தது.

மேலும் முறையே வைட்டமின்கள் ஏ மற்றும் பி 6, அமினோ அமிலங்கள் லைசின் மற்றும் லுசின், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், செலினோபுரோட்டீன் பி, அயோடின், தைராய்டு-தூண்டுதல் ஹார்மோன், கால்சியம், மெக்னீசியம் மற்றும் ஒரு-க்ளோத்தோ புரதம் ஆகியவை எலும்பு ஆரோக்கியத்துடன் சாதகமாக தொடர்புடையவை என்றும் இது காட்டியது.

top videos

    மாறாக, FGF23 23 என்ற ஹார்மோனின் குறைந்த செறிவுகள் இந்த வடிவத்தில் அதிக அல்ட்ராசவுண்ட் மட்டங்களில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைவ உணவு முறை என்பது நல்ல உணவு முறை என்றாலும் இதனால் பல்வேறு சத்து குறைபாடுகள் ஏற்படுவதாக ஆரய்ச்சியாளர்கள் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Bone health, Vegan diet