கர்ப்பகாலத்தில் பெண்கள் உடளவில் பல மாற்றங்களைக் சந்திக்கின்றனர். மேலும், கர்ப்பகாலத்தில் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதிலும் குறிப்பாக அவர்களின் உடல் நோய்எதிர்ப்பு சக்தி கொண்டதாக இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் பலவீனமாக இருந்தால் சில உடல் உபாதைகள் மற்றும் தொற்றுகள் ஏற்படுவதற்கான பாதிப்பு இருக்கும். அதிலும் பல பெண்கள் தங்கள் கர்ப்பகாலத்தில் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்கு (UTI) ஆளாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே கர்ப்பிணிகள் இந்த தோற்றால் ஏற்படும் அறிகுறிகள் மற்றும் அதை எவ்வாறு கையாள்வது என்பதை குறித்து விரிவாக காண்போம்.
UTI என்றால் என்ன?
சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, சிறுநீர் குழாய் ஆகியவற்றை பாதிக்கும். இந்த தொற்று பொதுவானது. சிறுநீரில் நோய் பாதிப்பு ஏற்படும் பொழுது அதனை சிறுநீர் பாதை நோய் தொற்று என்கிறோம். அநேக நேரங்களில் உணவு குழாயில் ஏற்படும் கிருமி சிறுநீர் பாதை துவாரத்தின் வழியே உள் செல்வதால் சிறுநீர் பாதை தொற்று பாதிப்பு ஏற்படுகின்றது. மேலும் பலர் தங்கள் கர்ப்ப காலத்தில் இதை அனுபவிக்க முனைகிறார்கள். இருப்பினும், இது சிகிச்சையளிக்கப்படாமல் விட்டால். இது ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கும் கருவுக்கும் ஒரு பெரிய உடல்நல ஆபத்தை ஏற்படுத்தும்.
கர்ப்பிணிப் பெண்கள் யுடிஐ பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக ஆபத்தில் உள்ளனர். அதிலும் 6 முதல் 22 வாரங்கள் வரையிலான கால இடைவெளியில், 90 சதவீத கர்ப்பிணிப் பெண்கள் சிறுநீர்க்குழாய் வளர்ச்சியை உருவாக்குகிறார்கள். இது குழந்தை பிரசவிக்கும் வரை இருக்கும். கர்ப்ப காலத்தில், கருப்பை விரிவடைகிறது. இது சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்க்குழாய்களுக்கு அழுத்தம் கொடுக்கும். சிறுநீர்குழாய் சிறுநீர்ப்பைக்கு சிறுநீரை எடுத்துச் செல்கிறது. சிறுநீர் குறைந்த அமிலத்தன்மை கொண்டதாக இருந்தாலும் கர்ப்ப காலத்தில் அதிக புரதங்கள், சர்க்கரைகள் மற்றும் ஹார்மோன்களைக் கொண்டுள்ளது. இது யுடிஐ ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கும். அதிர்ஷ்டவசமாக, இதை எளிதாக சிகிச்சையளிக்க முடியும்.
கர்ப்பகாலத்தில் ஏற்படும் UTI அறிகுறிகள் என்ன?
அறிகுறியற்ற சிறுநீர்
20 முதல் 35% கர்ப்பிணிப் பெண்கள் அறிகுறியற்ற பாக்டீரியூரியா வைரஸால் பாதிக்கப்பட்ட சிறுநீர் பாதை நோய்த்தொற்றைப் பெற முனைகிறார்கள். இது சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் முதல் பெட்டர்னல் ரீதியான வருகையின் போது அதைத் ஸ்க்ரீனிங் செய்வது அவசியம். இதுதவிர, UTI-யால் பாதிக்கப்படும் போது ஏற்படும் மிகவும் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு.
* அடிக்கடி சிறுநீர் செல்ல தோன்றும்.
* சிறுநீர் சிறிதே வெளி செல்லும்.
* சிறுநீர் துவாரம் எரியும்.
* சிலர் வெகுவாய் சோர்ந்து இருப்பர்.
* சிறுநீர் நிறம் மாறி இருக்கலாம்.
* சிறுநீரில் ரத்தம் கலந்து இருக்கலாம்.
* ஜுரம் இருக்கலாம்.
* கீழ் முதுகில் தசைபிடிப்பு.
* சிறுநீரில் துர்நாற்றம்.
மேற்கண்ட அறிகுறிகள் நீடித்தால், மேலும் சிறுநீரகங்கள் முழுவதும் பரவி பின்வரும் தீவிர அறிகுறிகளை ஏற்படுத்தும். அவை பின்வருமாறு,
* குமட்டல்
* காய்ச்சல், குளிர்
* வாந்தி
* மேல் முதுகில் வலி
கர்ப்பகாலத்தில் யுடிஐ உடன் தொடர்புடைய சிக்கல்கள் என்ன?
* குழந்தைகளில் குறைந்த பிறப்பு எடை.
* சிறுநீரக பிரச்சினைகள்.
* செப்சிஸ்
* குறைப்பிரசவம்
* உயர் இரத்த அழுத்தம்.
* இரத்த சோகை
கர்ப்ப காலங்களில் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்
UTI தொற்றை தடுப்பது எப்படி?
* ஒவ்வொரு நாளும் 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது அவசியம்.
* கேன்பெர்ரி பழச்சாறு குடிப்பது நல்லது.
* உடலுறவுக்கு முன்னும் பின்னும் சிறுநீர் கழித்தல் அவசியம்.
* சிறுநீர் வெளியேற்றும் இடத்தை நன்வு கழுவுதல்.
* பருத்தி உள்ளாடை அணியுங்கள்
* தளர்வான ஆடைகளை அணியுங்கள்.
* அடிக்கடி சிறுநீர் கழிக்கவும்
* காரமான உணவு, ஆல்கஹால், சிட்ரஸ் சாறுகள், காஃபினேட் பானங்கள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
* பிறப்புறுப்பு பகுதியை சோப்பு தேய்த்து கழுவுவதை தவிர்க்கவும்
* வழக்கமான கர்ப்ப சோதனைகளை செய்வது அவசியம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pregnancy care, Urinary Tract Infection, UTI