Home /News /lifestyle /

பெண்களின் பிறப்புறுப்பு ஆரோக்கியத்தை பாதுகாக்க புரோபயாடிக்ஸ் உணவுகள் உதவுகின்றன : ஆய்வில் தகவல்

பெண்களின் பிறப்புறுப்பு ஆரோக்கியத்தை பாதுகாக்க புரோபயாடிக்ஸ் உணவுகள் உதவுகின்றன : ஆய்வில் தகவல்

பெண்கள் நலம்

பெண்கள் நலம்

யோனியில் சுமார் 50 வகையான பாக்டீரியாக்கள் இருப்பதாக சுகாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.எனவே அதை தினசரி பராமரிப்பது பல வகையான நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.

புரோபயாடிக்ஸ் அடங்கிய உணவு பொருட்களை எடுத்து கொள்வது தற்போது அதிகரித்து வருகிறது. புரோபயாடிக்ஸ் (Probiotics) என்பது நம் உடலில் இயற்கையாக வாழும் நேரடி நன்மை பயக்கும் பாக்டீரியா அல்லது ஈஸ்ட்களின் கலவையாகும். நம் உடலில் இரு வகையான பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. ஒன்று நல்ல பாக்டீரியா மற்றொன்று கெட்ட பாக்டீரியா.

இதில் கெட்ட பாக்டீரியா நம்மை நோய்வாய்ப்படுத்தும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் புரோபயாடிக்ஸ் என்பது நமக்கு நன்மைகள் செய்ய கூடிய நுண்ணுயிர் கலந்த உணவாகும். இதை எடுத்து கொள்வது பாதுகாப்பானதாக கருதப்படுகின்றது.

ஆனால் சில அரிய சந்தர்ப்பங்களில் பாக்டீரியா-ஹோஸ்ட் தொடர்புகளையும் தேவையற்ற பக்க விளைவுகளையும் புரோபயாடிக்ஸ் ஏற்படுத்தலாம் என்றும் குறிப்பிடப்படுகிறது. உயிருள்ள நுண்ணுயிரியுணவை சரியான அளவில் மனிதர்கள் போன்ற பேருயிரிகள் சாப்பிடும் போது அந்த நுண்ணுயிர்கள், அவற்றை உட்கொள்வோருக்கு, உடல் ஆரோக்கியம் உட்பட பல பயன்களை கொடுக்கும் என்பதே நிபுணர்களின் கருத்து. புரோபயாடிக்ஸ் உணவு பொருட்களில் நம்மில் பெரும்பாலானோர் வழக்கமாக எடுத்து கொள்ளும் தயிர் அடக்கம்.இது தவிர சாஃப்ட் சீஸ், கேஃபிர் , புளிப்பு பிரெட், அசிடோபிலஸ் பால் (Acidophilus Milk), புளிப்பு ஊறுகாய், சில வகை சப்ளிமெண்ட்கள் உள்ளிட்ட இன்னும் பல உணவு பொருட்கள் இருக்கின்றன. இளமை தோற்றத்தை பராமரிக்க தோலில் பயன்படுத்தப்படுவதைத் தவிர, அஜீரண கோளாறுகள் அல்லது தொற்று நோய் தடுப்பில் புரோபயாடிக்ஸ் உணவுகள் பெரிதும் பயனளிக்கும். தவிர புரோபயாடிக்ஸ் குடலுக்கு மட்டுமல்ல, பெண்களின் யோனி ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மைகளை தர கூடியதாக இருக்கும். யோனி என்பது கழுத்துப் போன்ற கருப்பையின் கீழ்ப்பகுதிக்கும், வெளியே இருக்கும் பெண்ணுறுப்பிற்கும் இடைப்பட்ட குழாய் போன்ற பாதையாகும்.

புரியும்படி சொன்னால் யோனி குழாயில் திரவம் சுரப்பதால் தான் உடலுறவின் போது ஆணுறுப்பு உள்ளே நுழைய முடிகிறது. எனவே ஒவ்வொவரு பெண்ணுக்கும் இல்லற வாழ்வு மகிழ்ச்சிகரமானதாக இருக்க யோனி ஆரோக்கியம் இன்றியமையாத ஒன்று. ஆரோக்கியமான மற்றும் சுத்தமான யோனியை பராமரிப்பதில் புரோபயாடிக்ஸின் பங்கு தொடர்பான கவனிக்கப்பட்ட சில காரணிகளை நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர். ஹெல்த்லைனில் வெளியான ஒரு ஆய்வு கட்டுரையில், நியூயார்க் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஹெல்த் சயின்ஸ் துறையை சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் மிண்டி ஹார்ட், புரோபயாடிக்ஸின் பயன்பாடு யோனியில் pH சமநிலையை பராமரிக்க உதவுகிறது என்பதை நிரூபிக்க கடந்த சில ஆண்டுகளில் செய்யப்பட்ட ஆராய்ச்சி உதவியாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.யோனியில் சுமார் 50 வகையான பாக்டீரியாக்கள் இருப்பதாக சுகாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். அவற்றில் பல நுண்ணுயிரிகள் நன்மை பயக்கும் மற்றும் வுல்வாவை (vulva - பெண் பிறப்புறுப்பின் வெளிப்புற பகுதி) பாதுகாக்க மற்றும் எவ்வித வெளிப்புற நோய் தொற்றுகளையும் தடுக்க வேலை செய்கின்றன. ஒருவர் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ளும் போது அல்லது மாதவிடாய், சுகாதாரமற்ற சுற்றுப்புறங்கள் காரணமான ஹார்மோன் வெளிப்பாடு போன்றவற்றிற்கு ஆளாகும் நேரத்தில், இந்த பாக்டீரியாக்கள் செயல்பட்டு யோனியை பாதிப்பிலிருந்தும் பாதுகாக்கின்றன.

ஒர்க்அவுட் செய்யும்போது அணிய வேண்டிய ஸ்போர்ட்ஸ் பிராக்கள் : வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

யோனியில் நோய் தொற்று உண்டானால் போது சில அசெளகரியங்கள், துர்நாற்றம் மற்றும் அரிப்பு ஆகியவை ஏற்படும். இது பாக்டீரியா தொற்றின் அறிகுறிகளாக இருக்கலாம். இவற்றை எதிர்த்துப் போராட தயிர் போன்ற இயற்கை புரோபயாடிக்ஸ் அல்லது காப்ஸ்யூல்கள் போன்ற மெடிஸின் புரோபயாடிக்ஸ்களை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் அவசியம். பல ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட மிக முக்கியமான ஒரு ஆய்வில், புரோபயாடிக்ஸ் உணவுகளை சீராக எடுத்து கொள்ளும் பெண்களுக்கு யோனி தொற்று ஏற்படவேயில்லை எனபது கண்டறியப்பட்டது. எனவே புரோபயாடிக்ஸ்களை கணிசமான அளவில் உட்கொள்வது நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Vagina Health, Vagina hygiene, Vaginal infection

அடுத்த செய்தி