ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Vaginal Yeast Infection : குழந்தைகளுக்கு பிறப்புறுப்பில் ஏற்படும் பூஞ்சைத் தொற்று : அறிகுறிகளும்... சரி செய்யும் வழிகளும்...

Vaginal Yeast Infection : குழந்தைகளுக்கு பிறப்புறுப்பில் ஏற்படும் பூஞ்சைத் தொற்று : அறிகுறிகளும்... சரி செய்யும் வழிகளும்...

பூஞ்சைத் தொற்று

பூஞ்சைத் தொற்று

வஜைனால் ஈஸ்ட் இன்ஃபெக்ஷன் என்று கூறப்படும் பிறப்புறுப்பில் பூஞ்சை தொற்று பெண்களையே அதிகம் பாதிக்கும், இதில் இளம் வயது குழந்தைகளும் அடங்குவர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஈஸ்ட் இன்பெக்ஷன் என்றும் கூறப்படும் பூஞ்சைத் தொற்று பொதுவாக பலருக்கும் ஏற்படக்கூடிய தொற்று தான். உடலில் இயற்கையாகவே ஈரப்பதமாக அல்லது பிசுபிசுப்பாக இருக்கும் இடங்களில் ஈஸ்ட் தொற்று ஏற்படும். வஜைனால் ஈஸ்ட் இன்ஃபெக்ஷன் என்று கூறப்படும் பிறப்புறுப்பில் பூஞ்சை தொற்று பெண்களையே அதிகம் பாதிக்கும், இதில் இளம் வயது குழந்தைகளும் அடங்குவர். குழந்தைகளுக்கு ஈஸ்ட் இன்ஃபெக்ஷன் ஏற்படும் காரணாம் மற்றும் தீர்வுகள் பற்றி பார்க்கலாம்.

கேண்டிடா என்ற ஒரு ஃபாங்க்ஸ் மூலமாகத்தான் பிறப்புறுப்பில் ஈஸ்ட் இன்ஃபெக்ஷன் ஏற்படுகிறது. பாக்டீரியா போலவே நம் உடலிலும் ஒரு சில குறிப்பிட்ட வகையான பூஞ்சைகள் உயிர் வாழ்கின்றன. உதாரணமாக சருமம், வாய் மற்றும் உணவுக்குழாய் ஆகிய பகுதிகளில். பெரும்பாலான சமயங்களில் உடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் கேண்டிடாவின் அளவை அதிகரிக்காமல் கட்டுப்படுத்திவிடும்.

ஒரு கட்டத்தில் பாக்டீரியா எண்ணிக்கையை விட கேன்டிடா அதிகமாகும் பொழுது பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. பெண்களை பொறுத்தவரை மாதவிடாய்க்கு முன்னும் பின்னும் பூஞ்சை தொற்று ஏற்படக்கூடிய சாத்தியங்கள் அதிகம். அதே நேரத்தில், இளம் குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கு இந்த தொற்று ஏற்படும்.

பிறப்புறுப்பு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சிவந்து போதல், எரிச்சல், சிறுநீர் வெளியேற்றம் மிகவும் எரிச்சலாக அல்லது வலியுடன் இருப்பது, அரிப்பு, மற்றும் வெள்ளை நிறத்தில் அடர்த்தியான திரவம் வெளியேற்றம் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

இளம் குழந்தைகளில் ஈஸ்ட் இன்பெக்ஷன் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன :

டயாப்பர் பயன்பாடு : மேலே குறிப்பிடாது போல, ஈரப்பதமான இடங்களில் பூஞ்சை எளிதாக வளரும். குழந்தைக்கு டயாப்பர் மாற்றாமல் அதிக நேரம் ஈரத்திலேயே இருந்தால், எளிதில் ஈஸ்ட் இன்பெக்ஷன் ஏற்பட்டுவிடும்.

கர்ப்ப காலத்தில் இந்த தொற்றுகளால் பாதிக்கப்பட்டால் குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறக்கக் கூடும்..!

ஆன்டிபையாட்டிக்ஸ் : குறிப்பிட்ட நோய் அல்லது குறைபாட்டுக்காகத் தான் ஆன்டிபையாட்டிக்ஸ் பரிந்துரை செய்யப்படுகிறது என்றாலும், இந்த மருந்து உடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களைக் கூட அழித்து விடும். பாக்டீரியா இல்லையென்றால், ஃபங்கஸ் வளரும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் டயாப்பர் ராஷ் மற்றும் ஈஸ்ட் இன்பெக்ஷனுக்கு இடையே உள்ள வித்தியாசத்தைத் தெரிந்து கொள்ள வேண்டியது சரியான சிகிச்சை பெற உதவும். டயாப்பர் ராஷ் பொறுத்தவரை, சிவப்பு நிறத்தில் கோடுகள், புள்ளிகள் இருக்கும். எண்ணெய் அல்லது ராஷ் கிரீம் தடவினாலே பெரும்பாலும் குறைந்து விடும். குழந்தையும் எரிச்சலாக உணராது.

சிறுமிகளுக்கு ஈஸ்ட் இன்பெக்ஷன் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன:

* மிகவும் இறுக்கமான உள்ளாடைகள் அல்லது மேலாடைகள் அணியும் போது, தேவையான காற்றோட்டம் இல்லாமல், வியர்வையும் வெப்பமும் வெளியேறாது.

* ஆன்டிபயாட்டிக் மருந்து சாப்பிடுவது

* தீவிரமான உடல் நலக் குறைபாடு ஏதேனும் இருந்தால், அதற்கான மருந்துகள் உடலின் இயற்கையான ஆற்றலை குறைத்து பூஞ்சை வளர்ச்சியை ஊக்குவிக்கும்

* சர்க்கரை நோய் அல்லது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், எளிதில் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படலாம்

* உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்

பூஞ்சைத் தொற்றுக்கான சிகிச்சைகள் என்ன :

இளம் குழந்தைகளில் இன்பெக்ஷன் இருப்பதாக சந்தேகித்தால் உடனடியாக நீங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளோடு பிறப்புறுப்பில் இருந்து வாடை வீசினால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஆன்டி ஃபங்கஸ் எனப்படும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் உள்ளன. இவை மருத்துவரின் பரிந்துரையோடு தான் குழந்தைக்கு வழங்க வேண்டும்.

பூஞ்சை தொற்று பெரிய சக அசௌகரியத்தை ஏற்படுத்தாமல் இருக்க, வெதுவெதுப்பான நீரில் மைல்டான சோப்பு பயன்படுத்தி குழந்தையை குளிப்பாட்டி விட்டு, நன்றாக துடைக்க வேண்டும். குழந்தை எரிச்சலாக உணரும் இடங்களில் ஈரமான, குளிர்ந்த துணியை வைக்கலாம்.

First published:

Tags: Kids Care, Kids Health, Yeast Infection