பெண்ணுறுப்பை சுத்தமாகவும், தொற்று இல்லாமலும் பராமரிக்க யோனி திரம் உதவுகிறது, இது முற்றிலும் இயற்கையானது. பெண்களின் பிறப்புறுப்பு திசுக்கள் ஆரோக்கியமாக இருக்கவும், யோனியை சுத்தமாக வைத்திருக்கவுமே இந்த திரவம் வெளியேற்றப்படுகிறது.
குறிப்பாக மாதவிடாய் காலங்களுக்கு முன்னர், பெண்ணுறுப்பில் இருந்து வெள்ளை நிற திரவம் வெளியேற்றப்படுகிறது. ஒரு ஆரோக்கியமான யோனி 3.8 முதல் 4.5 வரையிலான இயற்கையான pH அளவை கொண்டுள்ளது. மேலும் தினமும் 4 மில்லி யோனி திரவம் வெளியேறுவது இயல்பானது ஆகும்.
இந்த யோனி வெளியேற்றம் பெரும்பாலும் மாதவிடாய் சுழற்சி காலங்களில் அதன் இடத்தையும் அதன் நிலையையும் பொறுத்து வண்ணத்தை பெறுகிறது. பெண்களின் வயது, மாதவிடாய் சுழற்சி அல்லது அடிப்படை சுகாதார நிலை ஆகியவற்றைப் பொறுத்து திரவத்தின் நிறங்கள், அமைப்பு, அளவு ஆகியவை மாறுபடக்கூடும். மேலும் பிறப்பிறுப்பில் இருந்து வெளியேறும் திரவத்தின் நிறம் மாறுவது, சில நேரங்களில் ஏதாவது அறிகுறியாக கூட இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே பெண்ணுறுப்பில் இருந்து வெளியேறும் திரவத்தின் நிறத்தை வைத்து பிரச்சனைகளை கண்டறிவது எப்படி என பார்க்கலாம்...
1. தடித்த வெள்ளை திட்டுக்கள்:
மாதவிடாய் சுழற்சிக்கு முன்னதாக உங்கள் உள்ளாடையில் தடிமனான வெள்ளை நிற திட்டுக்கள் போல் யோனி திரவம் படித்திருந்தால் அதை பார்த்து பயப்பட தேவையில்லை. அவை இயல்பானது. ஆனால் வெள்ளை நிற திரவம் வெளியேறும் போது, பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு, எரிச்சல் மற்றும் சூடான உணர்வு ஏற்பட்டால் அது பூஞ்சை தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம்.
2. மஞ்சள் நிற திரவம்:
பிறப்புறுப்பில் இருந்து மஞ்சள் நிறத்தில் திரவம் வெளியேறுவது வழக்கமான நடைமுறை கிடையாது. இது பிறப்புறுப்பு பகுதியில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்பதால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
மார்பக புற்றுநோய் இருக்குமோ என சந்தேகமா..? கண்ணாடி முன் இந்த சுய பரிசோதனை செய்து பாருங்கள்...
3. பிரவுன் நிற திரவம்:
பிறப்புறுப்பில் இருந்து பிரவுன் கலரின் திரவம் வெளியேறினால், அதற்கு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி காரணமாக இருக்கலாம். மேலும் தொடர்ந்து பிரவுன் நிறத்திலான திரவம் யோனிப்பகுதியில் வெளியேறினால், அது கருப்பை அல்லது கர்ப்பப்பை புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
4. பச்சை நிற திரவம்:
பிறப்புறுப்பில் இருந்து பச்சை நிறத்திலான திரவம் வெளியேறுவது என்பது மிகவும் அசாதாரணமான உடல் நிலையை குறிக்கிறது. பெண்களுக்கு பொதுவாக பச்சை நிறத்தில் யோனி திரவம் இருக்காது என்பதால், இது பாக்டீரியா தொற்று அல்லது பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றின் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மாதவிடாய் தள்ளிப்போக மாத்திரைக்கு குட்பை சொல்லுங்க.. இந்த இயற்கை முறைகளை டிரை பண்ணுங்க
பெண்ணுறுப்பில் அரிப்பு, சிவத்து போதல், எரிச்சல் மற்றும் எரியும் உணர்வு ஆகியவற்றுடன் அடர்த்தியான, வெள்ளை, நிற திரவம் வெளியேறுவது பூஞ்சை நோய்த்தொற்றின் அறிகுறிகள் என விளக்கும் மருத்துவர்கள், யோனி திரவத்தின் வாசனை அல்லது அளவில் மாற்றம் தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என அறிவுறுத்திகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.