Home /News /lifestyle /

பிறப்புறுப்பில் சோப்பு பயன்பாடு முதல் ஷேவிங் வரை... சுகாதரம் குறித்த கட்டுக்கதைகளும்..உண்மைகளும்..!

பிறப்புறுப்பில் சோப்பு பயன்பாடு முதல் ஷேவிங் வரை... சுகாதரம் குறித்த கட்டுக்கதைகளும்..உண்மைகளும்..!

பிறப்புறுப்பு சுகாதாரம்

பிறப்புறுப்பு சுகாதாரம்

பாலியல் கல்வி எல்லாம் தேவையற்ற ஒன்று என்று கருதும்  சமூகத்தின் ஒரு பகுதியாக நாம் வாழந்து கொண்டிருக்கிறோம். யோனி (பெண்களின் பிறப்புறுப்பு) பற்றி பேசவே பெரும்பாலான மக்கள் தயங்குகிறார்கள்.  

பாலியல் கல்வி எல்லாம் தேவையற்ற ஒன்று என்று கருதும் சமூகத்தின் ஒரு பகுதியாக நாம் வாழந்து கொண்டிருக்கிறோம். யோனி (பெண்களின் பிறப்புறுப்பு) பற்றி பேசவே பெரும்பாலான மக்கள் தயங்குகிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக யோனி பற்றி விவாதிப்பது மற்றும் வெளிப்படையாக பேசுவது தேவையே இல்லாத ஒன்றாக கருதும்ஒரே மாதிரியான மனநிலை கொண்ட சமூகம் தான் இங்கே காணப்படுகிறது. இந்த சூழல் பிறப்புறுப்பு சுகாதாரம் பற்றிய தவறான தகவல் மற்றும் கட்டுக்கதைகள் உருவாக்க வழிவகுத்து உள்ளது. இவற்றில் சில பாதிப்பில்லாதவை என்றாலும், பல கதைகள் பெண்களின் மன அமைதியை கெடுத்து உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே நம் சமூகத்தில் யோனி சுகாதாரம் பற்றி உலவி வரும் அனைத்து கட்டுக்கதைகளையும் நிராகரிப்பது மிகவும் முக்கியமானதாகிறது. பல கட்டுக்கதைகளை நிபுணர்களுடன் விவாதிக்கத் தொடங்கினால் மட்டுமே உடைக்க முடியும் என்றாலும், சில அடிப்படை கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பிறப்புறுப்பிலிருந்து திரவம் வெளியேறினால் STD அல்லது தொற்று உள்ளது என்று அர்த்தம்.!

யோனியில் இருந்து திரவம் மற்றும் செல்களின் கலவையானது வெளியேறும் மற்றும் இது பெண்களுக்கு பெண்கள் மாறுபடும். அப்படி திரவம் வெளியேறுவது தொற்று அல்லது பால்வினை நோய்கள் இருப்பதை குறிக்கும் என்று பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் உண்மை என்னவென்றால் பிறப்புறுப்பு வெளியேற்றம் (Vaginal dischargeVaginal discharge) முற்றிலும் இயல்பானது மற்றும் உங்களுக்கு STD அல்லது ஈஸ்ட் அல்லது பூஞ்சை என எந்த வகை தொற்றும் இருக்கிறது என்று அர்த்தம் இல்லை. வாழ்க்கை முறை, சூழல் அல்லது உடலில் ஏற்படும் தற்காலிக மாற்றங்களால் மட்டுமே இது நிகழ்கிறது. எனவே பீதியடையாமல் எதிர்ள்ளலாம் அல்லது மகளிர் மருத்துவரை பார்க்கலாம்.



அந்தரங்க பகுதியை தினமும் சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும்.!

அந்தரங்க பகுதிகளை சோப்பு பயன்படுத்தி தினமும் கழுவ வேண்டும் என்பது மிகவும் பொதுவான கட்டுக்கதை. உண்மையில், சோப்பை பயன்படுத்த கூடாது. ஏனெனில் சில நேரங்களில் அது அந்தரங்க பகுதியில் பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும். எனவே தண்ணீரில் கழுவினாலே போதும்.

நீண்ட நாட்களாக ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை கொண்ட பெண்கள் ஆபத்தான கல்லீரல் நோயால் பாதிக்கப்படலாம் - ஆய்வு

நாள் முழுவதும் ஒரே சானிட்டரி நாப்கினை பயன்படுத்த வேண்டும்.!

மாதவிடாய் நேரத்தில் ஒரு நாள் முழுவதும் ஒரே ஒரு சானிட்டரி நாப்கினை பயன்படுத்தினால் பரவாயில்லை என்று பல பெண்கள் நம்புகிறார்கள். இப்படி நம்பும் பெண்கள் தங்கள் அந்தரங்கப் பகுதி சருமத்திற்கு அதிக தீங்கு செய்து கொள்கிறார்கள். அந்தரங்க பகுதிகளை சுற்றியுள்ள சருமம் என்பது மிகவும் சென்சிட்டிவானது. எனவே ஒரு நாள் முழுவதும் ஒரே ஒரு சானிட்டரி நாப்கினை பயன்படுத்துவது அந்தரங்க பகுதியை சுற்றியுள்ள சருமத்தில் எரிச்சல் ஏற்படுத்தும்.



தொடர்ந்து ஷேவிங்.!

சந்தேகத்திற்கு இடமின்றி அந்தரங்க பகுதியில் ஷேவிங் செய்வது ஒரு நல்ல பழக்கம் தான். ஆனால் இதை தொடர்ந்து செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அந்தரங்க பகுதியில் வழக்கமாக அல்லது அடிக்கடி ஷேவிங் செய்வது தொற்று நோய்க்கான அபாயத்தை அதிகரிக்கிறது.

அந்தரங்க பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க சிறப்பு தயாரிப்புகள் பயன்படுத்த வேண்டும்.!

இல்லை, பெண்கள் தங்கள் யோனி பகுதியை சுத்தமாக வைத்திருக்க சிறப்பு தயாரிப்புகள் எதுவும் பயன்படுத்த தேவையில்லை. ஏனென்றால் சிறப்பு தயாரிப்புகள் PH லெவலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் தொற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும். எனவே கெமிக்கல் தயாரிப்புகளை கூடுமானவரை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Vaginal Hygiene, Vaginal infection

அடுத்த செய்தி